1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ! அமெரிக்கா!

Discussion in 'Regional Poetry' started by rajiram, Apr 18, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Same tree in June!

    [​IMG]
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காக்கும் கரங்கள்...

    [​IMG]

    உலக நாடுகளையே உலுக்கிய பயங்கர நிகழ்வு;
    உலகின் அழகிய இரட்டை கோபுரங்கள் அழிவு!

    ஆகாய விமானங்களையே, ஏவு கணையாக்கி,
    ஆகாய வழியே வந்து மோதினர், பேரிடி போல.

    அரக்கு மாளிகை எரிந்து சாம்பல் ஆனதுபோல,
    இரக்கம் இல்லாத் தாக்குதலால், பெருந்தீ மூள,

    சரியாகப் பணிக்குச் சென்றவர், தப்ப முடியாது,
    பரிதாப மரணத்தால், விண்ணுலகு சென்றனர்.

    தீவிரவாதம் என்ற பெயரால், அச்சத்தைத் தந்த
    தீவிரவாதி, ஓயாது முயற்சிகள் பலவும் செய்ய,

    பல ஆண்டுகள், கோடிகள் செலவு செய்து தேடி,
    பல நாட்களாகத் தீவிரமாக வேட்டையும் ஆடி,

    அக்கால அசுரர் வதம் செய்யப்பட்டதுபோலவே,
    இக்கால Bin Laden னும் வதம் செய்யப்பட்டான்!

    அசுரர்கள் மாண்டால், வாரிசுகள் பொங்கி எழும்;
    அசுரர்கள் பட்டாளமே, தீமைகள் செய்ய வரும்!

    நிறைவான அவன் படை, பழி தீர்த்திட வராது,
    இறைதான் உயர்ந்த அமெரிக்காவைக் காத்து,

    தேசங்கள் எல்லாமே நிம்மதியாய் வாழ்ந்திட,
    நேசமுடன், காக்கும் கரங்களை நீட்டிடணும்!

    உலகம் உய்ய வேண்டும், :bowdown
    ராஜி ராம்


     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    என்றுதான் புரியுமோ?

    ஒவ்வொரு முறை வருகின்ற போதும்,
    ஒவ்வொரு வித லூட்டி செய்கிறேன்!

    மகன் பாரிஸ் சென்றதால், பெண்ணரசி,
    அவன் அமைத்த burgler's alarm ஒன்றை

    செட் செய்து வைத்தது தெரியாத நான்,
    சட்டென்று புது ரோஜாக்களைக் காணும்

    ஆவலால் உந்தப்பட்டு, வாயிற்கதவைத்
    திறக்க, திடீரென உச்ச ஸ்தாயியில் ஓர்

    அலாரம் அடித்து அமர்க்களம் செய்ய,
    அலாரத்தை நிறுத்தத் தெரியாது நான்

    தவிக்க, மாடியில் இருந்த பெண்ணரசி
    தாவி, இறங்கி வந்து அதை நிறுத்திவிட,

    சில நொடிகள் இதயம் துடிக்க மறந்து,
    சில்லென உறைந்து போனது, நேற்று!

    என்றுதான் இந்த US வாழ்வு புரியுமோ?

    :hide:
     
    1 person likes this.
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அங்கும், இங்கும்...

    சென்னை வாழ்வும், Boston வாழ்வும், பல
    சின்ன விஷயங்களிலும்கூட வேறுபடும்.

    கோடை வெய்யில் நூறுகளிலே அங்கு;
    சோடை போகாத குளிர் நடுக்கும் இங்கு.

    ஒற்றை வஸ்திரத்தில் வியர்வை அங்கு;
    மூன்று அடுக்கும் தாண்டிக் குளிர் இங்கு.

    ஆதவன் எழுவான் ஆறேகாலுக்கு அங்கு;
    ஆதவன் எழுவான் ஐந்தேகாலுக்கு இங்கு.

    இருள் வரவு மாலை ஏழு மணிக்கு அங்கு;
    இருள் வரவு இரவில் ஒன்பதுக்கே இங்கு.

    கோடை மழையானால் கொட்டும் அங்கு;
    கோடையைக் குளிர்விக்க, தூறல் இங்கு.

    சாலைகளில் வண்டிகள் வழியும் அங்கு;
    சாலைகள் பலவும் வெறிச்சோடும் இங்கு.

    ஒரு நாளில் படியும் அடர்ந்த தூசி அங்கு;
    ஒரு வாரம் ஆனாலும் தூசி குறைவு இங்கு.

    பிளாஸ்டிக் பைகளில் பால் வரும் அங்கு;
    பிளாஸ்டிக் can களில் வந்துவிடும் இங்கு.

    வண்டியில் காய்கறிகள் வரும் அங்கு; நம்
    வண்டியில் சென்று வாங்கவேணும் இங்கு.

    அருகருகே அமையும் கோவில்கள் அங்கு;
    வெகு தொலைவில் ஒரு கோவில் இங்கு.

    இரு வாழ்வும் எப்படி மாறுபட்டாலும், நாம்
    இரு வாழ்வும் மனம் இருந்தால் ரசிக்கலாம்!

    :thumbsup :thumbsup
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மருத்துவக் காப்பீடு...

    எங்கள் US நண்பி ஒருத்தி அடிக்கடி உரைப்பாள்,
    'எங்கள் ஊரில் சாப்பாடு இல்லாமல் இருக்கலாம்;

    ஆனால்,'இன்ஷூரன்ஸ் இல்லாமல் முடியாது!'
    ஆமாம்! இவை மிக உண்மையான சொற்களே!

    நல்ல கவனிப்பு, மருத்துவமனையில் ஒரு நாள்,
    நல்ல செலவு தந்திடும்; இரண்டாயிரம் டாலர்!

    நம் நாட்டில், முதலில் தொகையைக் கட்டினால்,
    நம் சிகிச்சை ஆரம்பமாகும்! ஆனால், இந்நாட்டில்

    ஏதும் இல்லா ஏழையானாலும், சிகிச்சை உண்டு;
    ஏதோ காரணம் சொல்லிச் சிலநாளில் அனுப்புவர்.

    அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்காது; மேலும்
    அவர்களிடம் பணம் இருக்காது! மற்ற சேவைக்கு,

    மருத்துவர், மருத்துவக் காப்பீட்டிலிருந்து பணம் பெறுவர்.
    மருத்துவம் முடிந்ததும், நாம் இல்லம் திரும்பலாம்.

    என்னவரின் அன்னை இறந்தபோது, பத்தாயிரம்
    எண்ணிக் கொடுத்தால்தான், இறப்புச் சான்றிதழ்

    தருவோம் என்று மிரட்டிய, சிங்காரச் சென்னை
    மருத்துவமனை, எண்ணத்தில் நிழலாடுகிறது!

    :rant . . :bonk
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சிலவற்றில் நாம் பின் தங்கிவிட்டோம் என்பது உண்மையே....அடுத்த நாடுகளிடம் இருந்து எதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதை தவிர்த்து தேவையில்லாத பல பகட்டு நாகரிகங்களை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம்!

    எனக்கு வெகு நாளாக பிரான்ஸ் செல்ல வேண்டும் என்றொரு ஆசை ராஜி....உங்கள் கட்டுரை படிக்கும் போதெல்லாம் அது அதிகரிக்கிறது! நிரம்ப புது அனுபவங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லவா!
     
    1 person likes this.
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கட்டாயம் சென்று வாருங்கள், தேவப்ரியா! அத்துடன் நில்லாமல்,
    எங்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! ராஜி :cheers
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வண்ணமும் எண்ணமும்...

    வண்ணம் என்பதற்கு நிறம் என்ற பொருளுடன்
    இன்னும் ஒரு பொருள் உண்டு; பருமன் என்று!

    பலரின் வண்ணம் இங்கு வெண்மையே; அதில்
    பலரின் வண்ணமும் பெரியது, உண்மையே!

    தன் உருவம் பற்றியே கவலைப்படாதவர்கள்;
    தன் குழந்தைத்தனம் மாறாதவர்கள்! நிறையச்

    சிரித்தால் உடல் ஊதும் என்பாள், என் நண்பி!
    சிரிப்பே இவர்களைப் பருமன் ஆக்குகிறதோ?

    தன்னைப் பற்றித் தாழ்வு மனப்பான்மையை
    என்றும் கொள்ளாது, இருக்கும் இவர்களைக்

    கண்டு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,
    உண்டு உலக வாழ்வில் இனிமை, என்பது!

    :thumbsup :rotfl
     
    1 person likes this.
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நெடுஞ்சாலைகள் ... E Z pass!

    வாழ்வை அனுபவிக்க முயலுவார்கள் இங்கு;
    வாழ்வை அனுபவிக்கத் தேவை பயணங்கள்.

    நெடுஞ்சாலைகள் அழகாக அமைந்திருக்கும்;
    நெடுகிலும் 'கட்டணங்களும்' வசூலிக்கப்படும்.

    காரில் உள்ள பட்டனை அழுத்தினால், தமது
    காரை வைக்கும் 'கெராஜ்' திறப்பது போன்று,

    காரில் Pass ஐ, ஸ்டிக்கர் போல ஒட்டினாலே,
    காரில் செல்லும்போது E Z pass கிடைக்கும்.

    மொத்தமாகப் பணம் கட்டினால், இவர்களும்
    நித்தமும் சில்லறை தேடத் தேவை இல்லை!

    வண்டியின் ஸ்டிக்கரை சென்சார் பார்க்கும்;
    வண்டியை நிறுத்திக் காசு கட்ட வேண்டாம்!

    பச்சை விளக்கைப் போட்டு, தாண்ட வைத்து,
    பச்சை விளக்கொன்று Thank You சொல்லும்!

    இனிதாகப் பயணங்கள் சென்றுவர, இப்படி
    எளிதான முறைகளைக் கையாளுகின்றார்!

    :rotfl:rotfl
     

Share This Page