1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கணக்கு டீச்சர் !!!

Discussion in 'Posts in Regional Languages' started by ILoveTulips, Feb 22, 2011.

  1. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    நாலாம் வகுப்பு படிக்கும் மாணவியின் புலம்பல்!

    எங்க கணக்கு டீச்சருக்கு என்ன கண்டா புடிக்காது. எனக்கு எங்கம்மா உப்மா சமைச்சா கோவம் வரும். அது மாதிரி என் கணக்கு டீச்சருக்கு என்ன பாத்தா கோவம் வரும்.

    ஒரு தடவ கணக்கு டீச்சர் என்ன பாத்து கத்தினாங்க...

    "நல்லா கண்ண தொறந்து பாரு.. இது 3-ஆ ??? 8 -ஆ ???. கண்ணு தெரியுதா? இல்லையா?" னு.

    அதுவும் பாய்ஸ் முன்னால... :redface:

    அவங்க என்கிட்ட இவ்வளவு கோவப்பட்டதில்ல... "அந்த" சம்பவம் நடந்ததுக்கு அப்புறமாதான் இப்படி மாறிட்டாங்க..

    அந்த சம்பவம்:

    எங்க கணக்கு டீச்சருக்கு பல்லு எத்தலா இருக்கும். அவங்க கஷ்டப்பட்டு வாய மூடும்போது, அனுமார் மாறி இருக்காங்கன்னு பக்கத்துல இருக்குற புள்ள கிட்ட சொன்னேன்... "பெரியவங்கள அப்படி பேசக்கூடாது"ன்னு சொல்லிச்சு.:notthatway: ஆனா எனக்கு பாக்க அப்படிதான் தெரிஞ்சுது...

    எல்லாரோட பல்லும் நல்லா இருக்கும்போது இவங்களுக்கு மட்டும் ஏன் இப்படி இருக்குன்னு நான் மூணாம் வகுப்புலர்ந்தே யோசிச்சுட்டு இருந்தேன். ஒன்னும் தெரியல... :idontgetit:

    சம்பவம் நடந்த அன்னிக்கு, கணக்கு பீரியடுல நான் மொத வரிசையில உக்காந்துட்டு இருந்தேன். கணக்குல பெயில் ஆனவங்க மொத வரிசையில தான் உக்காரணும்.

    கணக்கு டீச்சர் எங்கள ஆறாம் வாய்பாடு படிக்க சொல்லிட்டு முன்னாடி சேர்ல உக்காந்துட்டு இருந்தாங்க... அப்போ பக்கத்துல இருந்த புள்ள கட்ட விரல்ல வாயிலே வச்சுட்டே படிச்சுட்டு இருந்தது..

    அப்போ டீச்சர், "ஏய் வாயில இருந்து கைய எடு. இப்படி விரல் சூப்பிட்டு இருந்தீனா பெரிய பொன்னானதும் பல்லு எத்திக்கும்", அப்படீன்னு சொன்னாங்க...

    உடனே எனக்கு மண்டையில பல்பு எரிஞ்சது. :idea பிரகாசமா அந்த பொண்ணுக்கிட திரும்பி டீச்சருக்கு சப்போர்ட் பண்ணேன்...

    "ஆமாம் புள்ள... டீச்சர் சொல்றத கேளு... பாரு அவங்களும் சின்ன வயசுல விரல் சூப்பினதாலதான் அவங்களுக்கு பல்லு இப்படி இருக்கு...". சொல்லிட்டு டீச்சர பெருமையா பாத்தேன்.

    ஆத்தாடி ... என்ன லுக்கு அது.

    டீச்சர பாத்து நடுங்கிட்டேன். நல்லா கத்திட்டு எந்திருச்சு முன்னாடி வான்னு கூப்பிட்டாங்க... நானும் டீச்சர் பக்கத்துல போய் நின்னேன். அவங்க வேகமா குண்டு பிரம்பா எடுத்து என் கைய நீட்ட சொன்னாங்க.. கச கசன்னு சத்தம் போட்டுட்டிருந்த வகுப்பே பிரம்ப பாத்ததும் கப்சிப்னு ஆய்டுச்சு.

    நான் லேசா கைய நீட்டினேன். டீச்சர் பிரம்ப ஓங்கினதும் விலுக்குன்னு கைய பின்னாடி இழுத்திட்டேன்.

    "ஏய் ஒழுங்கா நீட்டு, இல்லனா ரெண்டு அடி விழும்", னு டீச்சர் சொன்னாங்க.

    திரும்ப கைய நீட்டி, அடிக்க வரும்போது இழுத்திட்டேன். இப்படியே இன்னொரு தடவ பண்ணதும் அவங்களுக்கு ஆத்திரம் அதிகமாய்டுச்சு...

    வேகமா என்னோட கைய நல்லா அவங்க பக்கம் இழுத்து வச்சு, பிரம்ப ரெண்டு அடி தூரத்துக்கு உயர்த்தி, அடிக்க கொண்டு வந்த நேரம், நா முழு பலத்தையும் வச்சு கைய பின்னாடி இழுக்க,

    "ஆஆஆஆஆஆ.......ஹ்ஹ்ஹ்ஹ்" னு ஒரு சத்தம். என்னனு நான் நிமுந்து பாக்கையில கணக்கு டீச்சர் பரபரன்னு தொடைய தேச்சுட்டே ... ... ...

    இது கதையல்ல.... சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னாடி நடந்த உண்மை சம்பவம்!!
     
    Loading...

  2. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Dear Ilovetulips

    OMG....so funny....could not stop laughing at all for a very long time.


    [​IMG]

    but sorry i would have been like your friend
    :notthatway:. But you were a just an innocent kid .......!!!!!!!!!!

    [​IMG]

    Innocence knows no fear..
     
  3. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear ILT,

    unga unmai sambavam flash back superb. i could not control my [​IMG]. kanakku teacher romba paavam. yethuva irundhalum pesi theethu irukkalam. avanga pirambala avangalukke adi. idhu konjam over.

    andal
     
  4. radhaparth2000

    radhaparth2000 Platinum IL'ite

    Messages:
    2,674
    Likes Received:
    654
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Dear ILT,

    I had a real good laugh :) Nice way to start my day
     
  5. Indhradhanu

    Indhradhanu Silver IL'ite

    Messages:
    357
    Likes Received:
    211
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hai ILT,
    Funny yaar...Good childhood memories...Enakum school days la kanukku teacher nna bhayam thaan..Ennoda 6th std maths teacher krishnakumari madam thaan njabakam varuthu eppo....avangalum eppadi thaan thappu sencha adi pinniduvanga...athu ennamo School la ella kanakku teacherum enn thaan terror aa erukangalo ….Enga KrishnaKumari madam ..Oru naal oru test paper correct panni paper kondu vanthanga . as usual ellarum uyir aa kayila pidichikittu erunthom…teacher: “All of you close your notes” ..apparum oru ponna kupittu “Protractor” nnu board la ezhutha sonnaga..antha ponnu nadukathoda..”P-r-o-t- ezhuthittu oru two mins yosicha..atha patha udane whole class kum doubt ayiduchu..”T-r-a-c-t-o-r la ella t-a-c-t-o-r nnu …..udane teacher “what ??” athula bayanthu nadaungi pona antha ponnu “ Protactor” nnu ezhuthu mudichu chalk piece teacher kaiyela kuduthettu ninna..full class pin drop silence aa eruthuchu.. ellar thalayum avanga avanga spelling checker aa pottu search pannittu erunthuchu…
    Teacher antha ponna orama ninnkka sonnaga..aprum adutha ponna kupittanga ...same question..Bhayathela same answer aa antha ponnum ezhuthena..teacher adikala so ethu thaan correct nnu mudivu pannitom…teacher kitta thatta pathi class aa kupittu erupanga..ellarum athaye ezhutharapathu nonthu pona teacher ….ellarayum varusaya nekka vachu thuvachu eduthanga  ….vellavi vachu veluthutanga ponga…athuku apprum oru 15 mins advice pannittu kalambittanga….
    Eppo kuda ennoda 6th std batch friends aa yaara entha nadu rathiriyela ezhupi kettalum Protractor spelling aa correct aa solluvanga…
    But i would like to thank her for that...antha adi thaan eppo kuda enna uzhunga kanakku poda vaikuthu,,,,..ILT, Kadasela antha teacher ungala adikkama vettangala??
     
  6. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    கலக்கிடீங்க. உண்மை சம்பவம் super. Hilarious narration :thumbsup :thumbsup
     
  7. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hi ILT,

    Loved the way you've narrated.

    Keep rocking!

    :cheers
    SARAS
     
  8. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear Tulips,

    Screen play soooooooooooper...able to visuvalize while reading...So funny...chance illa...Very Nice
     
  9. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    312
    Likes Received:
    511
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Hi ILT, had a hearty laughter.
    Hi Indhradhanu, eppadithan yosichu yosichu englishla tamil type panneengalo?
     
  10. Indhradhanu

    Indhradhanu Silver IL'ite

    Messages:
    357
    Likes Received:
    211
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hai Maalti,

    Enna pannarathu tamil type panna thereyathunga..:)
     

Share This Page