1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ! அமெரிக்கா!

Discussion in 'Regional Poetry' started by rajiram, Apr 18, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    சிக்கனம்…

    பணம் சேமிப்பது மிகக் கடினம் – இங்கு
    மனம் திசை திருப்பப் பல்வேறு வசதியுண்டு!

    வார விடுமுறையில் வீட்டில் இருப்போரைப்
    பார்ப்பது மிக அரிது! எல்லோருக்கும் fun வேண்டும்!

    எங்கு நாம் சென்றாலும் பணச் செலவு மிக அதிகம்!
    எந்த 'டிக்கட்' என்றாலும், பதினைந்துக்கும் மேலாகும்!

    [​IMG]

    Sky diving போல வீர விளையாட்டுக்கள்
    Sky உயரச் செலவுதான்! ஒரு முறைக்கு நூறு டாலர்!

    வீட்டுக்கும் வாடகை மிக அதிகம்! அதனால் எல்லோரும்
    வீடு வாங்கக் கடன் எடுத்து, அதை அடைக்க மேன்மேலும்

    உழைத்து ஓடாகின்றார்!
    களைத்துப் போகின்றார்!

    ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ – என
    ஓதுவது வீண் பேச்சு! இங்கு credit card- தான் உயிர் மூச்சு!
     
    1 person likes this.
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மெஷின் வாழ்க்கை....மனமும் மெஷினாக மாறிவிட்ட வாழ்க்கை
     
    1 person likes this.
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பணம் நிறைய இருந்தால், அமெரிக்க வாழ்க்கை = சுவர்க்கம் 70% + நரகம் 30%

    பணம் சேமிப்பது மிகக் கடினமே! உல்லாசம் அனுபவிக்க, 'அது' வேண்டுமல்லவா?

    தேவப்ரியா நினைப்பது சரி. அங்கு மிஷின் வாழ்க்கைதான்!

    மாற்றுவது, சில பொழுது போக்கும் சிறந்த இடங்கள்தான்!
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எல்லாம் தலைகீழ்!


    [​IMG]

    இந்தியாவிலிருந்து இங்கு முதன்முறை வருவோருக்கு,
    விந்தையாய் இருக்கும் இங்கு காண்பதெல்லாம்!

    விளக்குப் போட SWITCH – ஐ மேலே தள்ள வேண்டும்!
    வலது பக்கமாய்ப் பாதையில் வண்டி ஓட்ட வேண்டும்!

    வெந்நீர் நம்முடைய இடது பக்கக் குழாயில் வரும் – குளிர்ந்த
    தண்ணீர் நம்முடைய வலது பக்கக் குழாயில் வரும்!

    பூக்கள்தான் முதலில் பூக்கும், வஸந்த காலத்தில்!
    பூத்தபின் மெதுவாக இலைகள் துளிர் விடும்!

    இயற்கையே இவ்வாறு இருப்பதால்தானோ – இங்கு
    இல்லாளாய் மாறும் முன் சிலர் தாயாக மாறுகின்றாரோ? - இல்லை

    உலக உருண்டையில் நாம் நிற்கும் திசைக்கு
    எதிர்த் திசையில் நிற்பதால் இவ்வாறு இருக்கிறதோ?

     
    1 person likes this.
  5. ridgemma

    ridgemma Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    237
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Raji,

    Loved this inference....

    இயற்கையே இவ்வாறு இருப்பதால்தானோ – இங்கு
    இல்லாளாய் மாறும் முன் சிலர் தாயாக மாறுகின்றாரோ? - இல்லை
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you ridgemma! :)
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ‘அ’ – விலிருந்து ‘ஃ’ – வரை…

    [​IMG]

    அமெரிக்கா போகணும்! 'டாலர்' சம்பாதிக்கணும்!

    ஆசை யாரை விட்டது?

    இங்கு வந்து பார்த்தால் புரியும்,

    ஈன்ற மண்தான் புனிதம் என்று!

    உயர உயரப் பறந்தாலும்

    ஊர்க் குருவி பருந்தாகுமா?

    எந்தப் பெரியவர் சொன்னதோ?

    ஏட்டில் படித்த ஞாபகம்!

    ஐயமொன்று எழுந்தது எனக்கு; சுதந்திரம் எனச் சொல்லி,

    ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை வெறுக்கின்றனரே!

    ஓ!! இதுதான் அமெரிக்க வாழ்க்கையோ?

    ஔவையார் இக் கலாச்சாரம் கண்டால்,

    ‘ஃ’ – ஆயுத எழுத்தால் தாக்குவாளோ?

    :bangcomp:

     
    1 person likes this.
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,777
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Hi,
    Very very interesting to see USA in your perspective!
     
    1 person likes this.
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    Thank you Vidhya! Hope you are reading my 'PayaNak kavithaigal' (thread) too

    in which I am writing in detail about our visits to the US.

    First part is over and the second part is ON.

    Raji Ram :)
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வியக்க வைக்கும் நயாகரா!

    [​IMG]

    பெயரே வந்து தூண்டிவிடும் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி;
    உயரே இருந்து கொட்டும் நயாகரா நீர் வீழ்ச்சி!

    உலகிலுள்ள அனைவருமே காண விழையும் அரும் காட்சி;
    உணர்ந்திடுவோம் கண்டவுடன் இயற்கை அன்னையின் மாட்சி!

    அன்று முதல் இன்றுவரை மேலைநாட்டின் பெருமையாகும்;
    மூன்று பிரிவுகளாய்ப் பிரிந்து கொட்டுவது அருமையாகும்!

    ஆரம்பத்தில் ‘RAPID RIVER’ எனப் பெருகி ஓடும்;
    ஆயிரத்து நூற்று ஐம்பதடி அகலக் கொந்தளிப்பாகும்! – அது

    அடித்து வந்த பெருமரங்கள் அதனிடையில் காணும்போது,
    நொடிப்பொழுது நம் இதயம் துடிக்கவே மறந்துவிடும்!

    ஆற்றுக்கு இணையான சாலையில் எதிர்பார்ப்புடன் செல்கின்றோம்!
    நூற்றுக் கணக்கான ஜனக்கூட்டம் உடன் வரக் காண்கின்றோம்!

    நெருங்கி வரும் பேரிரைச்சல் கேட்கிறது என்றாலும்,
    அருங்காட்சி விரிகிறது நாம் எதிர்பாராத் தருணத்தில்!

    அமெரிக்கப் பகுதியில் கற்பாறைகளில் மோதி விழும்;
    விவரிக்க வார்த்தைகள் இல்லை! காண்போரை அயர வைக்கும்!

    இருநூறு அடி ஆழத்திற்குக் கொட்டும் வெள்ளப் பிரவாகம்!
    இரு கண்கள் போதாது! கண்டவுடன் வரும் உற்சாகம்!

    பாசம் கூட நீருக்கடியில் மரகதமாய் மின்னுகிறது!
    பச்சை வண்ணப் பெருக்கெடுப்பாய் மனம் அதை எண்ணுகிறது!

    இரண்டாம் பகுதி ‘ VEIL OF BRIDE ‘ என அழைக்கப்படுகிறது!
    இரண்டாம் கருத்திற்கு இடமில்லை; பெயர் கச்சிதமாய் இருக்கிறது!

    வெண்மையான அடர்ந்த துணி மணமகளைத் தொடர்வதுபோல்
    வெண்மையான அடர்ந்த நீரும் நிலமகளைத் தொடுகிறது!

    [​IMG]

    ‘HORSE SHOE’ வடிவத்தில் மூன்றாம் பகுதி இருக்கிறது!’
    ‘HORSE SHOE FALLS’ எனப் பெயர் பெறுகிறது!

    [​IMG]

    இருநூறடி இறங்கவேண்டும் படகுத்துறை அடைவதற்கு;
    இரும்பால் அமைத்த “லிப்ட்” உண்டு நம்மை அழைத்துச் செல்வதற்கு!

    ‘MAID OF MIST’ எனப் படகுப் பயணத்தை அழைக்கின்றார்! – பின்
    ‘MAID OF MIST’ – ன் சோகக் கதையும் கூறுகின்றார்!

    நீல வண்ணத்தில் மழைக் “கோட்டு” அளித்துப் பின்னர்
    நீர்வீழ்ச்சிகளைக் காண அழைத்துச் செல்கின்றார்!

    படகு புறப்பட்டவுடன் மக்களின் ஆரவாரம்!
    இடதுபுறம் தெரிகிறது வானவில்லின் வண்ண ஜாலம்!

    கண்ணிமைக்க மறக்கிறது! ஏன்? சுவாசம் கூட நிற்கிறது!
    எண்ணிலடங்கா நீர்த்துளிகள் வண்ண மயமாய்த் தெரிகிறது!

    வானவில் ஒன்று தோன்றி நம்முடனே வருகிறது! – மறுகணமே
    வானவில்லின் பிரதிபலிப்பும் பளீரென்று வளைகிறது!

    இரட்டை வானவில்லும், நீர்வீழ்ச்சியின் அதிர்வுகளும்
    இரட்டிப்பு மகிழ்வளிக்கும், ஒலி ஒளி பிரம்மாண்டங்களாய்!

    :biglaugh தொடரும் .........
     
    1 person likes this.

Share This Page