1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

கடவுளிடம் கேட்க கூடாதது

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 21, 2021.

 1. Thyagarajan

  Thyagarajan Finest Post Winner

  Messages:
  10,114
  Likes Received:
  10,932
  Trophy Points:
  590
  Gender:
  Male
  ஏம்மா! இந்த தாத்தாதான் ப்ரபத்தி பண்ணி ஸ்ரத்தையா ஆராதனையெல்லாம் பண்ணிட்டு வர்றாரே...ஏன்..தான் இழந்த சொத்தையெல்லாம் கேட்கக்கூடாது? கேட்டால் தரமாட்டாரா பகவான்?
  இது என் பெண்,
  சென்னை வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்து எங்கள் வீட்டில் நாங்கள் அழைத்ததின் பேரில் வந்து சில நாட்களாகத் தங்கியிருக்கும் என் தந்தையின் நண்பரைப் பற்றிக் கேட்டது.
  மழை நீர் வீட்டின் உள்ளே நுழைந்து கிடுகிடுவென அடிக்கணக்கில் ஏறவாரம்பித்ததால் தனியாளாக அங்கு வசித்து வந்த அவரால் எதையும் காப்பாற்ற முடியவில்லை. உயிர் பிழைக்க வெளியேறினார். எல்லாப் பொருட்களும் அடித்துச் செல்லப்பட அடிப்படை வஸ்துக்கள் உட்பட அனைத்தையும் அவர் மீண்டும் வாங்க வேண்டும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டுமே சம்பாதிக்கும் சக்தி கொண்ட அவருக்குச் சேமிப்பும் கிடையாது. இரண்டு நாட்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து பிறகு எங்க அப்பா அவரை இங்கு அழைத்து வந்தார். அவர் மிகவும் ஸாத்விகர். பொறுமையாக பதில் தருவார் என்பதால் இந்தக் கேள்வியை என் பெண்ணை அவரிடமே கேட்கச் சொன்னேன்.
  இல்லம்மா....பகவான் கிட்ட ஸரணாகதி பண்ணிண்ட யாரும் அவரிடத்திலே ஐச்வர்யத்தை யாசிக்கமாட்டா.. அதுல முன்று தோஷம் வந்து சேரும்னு நம்பிள்ளை சொல்லியிருக்கார் என்றார்.
  எனக்கும் இது புது விஷயமானதால் நானும் கூர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.
  முதலாவதாக கிடைக்காத அம்ஸத்துக்காக ஆசைப்படுதல்னு ஒரு தோஷம் வந்து சேரும். அவங்கிட்ட கிடைக்காத வஸ்துவா என்றால் உண்டு. குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா ...தாயார் அந்த குழந்தை கேட்கும் வஸ்துவெல்லாம் சாப்பிடக் கொடுக்கமாட்டாள். அதுக்கு எது ஒத்துக்குமோ அதைத்தான் தருவாள்.. அதுபோலத்தான் எம்பெருமானும். யஸ்ய அநுக்ரஹம் இச்சாமி தநம் தஸ்ய ஹராம் யஹம் னு அவனே சொல்லியிருக்கான். முதலில் மோக்ஷத்தைக் கேட்ட நாம் இப்போ ஐச்வர்யம் கேட்டா அது அக்ரிமெண்டுக்கு விருத்தமா இருக்கிறதுனாலே அது கிடைப்பதில்லை. நமக்கு, தேவையில்லாததை ஆசைப்பட்டான் என்ற தோஷம் வந்து சேரும்.
  இரண்டாவதா நம்ம ஸ்வரூபத்துக்குச் சேராத ஒரு அம்ஸத்துக்கு ஆசைப்பட்டான்னு ஒரு தோஷம் வந்து சேரும். ஒரு ராஜாவோட பிள்ளை வேடர்கள் குடிக்கும் கஞ்சிக்கு ஆசைப்படறது போலத்தான் இதுவும். அழியாத மோக்ஷானந்தம் கிடைக்கப் போறச்சே அழியக்கூடிய ஐச்வர்யம் கேட்பது ஸ்வரூபத்துக்கு விருத்தமானது. ஐச்வர்யம் அழியக்கூடியது என்பதை நான் கண்ணாலேயே பார்த்துவிட்டேன். உனக்கு வேணா இன்னும் கொஞ்ச நாளாகும் புரியறத்துக்கு.
  முண்றாவதா எம்பெருமானுக்கே கலக்கத்தை ஏற்படுத்துவது. ரொம்ப நாள் பிரிந்திருந்த பிள்ளை அப்பாவைத் தேடிவந்தா அப்பாவுக்கு சந்தோஷமாகவிருக்கும். அவனே வந்தவுடன் இந்த வீட்டை விற்று என் பங்கைக் கொடு...நான் என் வழியே போறேன் என்றால்....பிள்ளை தன்னைப் பார்க்க ஆசைப்படுவரல்ல. தன் பணத்துக்காகத்தான் வந்தான்னு வருத்தப்படமாட்டானா? இத்தனை நாள் பிரிந்திருந்த ஜீவன் தனக்குக் கிடைக்கப் போகிறான் என்றிருக்கும் எம்பெருமானிடம் ஐச்வர்யத்தைக் கேட்டால் அவன் மனதில் கலக்கம் ஏற்படாதோ? அதுக்கு நாம் காரணமானோம்னு ஒரு தோஷம் வரும். பர்த்தா ஆசையுடன் இருக்கும்போது பத்னி வேறொருவனை ஆசைப்பட்டால் என்னாவது? பதிவ்ரத்யம் குலையாதோ? பர்த்தாவும் பத்னியை மீண்டும் அழைப்பானோ?
  என்னைப் பொருத்தவரையில் ....அவன் ப்ரபத்தி பண்ணியவர்களை விடுவதே இல்லை.இதோ பார்...என்னை சின்ன இடத்திலிருந்து இவ்வளவு பெரிய வசதியான இடத்தில் கொண்டு வைத்திருக்கிறான். அவனுக்குப் பண்ணுகிற ஆராதனையை இன்னும் வசதியா பண்ண வைத்திருக்கிறான். என்னைத் திண்டாடாமல் வைத்து என்னாலே அவனுக்கு பண்ணக்கூடிய சின்ன கைங்கர்யத்தையும் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறான் ..பார்த்தாயா.
  ...அவர் பேசப் பேச எனக்குள் ஆச்சர்யம் மேலிட்டது. வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவத்தை எப்படி சுலபமாக இவரால் எடுத்துக்க முடியுது? அவருக்கு இருக்கும் அசைக்க முடியாத மஹாவிஸ்வாசம் தவிர வேறு எதுதான் காரணமாக இருக்க முடியும்?
  உங்களால எப்படி இந்த மனநிலையில் கூட இதையெல்லாம் ரசிக்க முடிகிறது. என் பெண் ஆர்வம் தாங்காமல் கேட்க, நம்பிள்ளை இதற்கும் வழி காட்டுகிறார். இந்த ஸம்ஸார சுகம் முன்று வகை.
  இந்த ஐச்வர்யத்யாலே வருகிற சுகத்தை தனக்கென நினைச்சா நரகானுபவத்துக்குச் சமம்.
  தனக்கும் எம்பெருமானுக்கும்னு நினைச்சா ஸ்வர்க்கானுபவத்துக்குச் சமம்.
  எம்பெருமானுக்கே இந்த சுகம்னு நினைச்சா பரமபதத்தில் உண்டாகும் அனுபவத்துக்குச் சமம்.
  என்னைப்பொருத்தவரை ...எனக்கு பரமபத அனுபவம் என்றார்.
  ப்ரபத்திக்குப்பின் ப்ரபந்நன் வாழும் முறையை வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒருவரைக் காட்டித் தந்ததற்காக எம்பெருமானுக்கு நான் தியாகராஜன் அடிமை.
   
  Loading...

 2. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  5,255
  Likes Received:
  10,382
  Trophy Points:
  438
  Gender:
  Female
  A great thought on Vaishnavite concept!
  Jayasala 42
   

Share This Page