1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்களின் கடைசி நிமிடங்கள்........

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, May 31, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    என் எஜமான் இறந்து விட்டார்...
    நானும் இறந்துக் கொண்டிருக்கிறேன்.....

    அவர் சாவுக்கு அனைவரும்
    கண்ணீர் சிந்துகிறார்கள்
    யாராவது
    என்னை நினைத்து பார்த்தாரோ

    அழுவவர்கள்
    மனது வைத்தால்
    என்னை
    மரணப் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்
    ஒருவருக்கும் மனமில்லை

    என் எஜமாணாவது
    என்னை பதிவு செய்தாரா
    அதுவும் இல்லை

    ஐயோ சீக்கிரம்
    யாராவது என்னை காப்பாற்றுங்களேன்
    மரணம் என்னை நெருங்கிக்
    கொண்டிருக்கிறது...


    Sandhya
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிதானமாய் கடமைகள் வெறுமையாய் நிற்கும் போது
    அவலமாய் கண்களே கண் தானம் பற்றி பேசுகிறது.....
    தானத்தில் சிறந்த கண்தானம்
    புரட்டி போடும் உண்மை.விழிப்புணர்வு எத்தனை இருந்தாலும் விழிக்காமலே இருக்கிறது கோடி ஜனம் .இனியாவது விழிப்பாய் இருக்கட்டும் மற்றவர்க்கு விழியாய் ஒளியாய் வாழட்டும் .
    ஆழமான கருத்தை அருமையாய் கொடுத்த வரிகள் .நன்றி
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விழி தானம் பற்றி யோசிக்க யாருமில்லாமல் விழியே கவி சொல்ல வந்து விட்டதா??? நல்ல கருத்தைச் சொன்ன அழகு வரிகள் தோழி.

    இறந்தும், வாழ, ஒரு வழி விழிகளுக்கு இருக்கையில், அதை கட்டாயம் செய்ய வேண்டும்.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்தானம் கோடி புண்ணியம்!
    அதுவே கதறும் படி விடும் மனித சமுதாயம்
    எங்கே செல்கிறது??
    சீக்கிரமே அதை வாழ்விக்கும் முயற்சியில் நாம் இறங்குவோம்!
    கவிகள் அருமை அக்கா!
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    என் வாழ்வின் உண்மைச் சம்பவம்:

    என் தந்தை இரவு மீளா பயணத்தை,
    நான் அவர் முகம் பார்க்கும்முன்பே தொடங்கிவிட்டார்.
    காலையில் நான் அவர் அருகே, அவர் எங்கோ தொலைவில்....

    எனக்கு அழுகையோ, உணர்சிகளோ எனை ஆட்கொள்ளும் முன்பு,
    நினைவில் வந்தது அவர் ஷங்கர் நேத்ராலயாவில் பதிவு செய்து அவர்,
    என்றும் வலியுறித்திய கண் தானம் பற்றிய விஷயம் தான். கடைசி நிமிடங்களில்,
    அவர் அருகில் இருந்த அனைவரும் மறந்துவிட்டனர், அவரின் மகத்தான மனதை.....

    அதிகாலை என்பதால் நான் அழைக்க, கண் மருத்துவர்கள் உடன் வந்து என் தந்தையின் ஆசையை நிறைவேற்றினர். எனக்கும் ஒரு மன திருப்தி - கடைசி நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வில்லை எனினும், உலகத்தில் எங்கிருந்தோ அவர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் இன்றும்....

    உன்னதமான கருத்தை மிக அழகாக சொல்லிய சந்தியாவுக்கு என் வணக்கங்கள்.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    kangal evvalavu sonnalum.....athanaai neraivetru sakthi manathukku allava...evvalu padithavan aanalum ....intha visayathil avanum yosikka than seikiran,,.....
    arumayana karuthulla kavithai...

    nats...ur really great..."unga appa oru manitha neyammikka siratha manithar.........."
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sandhya, very beautiful kavithai.
    Kan dhaanam sirandhadhu enbadhai romba arumayaga kavithai moolam solli irukkeenga !!!
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    kan thaanam patriya ungal kavithai arumai sandhya ka....
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    very nice sandya,
    கண் தானத்தின் அவசியம் சொல்லும் அருமையான வரிகள் .
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    சமுதாயதிற்கு ஏற்ற கருத்து, மிக அழகாக சொல்லி இருக்கிறீற்கள் சந்தியா.
     

Share This Page