1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடுசர்க்கரை யோகம்

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jan 18, 2026.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,811
    Likes Received:
    10,920
    Trophy Points:
    438
    Gender:
    Female
    யோகம் என்றால் சேர்க்கை. சேர்மானம் ஒன்றுதல் என்று பொருள். கடுசர்க்கரை யோகம் என்ற பதப் ப்ரயோகம் சமீபத்தில் கேட்க நேர்ந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்க்குப் பரிச்சயமான ஒன்று. கடுசர்க்கரை என்பது ஒரு சாந்து அல்லது பூச்சு. தெய்வ சிலா விக்ரஹங்கள் மீது காலங்கள் அழியாமல் காக்க சார்த்தப்படும் கலவை பூச்சு கடுசர்க்கரை யோகம். இந்த மாதிரி திருமேனிகள் அபிஷேகம் திருமஞ்சனம் காண்பதில்லை. பதினாறாயிரத்து எட்டு சாளக்கிராமங்களைக் கொண்டு அதன் மேல் கடுசர்க்கரை யோகம் என்ற சாந்தைப் பூசி திருமேனிக் காப்பு செய்கிறார்கள்.
    கடுசர்க்கரை யோகம் செய்யத் தெரிந்த சிற்பிகள் குறைவு. 6Oக்கும் மேற்பட்ட மூலப் பொருட்கள் வேண்டும். மனிதனின் உடலமைப்பு போலே நரம்பு எலும்பு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பொருட்கள். ஐந்து அடுக்கு லேபனம். தேங்காய் நார். கருங்காலி மரம். பலாப்பழப் பசை. கடல் மண். ஐந்து ஆறுகள் கலக்கும் மண். திரிபலம். வில்வம். சங்குத் தூள். குந்திரிகம். சந்தனம். இன்னும். இன்னும். இதைத் தவிர. பொடிப்பு. அரைப்பு . ஊற வைப்பு. பதப்படுத்துதல் என நிறைய முறை வகைகள். பூசுவதற்குக் கூட தனி உபகரணங்கள். பலா இலைகள். இயற்கை சார்ந்த நடபடிகள்.
    இந்தியாவில்தான் எத்தனை வகையான திருமேனிகள்! மண் மரம் மஞ்சள் சாணம் கருங்கல் பளிங்கு சாளக்கிராமம் கடுசர்க்கரை சுதை. கல்லெல்லாம் கலையாக்கி, கலையெல்லாம் கடவுளாக்கிய தேசம்.
    சுதை திருமேனி உள்ள கோவில்களிலும் அபிஷேகம் கிடையாது. சமயபுரம் அம்மா திருத்தண்காலப்பன் உதாரணமாக. கடுசர்க்கரை யோகப் பெருமான்கள் யாவர்? என் சிற்றறிவில், திரு அனந்தபுரம். 18 அடி ஸ்ரீ அனந்த பத்மநாபசாமி,
    திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் அவரின் தமையன் 22 அடி. பிரளய காலத்தில் புரண்டு படுக்கும் பெருமாள். அப்புறம் வடகோடியில் ஸ்ரீ அனந்தபுரா ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமி பரமபத சேவை. ஸ்ரீ வில்வமங்கல ஸ்வாமி இங்கு பூஜை செய்கையில் குழந்தையாய் வந்த எம்பெருமானைப் புறங்கையால் தள்ளி விட்டு கொங்கண தேசம் தொட்டு கேரள தேசம் முழுவதும் தேடி அலைந்து இறுதியில் தென்கோடியில் அனந்தன் காட்டில் கண்டதாய் வரலாறு. அழகான ஆலயம். புராதன ஆலயங்களின் கலையழகும் வழிபாடு முறைகளும் மூர்த்தங்களும் தீர்த்தங்களும் கொள்ளை அழகு. கண்டால் நிச்சயம் ஜன்ம சாபல்யம் உண்டு.
    மருள் ஒழிக்குமாம் கடுசர்க்கரை யோகம். எங்கு. ? திருவண்பரிசாரம் ஸ்ரீ திருவாழ்மார்பன். நம்மாழ்வார் தாய்வழிப் பாட்டனார் திவ்ய தேசம். "இருள் தரு மாஞாலத்துள் இனிப்பிறவி நான் வேண்டேன், மருளொழி மடநெஞ்சே!
    வாட்டாற்றான் அடிவணங்கே" (திருவாய்மொழி 10-6-1) ஸ்ரீ நம்மாழ்வார் நமக்கு வேண்டி போதத்தோடு இருக்க சாதித்தது. ஏனென்றால் அவர் எப்போது மோக்ஷத்திற்கு ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஏகுவார் என்று பெருமாளும், பிராட்டியும், நித்ய சூரிகளும், தேவர்களும் வழி மேல் விழி வைத்து அல்லவோ காத்திருந்தார்கள்! நாம் உய்யக் கொண்டவாறு அருளியதாம்.
    JAYASALA42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,275
    Likes Received:
    13,811
    Trophy Points:
    645
    Gender:
    Male
    In 1950s & before, this item is to be prepared at almost every South Indian homes;and my mom too would prepare and keep it handy.

    It was compulsory to attend at school with dot on forehead and school going children used to sport this on their forehead as a small or large dot. This reminds me of my classmate kalyana Janki Raman during our for decades Ix to SSLC .

    He used to sport his for head with Parallel stripes and several vertically arranged spaced dots made of ash, சாஹ்ண்டு,vermilion,sandalwood paste . I remember his singing school prayer for about 5 minutes with intense Bhakti while all class students gathered in a huge hall at the fourth floor of Hindu high school Triplicane Chennai 5.

    Chāndhu also reminds me of Prasadam at the conclusion of Homa the priest used to offer it as baspam tinged with little oil perhaps melted ghee.

    It is interesting to note that god and goddesses were eagerly looking forward to the moment of Namazhwar arrival at Vaikuntam!
     

Share This Page