1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடல் அலையின்-ஒரு வேதனை புலம்பல்

Discussion in 'Posts in Regional Languages' started by yams, Nov 17, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நேற்றைய தினம் உன்னை காண வந்திருந்தேன்...எப்போதும் ஓடி வந்து என் காலணைக்கும் நீ நேற்று அதிகமாய் குமுறி கொண்டிருந்தாய். காவலர்கள் அதனால் உன்னிடம் விளையாட மறுக்க சோர்ந்து போய் கரை திரும்பினேன் நானும்.
    அப்போது தான் எனக்கு உன்னிடம் ஏற்பட்ட வித்தியாசம் தெரிவதாய்!

    எப்போதும் இல்லாமல் நீல நிறத்தில் பொங்கும் சிரிப்பாய் தோன்றும் நுரையுடன் விளையாடி கொண்டிருக்கும் நீ நிறம் மாறி! உருவம் மாறி! கருமையே உருவாய் காட்சி அளித்தாய்.

    மக்கள் உன்னிடம் அதிகமாய் நிற்காமல் விலகியே இருந்தார்கள்.

    உன்னிடம் இருந்து ஒரு துர்நாற்றம் வேறு கிளம்பியது.

    அது உன்னை பார்த்து ஓடி வரும் அதே மனிதர்களை விலக செய்வதாய்.

    காரணம் தேடி நான் யோசித்தவண்ணம் திரும்ப சாக்கடை உன்னோடு கலந்து கொண்டிருந்தான்...அதனால் தான் இந்த உருமாற்றமா??
    உன்னிடம் மாற்றம் நிகழ இந்த கள்வன் தான் காரணமா? என்று நான் யோசித்து கொண்டிருக்க

    ஆமாம்!
    என்று சத்தமாய் இரைந்தாய் நீ!
    எனக்கு உதவ ஆளில்லை என்று நீ குமுறி கொண்டிருக்க நானோ உனக்கு உதவ முடியாத பேதையாய்...

    அரசாங்கமே!
    நீயாவது உதவேன் என் நண்பனுக்கு...!
    சாக்கடையை அவனது விளையாடும் இடத்தில் கலக்காமல் சற்று உட்பக்கமாக சென்று கலக்கும் படி செய்தால்...அவனோடு விளையாடி மகிழ எங்களுக்கும் தடை இல்லை..அவனுக்கும் வருத்தம் இல்லை!
    கேட்குமா அவனது வருத்தமிகு ஓலம் உங்கள் காதுகளில்?
    :)
     
    1 person likes this.
    Loading...

  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி.....
    உங்கள் புலம்பலில் உள்ள நிதர்சனம் என் உள்ளத்தை உருக்கியது....
    அளவில்லா செல்வங்களை வாரி தந்திடும் அந்த வாரிதியை நாம் பாதுகாக்கவேண்டும் என நன்கு பதிவு செய்திருக்கிறீர்கள் ......
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks bhargavi for your support and feedback.
     

Share This Page