1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ! அமெரிக்கா!

Discussion in 'Regional Poetry' started by rajiram, Apr 18, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    [​IMG]

    அமெரிக்கப் பகுதிகளைத் தாண்டியதும் கண்ணெதிரே
    அமர்க்களமாய் வருகிறது 'கனடா' நாட்டுப் பிரவாகம்!

    ருத்திரனின் தாண்டவம் இப்படித்தான் இருக்குமோ?
    இந்திரனின் ஆயுதம் இப்படித்தான் இடிக்குமோ?

    ஆண்டவனின் விஸ்வரூபம் இப்படித்தான் இருக்குமோ?
    கண்டவர்க்கு ரூபத்தை ஒளி வெள்ளம் மறைக்குமோ?

    நீர்வீழ்ச்சியை மறைத்து நிற்கும் நீர்த்துளிகளின் மோதல்கள்!
    நீர் வீழ்ந்து நாம் நனைந்து சிரிப்பலையின் மோதல்கள்!

    ஒரு கணம் எனக்கு நீந்தத் தெரியாதென நினைத்து,
    மறு கணம் வேண்டினேன், இஷ்ட தெய்வத்தை நினைத்து!

    [​IMG]

    பத்து நிமிடப் பயணம்தான்! நினைத்தாலே சிலிர்த்துவிடும்!
    சித்து விளையாட்டுப்போலச் சிந்தைதனில் நிறைந்துவிடும்!

    ஆற்றங்கரை சேர்ந்து, மேலே ஏறி வந்த பின்,
    ஆற்றின் மறுபக்கம் பாலம் வழிச் சென்றிடலாம்!

    அங்கும் பூமியைத் துளைத்து, வேறு 'லிப்ட்' அமைத்துள்ளார்!
    அந்தப் பயணத்தை CAVE OF WIND என அழைக்கின்றார்!

    மழைக் 'கோட்' மட்டுமின்றி வழுக்காத மிதியடிகள் தந்து,
    அழைத்துச் செல்லுகிறார் வழிகாட்டி மரப் படிகள் மீது!

    VEIL OF BRIDE நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் செல்கின்றோம்!
    வீல் வீல் – என்று குழந்தைகள் அலறக் கேட்கின்றோம்!

    ஆகாய கங்கை இப்படித்தான் ஆர்ப்பரித்து வந்ததோ?
    ஆகாயம் நோக்கிய கணம் இந்த எண்ண அலை மோதியது!

    சூறாவளி மேடையொன்று தனியாகத் தெரிகிறது!
    தீபாவளிச் சரவெடிகள் வைத்ததுபோல் அதிர்வு அங்கு!

    வியந்த பலர் அதில் ஏறி நிற்க விழைந்தனர்!
    பயந்த சிலர் அதில் ஏறாமலே திரும்பினர்!

    கொட்டும் அருவியின் துளியளவு தெறிப்பதே – யாரோ
    தட்டும் உணர்வைத் தருவது விந்தையான அனுபவமே!

    இயற்கையில் அமைந்த அந்த வெள்ளப் பெருக்கெடுப்பிற்கு,
    செயற்கையாய் இரவில் எத்தனை வண்ணம் சேர்க்கின்றார்!!

    வண்ண விளக்குகள் பலவற்றின் ஒளி பாய்ச்சி – அங்கு
    வண்ண நீர்ப் பிரவாகம் கண்டு வியக்க வைக்கின்றார்!

    [​IMG]

    [​IMG]

    தூரிகையால் தீட்டியதுபோல தூரத்திலிருந்து பார்த்தால்;
    பேரிகைபோல் முழங்கிவிடும் அருகிலே சென்றுவிட்டால்!

    கண் நோக்கிய இடமெல்லாம் வண்ண ஒளிக் கலவைகள்!
    விண் நோக்கி எழும் ஒளிர் வண்ண நீர்த் திவலைகள்!

    :rotfl தொடரும் .........
     
    1 person likes this.
  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ‘MAID OF THE MIST’ பற்றி…….

    'Maid of the mist' ferry ride...

    [​IMG]

    நன்றி காட்டும் நாளாக THANKS GIVING நாள் ஒன்று;
    தொன்று தொட்டு வந்த கதை, இந்த நாளைப் பற்றி உண்டு!

    விசித்திரமாய் ஓர் இனத்தில் தொடர்ந்து வந்த வழக்கம் ஒன்று!
    சித்திரம்போல் அழகு நங்கையை நீர்வீழ்ச்சியில் தள்ளுவதென்று!

    இறைவனுக்கு நன்றி காட்ட, கொடும் நரபலி கொடுத்தனர்!
    தலைவனுக்கு வந்தது சோதனை, அழகு மகள் வடிவத்தில்!

    தன் மகளைத் தேர்ந்தெடுத்து, பலி கொடுத்து, மனமுடைந்து,
    தன் உயிரும் மாய்த்துக் கொண்டான், நீரில் பாய்ந்து, வீழ்ந்து!

    மனம் உடைந்த தலைவன போட்ட 'ஓ' வென்ற ஓலம்தான்,
    தினம் கேட்கும் நயாகராவின் ஓசையென்று கூறுகின்றார்!

    சோகக்கதை கேட்டு மனம் கசந்த எமக்கு – அந்தச்
    சோகம் மாறிவிட 'ஜோக்' ஒன்று கிடைத்தது!

    'எட்டுக் ‘கன்கார்டு’ விமானங்கள் மிக அருகில் சென்றாலும்,
    எட்டாது அந்த ஒலி நீர்வீழ்ச்சி ஓசையால்', என்ற வழிகாட்டி,

    'இங்கு பெண்கள் அனைவரும் ஒரு வினாடி மௌனம் காத்தால்,
    நன்கு கேட்டு விடும் நீர்வீழ்ச்சியின் ஓசை' – என்றாராம்!

    :biglaugh . . :biglaugh

    [​IMG]
     
    1 person likes this.
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... I

    குறிப்பு:


    ஒரு முறை நியூயார்க்கைக் கலக்கிய சில மணி நேரப்
    பெரும் மின் வெட்டு, அனைவருக்கும் நினைவிருக்கும்!

    அந்நாளில் மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்ட மகன்,
    தன் அனுபவங்களை உரைக்க, மலர்ந்தது இக் கவிதை.

    ***********************************************

    தொடர்ந்து நாற்பது மணி நேரம் உழைத்து ஓய்ந்தபின்,
    அயர்ந்து நன்கு உறங்கலாம் என அவன் எண்ணினான்!

    அலுவலகம் விட்டு வெளியேறியபோது, வேறோர்
    அலுவலும் இருப்பது அவன் நினைவிற்கு வந்தது!

    மான்ஹாட்டனில் இரு நாளில் மீட்டிங் ஒன்று உள்ளது;
    அவன் போக வேண்டிய கட்டாயமும் உள்ளது! எனவே

    விமான டிக்கட் எடுத்தார்கள்; கொடுத்தார்கள். அந்த
    விமானம் மறுநாள் காலை நாலரைக்கு ஏற வேண்டும்!

    கிடைத்த கொஞ்ச நேரத்தில் அயர்ந்து உறங்கிவிட்டு,
    அடுத்த நாள் விரைந்து சென்று விமானம் ஏறினான்!

    மான்ஹாட்டனில் அவன் தங்க இரு அறைகள் உள்ள இடம்;
    அவன் கொண்டு சென்ற சிறு பைக்கு அது மிக அதிகம்!

    இரு நாள் பயணம்தானே என்று எண்ணிக்கொண்டு,
    ஒரே ஒரு மாற்றுடைதான் கொண்டு சென்றிருந்தான்!

    வசதியாக இருந்த அறையில் சில மணிகள் தங்கிவிட்டு,
    அசதியாகும் வரை நண்பனுடன் 'ஷாப்பிங்' சென்றான்.

    [​IMG]

    'மீட்டிங்' மறுநாள் நன்றாக நடந்தது - இடையிடையே
    'ஈட்டிங்'கும் அருமைதான்; ருசியாக இருந்தது!

    ஆனால், மாலை நாலு மணிக்கு ஒரு FIRE ALARM - வெளியே
    போனால் புகையோ, தீயோ கண்ணிலே படவில்லை.

    எல்லோரும் மெதுவாகக் கீழ்த்தளத்தில் கூடுகின்றார்;
    எல்லோரும் படிக்கட்டு வழியாகவே வருகின்றார்!

    செல் உலாப் பேசியில் பேசவும் முடியவில்லை - அந்தச்
    செல் உலா எங்கோ உலாச் சென்று விட்டது!

    ஒருவருக்கும் 'கனெக்க்ஷன்' கிடைக்கவில்லை - அந்தத்
    தெருவிலும் எந்த 'சிக்னல்' விளக்கும் எரியவில்லை!

    அப்போதுதான் புரிந்தது மகனுக்கு - அங்கே
    அப்போது 'பவர் கட்' ஆகிவிட்டது என்று!

    :spin தொடரும்...

     
    1 person likes this.
  4. preethiitech

    preethiitech Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,823
    Likes Received:
    1,617
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi ms.Raji..

    ungal eluthukal arumai, padika migavum swarasiyamaga iruku..

    Keep writing more..

    america pathi unmaigalai nandraga sonnergal..:cheers
     
    1 person likes this.
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ஓ ராஜி! அருமையான,யதார்த்தமான கவிதை. நான் தற்சமயம் நான்காவது முறையாக அமெரிக்கா வந்துள்ளேன்.தங்கள் கவிதையை படித்து ரசித்து கொண்டு இருக்கிறேன். பாராட்டுக்கள்.
     
    1 person likes this.
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Preethi and Usha,

    Happy to note that you like my posts! Hope you are reading my 'PayaNak kavithaigal' thread too....

    Detailed description of our experiences appear in that, with photos. The second experience is going ON.

    Raji Ram :cheers
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... II

    பக்கத்துக் கட்டிடத்தில் 'பவர்' வரும் வரை நண்பன்
    பக்கத்தில் இருக்க எண்ணி அங்கு அவன் சென்றான்.

    நண்பனைக் காணவில்லை! LIFT ல் மாட்டினானோ?
    எண்ணியபடியே சில நிமிடம் காத்திருந்தான்.

    விமானம் ஏறி BOSTON சென்றுவிட எண்ணினால், எந்த
    விமானமும் போகவே இயலாது என்றார்கள்! 'அட

    ஹோட்டல் அறையையும் காலி செய்துவிட்டேனே!'
    ஹோட்டலில் மறுபடியும் அறை எடுக்க எண்ணினான்.

    கணினி இன்றி எதுவுமே நடக்காதே! அதனால்
    கணிசமான் நேரம் 'பவர்' வரக் காத்திருந்தான்!

    மக்களெல்லாம் தவித்தனர். கழிவறைகள் ஏதுமில்லை!
    திக்கின்றித் திணறினர். வீடுகளில் உள்ளவர்களோ,

    யாருக்கும் அனுமதி கிடையாதென விரட்டினர்! அன்று
    பாருக்குள் பாரதமே சிறந்தது என உணர்ந்தான்.... ஆம்!

    உதவி செய்ய முன் வந்தது, இந்திய உணவகங்களே!
    உதவும் மனம் மத்திய வர்க்கத்திடம்தான் கண்டான்!

    பேருந்துகள் நிறைந்து வழிந்தன; CAB கள் விரைந்தன;
    மருந்துக்கும் இடமில்லை, எங்கும் எதிலும்!

    ஊர் செல்லவே இயலாது என்பது புரிந்தது;
    வேறு ஏற்பாடு செய்யவேண்டும் அப்போது!

    மான்ஹாட்டனில் உள்ளனர் ரெட்டி, கார்த்திக்;
    அவன் கொண்டு போகவில்லை அவர்கள் விலாசம்!

    செல் உலாவில் உள்ளதே நம்பர்கள் என, எழுதிக்
    கொள்ளாமல் சென்றது தப்பாகப் போயிற்று!

    செல் உலாப் பேசியின் 'சார்ஜ்' குறைந்தது! ரெட்டி வீடு
    செல்வதற்கு விலாசம் வேண்டி, நினைவிலிருந்த ஒரே

    தொலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டான் - நண்பனோ
    'இல்லை விலாசம், தெருவின் பெயர் தெரியும்' என்றான்!

    தொலை தூரம் நடந்து அந்தத் தெருவினை அடைந்தான்!
    கொலைப் பட்டினிதானோ இன்றிரவு என்றும் பயந்தான். முதல்

    கட்டிடத்தில் வீடுகளே இல்லை என்றனர். ஆனால் அந்தக்
    கட்டிடத்தில்தான் அவன் வீடு உள்ளதாம்; பின்னர் அறிந்தான்!

    அடுத்த கட்டிடத்தில் 'ரெட்டி' எவரும் இல்லை என்றார்!
    தொடுத்த கேள்விகளுக்குச் சரியான பதிலும் இல்லை!

    மூன்றாம் கட்டிடத்தில் மீண்டும் இதே கதைதான்;
    நான்காம் கட்டிடத்தில் சோம்பேறி நபர் ஒருவர்!

    அங்கு வசிப்பவர்கள் பெயரைக் காட்டச் சொன்னால்,
    'இங்கு விளக்கில்லை பார்ப்பதற்கு' என்றார்! பின்பு

    வேண்டிய வெளிச்சம் காட்ட அவன் LAP TOP ஐத் திறக்க,
    வேண்டா வெறுப்பாகப் புத்தகத்தைப் புரட்டினார்!

    :spin தொடரும் .....
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... III

    துரதிருஷ்டம் தொடர்ந்தது! ரெட்டி பெயர் அதிலும் இல்லை!
    மறுபடியும் தொலைபேசினான்.. 'கார்த்திக் வசிக்கும் இடம்

    ஒரு மணி நேரம் நடந்தால் வரும்!' என்ற பதில் வந்தது.
    ஒருவழியாக நடந்து, களைத்து, அங்கு சென்றுவிட்டான்.

    இங்கு அவனுக்குக் கொஞ்சம் நல்ல நேரமே! கார்த்திக்
    தங்கும் வீடு, பதினேழாம் மாடியிலென அறிந்தான்!

    பதினெட்டு மாடிக் கட்டிடத்தில் அமைந்த அனைத்துப்
    படிக்கட்டு ஓரத்திலும் மெழுகுவர்த்தி வைக்காமல்,

    படிகள் ஏற, நிறையப் பேர் சேர்ந்த பின் - ஒரு ஆள்
    படிகள் ஏற வழிகாட்டி, விளக்குடனே போனாராம்!

    அகம் மிக மகிழ்ந்தான் நண்பனைக் கண்டு - அவனும்
    முகம் மலர்ந்து, நன்கு வரவேற்று உணவளித்தான்!

    நல்ல நேரம் ஆரம்பம் என்று அவன் எண்ணியபோது
    மெல்ல நின்று போனது, குழாய்களில் தண்ணீர் வரவு!

    மின்சாரம் இல்லாது தண்ணீர் ஏற்றவே முடியாதே;
    பின் என்ன? இனிமேல் எல்லாமே DRY CLEAN தான்!

    இரவில் மின்சாரம் வரும் என வானொலி அறிவிப்பு;
    இருந்தாலும் வரவில்லை; அவர்களுக்கோ மிகக் கடுப்பு!

    ஒருவாறு கண்ணயர்ந்து உறங்க முயன்றனர்;
    மறுநாள் விடியலில்தான் எத்தனை பேரின்பம்!

    மின் விசிறி இல்லை; குளிர் சாதனம் இல்லை; ஆனால்
    மின் விளக்கு வேண்டாமே, அன்று இரவு நேரம் வரை!

    :spin . :spin தொடரும் .....
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... IV

    அரைக் குவளை நீரில் பல் தேய்த்து, முகம் துடைத்து,
    விரைவாக 'பஸ்' பிடிக்க எண்ணி, அவன் சென்றான்.

    'பஸ் ஸ்டாண்ட்' பாதாளத்தில்; விளக்கில்லை; கும்மிருட்டு!
    பஸ் அனைத்தும் சென்றன, வீதியிலிருந்தே புறப்பட்டு!

    எவரிடமும் பணமில்லை A T M எதுவும் இயங்காததால்;
    பலரிடமும் I D CARD இருந்ததால் அன்று பிழைத்தார்கள்!

    டிக்கட் காசு இல்லாதோர், அதை அடமானம் வைத்து - 'கனெக்
    டிக்கட்' டில் A T M உபயத்தால் அதைத் திரும்பப் பெற்றார்கள்!

    (கனெக்டிக்கட் என்ற ஊர் N Y - BOSTON வழியில் உள்ளது)

    சப்வே ரயில் வேண்டாம்; மின்சார பஸ் வேண்டாம்;
    இப்போ வீடு செல்ல வேண்டும் என்று தோன்றியதாம்!

    பாஸ்டனில் இறங்கியதும், பார்த்த முதல் CAB இல்,
    பாங்காக இனிய இல்லம் விரைந்தான் - வழியில்

    'இன்று இங்கு A T M இயங்குமா?' எனக் கேட்டான்;
    'நன்று! இயங்குமே!' என்ற பதில் வந்தாலும்,

    பண நோட்டே இல்லையோ உங்களிடம் என்பதுபோல்
    கணம் நோட்டமிட்ட ஓட்டுனர், A T M இல் நிறுத்தினார்!

    வீணாகப் பொழுது போக்காமல், நேராக வீட்டுக்கு வந்தான்;
    காணாததைக் கண்டதுபோல குளியலறைக்கு விரைந்தான்!

    ஒரு மணி நேரம் ஆசை தீர நீராடி மகிழ்ந்தான்;
    சிறு பாடம் கற்றான், இம்முறை, பயணத்தால்!

    என்னதான் வசதிகள், செல் உலாக்கள்,
    வண்ண விளக்குகள், A T M கள் இருந்தாலும்,

    பயணத்திற்கென்று ஒரு அட்ரஸ் புத்தகமும்,
    பயபக்தியுடன் வேண்டிய பணமும், டார்ச் லைட்டும்,

    அவசியம் கொண்டு செல்ல வேண்டும்; இல்லையேல்
    அனாவசிய இன்னல்களைச் சந்திக்க நேரிடும்!


    :crazy . . :hiya
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

Share This Page