1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடல் கற்றுத்தந்த பாடம்!!!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 16, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கடல் அலைகளுக்கு தான் எத்தனை சக்தி!!!!!
    சில நிமிடம் மட்டுமே
    அதன் அருகில் நின்றிருந்தேன்;
    மீட்டு கொடுத்து விட்டது
    என் குழந்தைப் பருவத்தை;
    மறந்தே போய்விட்டது
    உலகத்தில் உள்ள அத்தனையும்;
    குறைந்து போய்விட்டது
    என் அனைத்து கவலைகளும்;
    அந்தகார இருளில் கண்ணுக்கு
    எட்டிய வரை கடல் நீர் மட்டும் தான்;
    சுற்றியிருந்த மனிதர்கள்
    கூட கருத்தில் பதியவில்லை;
    ஒவ்வொரு முறை அலை
    வந்து கால் நனைக்கும் போதும்
    காலுக்கடியில் நழுவி போனது பூமி;
    அலை என்னை தன்னுள் இழுத்ததா இல்லை
    காற்று என்னை பின்னோக்கி அழைத்ததா
    தெரியவில்லை - ஆனால் நான்
    பறந்துகொண்டிருந்தேன் சந்தோஷ வானில்
    மேககூட்டங்களைச் சிறகாய் கொண்டு;
    மணலில் வீடு கட்டி மயிலிறகை
    நடுவில் சொருகி பெயர் எழுதி வைத்தேன்
    வீட்டுக்கு சொந்தக்காரி நான் என்று;
    அலை வந்து கரை தொட்டு என்
    மணல் மாளிகையைத் தழுவிச் சென்றது
    அவை எனக்கு சொல்லிவிட்டு சென்றது
    பெண்ணே!!!! இந்த உலகத்தில் எதுவுமே
    சாஸ்வதமில்லை என்னை தவிர!!!
     
    Loading...

  2. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    miga azhagiya varigal. :thumbsup ungalin varigalodu naanum thuli kuthithu kondirunthen, kadaisi varigal ennai nirka vaithuvithathu, sinthinka seithathu. ethanai murai alaigal vanthu adithu sendralum, ira manalil vedu kattum kuzhanthaigal irunthukondu thaan irupaargal. ilavasamaaga ennai kadalarugil azaithu sendrathatharku nandrigal.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வகுப்பில் சொல்வதை நீ கேட்பதில்லை என்று அலை கூட பாடம் எடுத்தா உனக்கு??? அந்தப் பாடமாவது கேட்டாயா??? :rotfl:rotfl

    ரொம்ப அழகான கவிதை ப்ரியா. வார்த்தை பிரயோகம் அருமை.... "அந்தகார இருள்" "மேகக் கூட்டங்களை சிறகாய் கொண்டு பறந்தது" "மணல் வீட்டில் சொருகிய மயிலிறகு" என அத்தனையும் ரசித்து படித்தேன்....:thumbsup

    ரோஜாவிடம் ஒரு நாள் பேசியதர்க்கே கவிதை நீளம் கூடி விட்டதே.... இன்னும் தினமும் பேசினால்...... நான் வரலப்பா இந்த வெளாட்டுக்கு ....
     
    Last edited: Jun 16, 2010
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Very beautifully written... deva... even i feel the same when i go to beach or the river side... but i never managed it to pen down.... so beautifully written.... very glad that i never missed this one....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் கால்கள் நனைந்தன உன் கடல் தந்த அலைகளால்
    என் நெஞ்சம் நிறைந்தது அவை தந்த நினைவலைகளால்
    என் இதயம் நனைத்தது உன் கடல் கொடுத்த பாடத்தால்
    என் சிந்தை நிறைந்தது நீ கொடுத்த வரிகளால்.... :)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    paarunga Elvee naan evlo nalla vanu... free service pannirukken ungalukku....:) thanks Elvee......
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தேவா...மிகவும் அருமை உன் கவிதை....
    ஒவ்வொரு வரியிலும்...நான் அனுபவித்தேன் கடலலையின் சுகத்தை....
    என்ன அழகாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறாய் ..
    இதோ உன் அழகு கவிதைக்கு என் அன்பு பரிசு .. :kiss
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    கடற்கரைக்கு சென்றால் நேரம் போவதே தெரியாது...

    கவிதை பிரமாதம் தேவா...
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear deva


    anthi chaayum velayil kanniya kumari kadarkaraiyil kaal nanaitha anubhavam enakku, un kavithai padithathum. eppothume thaniyaaga kadalai nokki nindru kaal nanaikkum anubhavam oru sukham thaan. ondrume saasvathamillai kadal alaigalai thavira, romba chinthikka vaikkum kadaisi varigal. arumai deva. enakku kadalai paarkkum pothu innoru vithamaaga thondrum. Oyaamal orunaalum uzhaikka vendum. illaya.
    thanks dear

    ganges
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thinamum pesinaal kavithai kathai aagividum:) thanks veni for your nice fb....
     

Share This Page