1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண் மூடிய கோபம்

Discussion in 'Stories in Regional Languages' started by mathangikkumar, Apr 3, 2011.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female


    சம்பத் '' ரமணி நட்ஸ் அண்ட் போல்ட்ஸ்'' பண்ற கம்பனியோட முதலாளி. ரொம்ப நாள் கழிச்சு பிள்ளை பொறந்ததால் அவன் பெயரிலேயே கம்பனியை

    ஆரம்பித்தார், இவர் எவ்வளவு கண்டிப்பாயிருந்தாலும் மனைவி சுகுணா வோட செல்லத்தாலே ரமணி கொஞ்சம் கொஞ்சம் கையை விட்டு போயிக் கொண்டிருப்பதை சம்பத்தால் உணர முடிந்தது.




    அன்று அவர் ஞாயிற்றுக் கிழமை ஆனதால் என்றும் போல் டிரைவர் டேவிட்டை நேராக ஸ்கூட்டியில் ஆபிசுக்கே வரச் சொல்லி விட்டார். டேவிட்டும் நேராக ஆபிஸ் வந்தான். அவன் வந்தபோது ரமணி அவசரமாக ஆபிசை விட்டு வெளியே செல்வதை டேவிட் பார்த்தான். அவன் போனதும் பியூன் முத்து சைக்கிளில் வந்தான்.சிறிது நேரத்திற்கெல்லாம் சம்பத்தும் வந்து விட்டார்.


    வழக்கம் போல் மத்யானம் ஒருமணியளவில் சம்பத் வீட்டிற்கு கிளம்பும் முன் , எதையோ தேடுவதைப் பார்த்த முத்து,
    ''என்னா சாமி தேடுறீங்கோ?'' னு கேட்டான்.


    சம்பத் ஒருபதிலும் சொல்லாமல் மும்முரமாக ஒவ்வொரு டிராயரையும் திறந்து பார்த்துக் கொண்டே , ''கொஞ்சம் பேசாம இருக்கியா?'' ன்னு சொன்னார்.


    பத்து நிமிஷத்துக்கப்புரம் சுகுணாவுக்கு செல்லில் பேசி கேட்டதும் ரொம்பவே ஆத்திரத்துடன் முத்துவைப் பார்த்து கோபமாக , ''டேய்,இங்க வச்சிருந்த மூணு லட்சத்தை எடுத்துட்டு என்கிட்டயே என்னா தேடுறீங்கன்னு கேள்வி வேறயா''


    ''நடடா , ஸ்டேசனுக்கு'' சொல்லி முத்து தலைய பிடித்து இழுத்துக்கொண்டே ஆபிசை விட்டு வெளியே வந்தார்.


    ''முத்துவோ சார் நான் எடுக்கலை சார், எனக்கு ஒண்ணும் தெரியாது '' ''என்னை விட்டுடுங்கோ சார், நான் பிள்ளை குட்டி காரன். உங்க உப்பை துண்ணு வரவன் சார்''னு எவ்ளவோ கெஞ்சியும் கேட்காமல் போலீஸுக்குப் போன் பண்ணினார்.
    போலிஸ் வரத்துக்குள் அவன் மனைவி கனகாவிற்கு விஷயம் போயி அவள் வந்து எவ்வளவோ சம்பத்திடம் மன்றாடி, கெஞ்சி பார்த்தாள்.


    சம்பத்திற்கு மெடீரியல் வாங்க வாக்கு கொடுத்தபடி இன்னைக்கு மூணு லட்சம் பணம் கட்டியாகணும். இது வரைக்கும் தொழிலில் வாக்கு தவறினது இல்லை.வீட்டிலும் இல்லை .முதல் நாள் சனிக் கிழமை கொண்டு வந்து வச்ச பணம் எங்கே போயிருக்கும் ? இதுவே அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் , தான் செய்வது தப்பா ,சரியா என்றுயோசிக்கவும் முடியாமல் அவசரப் பட்டு விட்டார்.


    கனகாவிற்கு நன்றாக தெரியும் முத்து எடுக்க வில்லை என்று, அவன் மானஸ்தன் . அவளாவது கெளரவம் பார்க்காமல் தான் வேலை செய்யும் இடத்தில் அப்பப்போ கொஞ்சம் கடன் வாங்குவோ .ஆனால் சொன்னால் சொன்னது படி டான்னு திருப்பிக் கொடுத்துடுவோ.


    போலீஸ் வந்து முத்துவை வேனில் அழைத்துக்கொண்டு போனார்கள்.
    போகும் முன் சப் இன்ஸ்பெக்டர் ,''சார் ஸ்டேஷன் வந்து ஒரு ரிட்டன் கம்ப்ளைன்ட் கொடுத்துடுங்க ,மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம் சார்'' னு சொல்லி போய் விட்டான்.


    கனகாக்கு துக்கம் தாங்கலை,அநியாயமாக தன்னோட நல்ல, ஒண்ணும் தெரியாத ,தப்பு பண்ணாத புருஷனை மாட்டிவிட்டுட்டாறேன்னு பொறுக்காம, ''சாமி'' , ''நீ நல்லா இருப்பயா'', ''போ சாமி , போ. நீங்கள் எல்லாம் பெரிய மனுசனுங்க! எங்களை மாதிரி ஏழைகளை தான் மாட்டுவீங்க'' . ''உனக்கு நல்ல சாவே கிடையாது சாமி , பாத்துண்டே இரு...நா சொல்லலே ,அந்த மாரியாத்தா சொல்றா !.''..........ன்னு மண்ணைதூக்கி வாரியிரைத்தாள்.




    இதற்குள் டேவிட் இடம் இருந்து சாவியை பலவந்தமாக செய்கையால் வாங்கி காரை வேகமாக எடுத்து காம்பௌண்டுக்குள்ளே இருந்து வெளியே கொண்டு போனார் சம்பத்.




    டேவிட்டின் செல் போன் அடிக்க ,அவன் அதைஎடுத்து பேசினதும் தான் விஷயம் தெரிந்தது . ரமணியை அன்று காலையில் தான் பணத்தைஎடுத்துக் கொண்டு மெடீரியல் வாங்க கொண்டு போகச் சொன்னதே சம்பத் என்றும் , அவன் அதனால் தான் சீக்கிரம் ஆபிஸ் வந்து ஒரு மணிக்குள் கொடுத்துவிட அவசரமாக போனான் என்று.


    இவன் போனை பேசி முடிக்கவும் , 'க்ரீச்சுன்னு' சத்தம் வரவும் டேவிட்டுக்கு எங்கேயோ மணி அடித்தது. உடனே ஓடிப் போய் பார்த்தான். சம்பத்துடைய கார் எதிரே வந்த பஸ்ஸில் மோதி காரின் முன் பாகம் நன்றாக நசுங்கி போச்சு.


    உடனே அவன் அங்கிருந்தவர்களுடைய உதவியினால் தான் யார் என்பதை சொல்லி ஆஸ்பத்தரிக்கு ஒரு ஆட்டோ பிடித்து போகும் வழியிலேயே வீட்டிற்கும் பேசி சம்பத்துடைய நிலைமையை சொன்னான் .அவர் பாதி நினவு இருந்தாலும் காலைப் பிடித்துக்கொண்டு முனகிக் கொண்டு இருந்தார்.


    'ஆர்த்தி ஹாஸ்பிடலில் 'சேர்த்து, அவருக்கு காலில்அவசர சிகிச்சை செய்து, இடுப்பில் 'பெல்விக் போன் க்ரேக்'ஆனதாலும் பதினைந்து நாள் ஹாஸ்பிடலில் இருந்து பிறகு வீட்டுக்கு வந்தாலும் ,ஆறு மாதத்துக்கு வண்டி ஓட்டக்கூடாதுன்னு கண்டிப்பாக டாக்டர் சொல்லி விட்டார்.


    இப்போ அவர் கூடவே எப்பொழுதும் அவருக்கு சப்போர்டாக முத்து தான் பணி விடை செய்கிறான்.


    ஹாஸ்பிடலில் அவருக்கு நினவு வந்ததும், ரமணியும் சுகுணாவும் நடந்ததை சொல்லி, கேசை வாபஸ் வாங்கச்சொல்லி முத்துவை வெளியே எடுத்தார்கள். அவன் மனைவியிடம் சம்பத் மன்னிப்பு கேட்டதோடல்லாமால் , அவளுக்கு பதிவ்ரதை என்று பெயர் கொடுத்ததோடல்லாமல் அவளிடம் அடுத்த முறை சாபத்தை கொஞ்சம் குறைவாகப் போடச் சொன்னார்.


    முத்துவிற்கும் சம்பளம் நிறைய கொடுத்து அவனுக்கும் ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்துள்ளார் சம்பத் .
     
    Loading...

  2. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    sambath shud hav thought twice before calling police... nicely narrated story
     
  3. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Muthu is the Hero of the story. He is a real "Pearl".

    Very nice story.

    By the way, are you form Triunelveli? The words like sami used only down south. Since I am from there, I enjoyed your writing more.

    Good day!!!!!!
     
  4. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear coffee lover
    thanks for reading my story, since you have asked , I belong to madras but I have lived in T'Veli, Chengam ,Sivaganga and Tiruppur due to my father's frequent transfers in State Bank .
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சாபத்தை கொஞ்சம் குறைவாக கொடுக்க சொல்லி....சீரியஸ் கதையை காமெடி ஆக்கிவிட்டீர்கள்..:)
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    "அவளுக்கு பதிவ்ரதை என்று பெயர் கொடுத்ததோடல்லாமல் அவளிடம் அடுத்த முறை சாபத்தை கொஞ்சம் குறைவாகப் போடச் சொன்னார்"


    I love this.. nice mathangi mam....
     

Share This Page