1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ! அமெரிக்கா!

Discussion in 'Regional Poetry' started by rajiram, Apr 18, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Rukmani,
    Thanks for your comments. Please keep reading...
    Raji Ram :cheers
     
  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    விடுமுறை…

    வெள்ளி மாலை வந்துவிட்டால்
    துள்ளி குதித்துச் செல்கின்றார்!

    ஜோடியாய் வெளியில் சுற்றிக்
    குடித்துக் கும்மாளமடிக்கின்றார்!

    குடி குடியைக் கெடுக்குமென்று
    குடும்பப் பெண்கள் அறிந்தாலும்

    குடித்துத்தான் பார்ப்போமென – மது
    குடித்துவிட்டு மயங்குகின்றார்!

    ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ – என வேதாந்தம் கூறித்
    தாழ்வாக எதையுமே கருதத் தயங்குகின்றார்!

    :crazy . :drowning
     
    1 person likes this.
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பெற்றோர்…

    தந்தை தாய் இருவரையும் தம் வீட்டில் காப்பது
    தன் கடமை என்று எண்ண இங்கே எவருமில்லை!

    ஏன்? இந்தியாவிலும் இப்போது இப்படித்தானே! – என்று
    என் மனம் எண்ணத் தவறவில்லை!

    'மே ' மாதம் MOTHER’S DAY ; 'ஜூன் ' மாதம் FATHER’S DAY!
    வருஷத்தில் இரு நாட்கள் பெற்றோரை நினைக்கின்றார்!

    'பொக்கே' கொடுத்து, அவர்களின்
    பொக்கை வாய்ச் சிரிப்பைப் பார்க்கின்றார்!

    முதியோர் எல்லோரும் தாம் கடையில் வாங்கியதைப்
    பொதியாகச் சுமப்பது கண்டு மனம் கலங்கியது! – சென்னையிலும்

    காலைப் பாலும், 'ரேஷனும் ' வாங்கப் பெரியோரை அனுப்பி
    வேலை வாங்குவது கண்டு, வருந்தியது நினைவில் நிழலாடியது!

    :bonk
     
    1 person likes this.
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    குழந்தைகள்…

    சின்னச் சின்னக் குழந்தைகளைச் செல்லம் கொஞ்ச ஆளின்றித்
    தன்னுடனே அழைத்துச் செல்வார் தாம் போகும் இடமெல்லாம்!

    குழந்தையின் வயது சில நாட்களேயானாலும்,
    குழந்தையைத் துணியிலிட்டு மாலை போல் அணிகின்றார்!

    இரட்டைக் குழந்தைகளும் தூக்கக் கலக்கத்தில்,
    இரட்டைத் தள்ளுவண்டிகளில் சிணுங்கிச் செல்கின்றார்!

    'நானிகள்' என்போர்தான் குழந்தையைப் பாதுகாப்பர்! – அந்த
    'நானிகளின்' பழக்கம்தானே அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும்?

    கடல் கடந்து வந்து பொருள் தேடும் ஜோடிகள்,
    உடல் நொந்து போகிறார்கள் குழந்தை வளர்ப்பினால்.

    குழந்தை உருவாகி வளரும் காலத்தில், பெண்ணைக்
    குழந்தை போல் பேண அவள் தாய் உடன் இருப்பதில்லை.

    பேறு காலத்தின் கடைசி நிமிடம் பறந்து வந்து சேர்ந்திடுவாள்.
    வேறு வேலைகள் அனைத்தும் ஒதுக்கி, உதவி செய்திடுவாள்.

    ஆறு மாதத்திற்கு மேல் இருக்க விடாத விசா கெடுபிடிகளால்
    அன்னை சென்றதும், துணைவனின் அன்னை வந்திடுவாள்.

    ஓராண்டு இவ்வாறு ஓடியபின், சிலருக்கு மறுபடியும்
    ஓராண்டு காலம் ACTION REPLAY யாகச் சென்றுவிடும்.

    பெற்றோரும் முதியோராய்ப் போவதால், அடிக்கடி வந்து
    உற்ற துணையாக இருந்து உதவ முடியாது போய்விடும்.

    சின்னக் குழந்தைச் சிணுங்கலுக்கும் பயந்துகொண்டு – இவர்கள்
    என்ன செய்வதென அறியாது திகைத்து நின்றிடுவார்.

    வேலைக்கு இருவரும் செல்வதால் குழந்தை காக்கும்
    வேலைக்கு, DAY CARE – காப்பகங்களை நாடிடுவார். அங்கு

    டாலர் செலவுக்கும் பஞ்சமில்லை! ஒரு மாதத்திற்கு எழுநூறு
    டாலர் கொடுத்தால், ஒரு வாரத்தில் நாலு நாட்கள் ‘காத்திடுவார்’!

    குழந்தை பிறந்தது முதல் பிளாஸ்டிக் நாப்பியைக் கட்டுவதால்,
    குழந்தையின் நல்ல விளையாட்டும் தடைபட்டுப் போகிறது.

    குழந்தை வளர்ப்பு பற்றிப் பாடங்களைக் கற்று வந்தாலும்,
    குழந்தை வளர்க்க இந்தத் தலைமுறை திண்டாடி நிற்கிறது!

    :spin :spin :spin
     
    1 person likes this.
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தொலைக்காட்சியும், மெஷின்களும் …

    தொலைக்காட்சி

    தொலைக்காட்சியில் 'சானல்கள் ' நூற்றுக்கும் மேலுண்டு!

    கொலை, கொள்ளை, வன்முறை, பலாத்காரம் – என்று

    பலவற்றிலும் இதுவே ஒளிபரப்பு, நாள் முழுதும்!

    பலர் சேர்ந்து பார்க்க உண்டு, ஒரே ஒரு 'சானல் ';

    என்னவென்று சொல்லவா? அதுதான் weather 'சானல் ' !

    **********************************************************************

    'வாஷிங் மெஷின் '

    தினம் குளித்து ‘மடி’ போட்டு உடுத்துபவர்,
    மனம் வெறுப்படைவர் இங்கு வந்தால்!

    வாரம் ஒரு முறை துவைப்பதே மிக அரிது!
    பேரம் கிடையாது! ஒரு 'லோடு ' ஒண்ணரை டாலர்!

    வீட்டில் 'மெஷின் ' இருந்தால் துணிகளை எடுத்துக்கொண்டு
    ரோட்டில் செல்ல வேண்டாம், துவைக்கும் இடத்திற்கு!

    ஆனாலும் drier பல நிமிடம் சுற்றினால்,
    வீணாகக் 'கரண்ட் பில்' ஏறுமே? – எனவே

    ஒரு 'லோடு ' துணிகள் சேரும் வரை – இங்கு
    ஒருவருமே துவைக்கப் போவதேயில்லை!!

    **********************************************************************

    'டிஷ் வாஷர் '

    [​IMG]

    நித்தமும் சமையல் மிகச் சுலபம்! நறுக்கின காய்கறிகள்
    சுத்தமோ சுத்தம்! கீரையும் கூட! …… ஆனால்,

    சமைத்த பாத்திரங்களை யார் அலம்புவதாம்?
    சமைக்கும் நம்ம பசங்களின் பயமே இதுதானே?

    பாத்திரம் கழுவ ' டிஷ் வாஷர் ' இருந்தாலும்
    பாத்திரத்தில் ஒட்டினது போகவே போகாது! – நாம்

    அலம்பி அடுக்கி வைத்தால், ‘அது’ சோப்பு நீரில்
    அலசிக் காயவைக்கும்! ஆனால் யாருக்குத்தான் தெரியாது

    அந்த முதல் ‘அலம்பல்’ தான் கஷ்டமென்று? – மேலும்
    எந்த 'மெஷினும் ' நம்மையும் வேலை வாங்குமென்று!!


    **********************************************************************
     
    1 person likes this.
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வாழ்க்கை…

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் இங்கு!
    இப்படித்தான் வாழ வேண்டுமென்று உறுதி பூண்டு,

    காலையில் எழுந்து நீராடி, பூஜை புனஸ்காரங்கள் – நல்ல
    வேலையில் இருக்கும் சிலர் இங்கும் செய்கிறார்! – வீட்டு

    வேலைகளில் உதவி செய்ய எவரும் இல்லாததால் – நாமே
    வேலைகளை மெதுவாகச் செய்வோமென எண்ணி,

    நிதானமாய்த் துயிலெழுந்து, குளிக்காமல் சமைத்து வைக்கும்
    நம்ம ஊர்ப் பெண்களும் இங்கே இருக்கின்றார்!

    வீட்டில் சமைத்தால் இங்கு செலவு குறைவென்று
    வீணான நம்பிக்கை எல்லோருக்கும் இந்தியாவில்!

    பால், தயிர், புதிய காய்கறி, பழங்களென்று
    நல்ல சாப்பாடு இங்கும் நல்ல செலவுதான்!

    ஒரு முழ ரொட்டி ஒரு டாலர் – ஆனால்
    இரு தக்காளி ஒரு டாலர் – மேலும்

    மூணு ஆப்பிள் ரெண்டு டாலர் – மற்றும்
    நாலு குடமிளகாய் நாலு டாலர் ஆகும்!

    பெட்டியில் காசு சேர வேண்டுமென எண்ணி,
    ரொட்டியில் காலம் முழுதும் கழிக்க முடியுமா?

    காலை எழுந்து நீராடிக் கடவுளை வணங்கிவிட்டு,
    வேலைக்குப் போகுமுன் வீட்டிலே சாப்பிடுவது அரிது!

    வழியிலே காபியும், வடைபோல 'பேகலும்' வாங்கி
    வழியிலே சாப்பிடுவர்; நம்மவரும் அப்படித்தான்!

    BAGEL:

    இந்த ஊர்ப் பெண்களோ??

    ஒரு கையில் பீடி! மறு கையில் ஜாடி!!
    வேறு என்ன? சிகரெட்டும், காபியும்தான்!

    காணுமிடமெல்லாம் சாப்பாட்டுக் கடைகளுண்டு;
    வேணுமென்றால் வீட்டில் சமைக்காமலே இருப்பதுண்டு!

    நான் கண்ட தமிழர் பலர்
    ஆண் பெண் பேதமின்றித்

    தோள் அணைத்து வாழ்த்துவதைக்
    கண்டு கொஞ்சம் கூசினேன்!

    ‘நாடு விட்டு நாடு வந்தால்
    நாணமின்றிப் போகுமோ? ‘ – என்ற

    வண்ணத் திரையிசை வரிகள்
    எண்ணத்தில் அலை மோதின!

    நம் கலைகளை ஆர்வமாய்க் கற்ற சில அமெரிக்கர்,
    நல்ல தமிழ் பேசி, யோகா செய்ய விழையும்போது,

    தமிழ்க் குழந்தைகள், தாய் மொழி மறந்துவிட்டு,
    தமிழ் தெரியாததைப் பெருமையாய்ப் பேசும்போது,

    இனி நம் இனத்தோர் எல்லோரும்
    தனித் தன்மையின்றிப் போவோமோ?

    எனக்குள் எழுந்தது ஆதங்கம்!
    மனத்துள் நிறைந்தது சோகம்!!

    :crazy . . :crazy
     
    2 people like this.
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Raji,

    nice pictures and azhagana kavidhaigal...
     
    1 person likes this.
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you Prana.... Please continue reading!

    The elaborate version of our visit to the US is in 'PayaNak kavithaigaL' thread.

    The first part 'Kadal kadandha muthal anubavam' is over and the second part is ON...

    Pictures are added there too!

    Raji Ram :)
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கலாச்சாரம் …

    ****************************************************************

    CULTURE கிடைத்தது!

    இந்தியக் கலாச்சாரம் எங்கே போனது?

    தேடினேன்…. தேடினேன்…. கிடைக்கவில்லை!

    ‘வீட்டிலே தயிர் செய்ய CULTURE – இது

    இந்தியாவிலிருந்து வந்தது! ‘ என்று கூறிய நண்பி,

    ஒரு BOTTLE லில் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்தாள்!

    அட!!.. நம்ம கலாச்சாரம் BOTTLE - லில் கிடைத்தது!!

    ****************************************************************

    சட்டத்தை மதிப்பார்கள்!

    இவர்கள் எல்லோரும் சட்டத்தை மதிப்பார்கள்! – ஆனால்
    இவர்களில் பல்லோர் கற்பை மதிப்பதில்லை!

    அந்தரங்க வாழ்க்கை எல்லோருக்கும் உண்டு – அதை
    அந்தரங்கமாய்க் கொள்ளப் பலரும் நினைப்பதில்லை!

    இந்த ஜோடிகள் பலர் முன் செய்யும் ‘சேஷ்டைகள்’தான்
    இந்தியாவிலும் பரவுகிறது! இதை எண்ணி வருத்தம்தான்!

    ஆணுக்கும் கற்பு வேண்டும் என்று காப்பியங்களில்
    ஆணித்தரமாக அடித்துச் சொன்னவர்கள் – இங்கு

    ‘பெண்கள் விடுதலை’ – எனச் சொல்லி, இந்தப்
    பெண்கள் அடிக்கும் கூத்துக்களைக் கண்டால்,

    ‘ஏன் இக்காட்சிகளை நாம் பார்த்தோம்?’ – என்றும்
    ‘ஏனிந்த சமுதாயச் சீரழிவு?’ – என்றும் வருந்துவர்!

    ‘ஏற்றம் மிகு இந்திய மண்ணிலும் இதுதான்
    புற்றாகப் பரவுகிறதோ?’ – என்றும் கலங்குவர்!!

    ****************************************************************

    கோவில்கள்...

    Delaware Lakshmi temple:


    [​IMG]


    இந்தியர்கள் அதிகமாகக் குடியிருக்கும் இடமெல்லாம்
    இந்தியக் கோவில்கள் இருப்பதைக் கண்டிடலாம்!

    சுத்தமாய்த் தூய்மையாய் வைத்து இவைகளை
    நித்தமும் மிக அழகாய்ப் பராமரிக்கின்றார்!

    நாம் வணங்கும் பல்வேறு தெய்வங்களையும், இனிதே
    தாம் வணங்கிப் பூஜைகள் அனுதினமும் செய்கின்றார்!

    நான் தேடிய நம் நல்ல கலாச்சாரம் இக்கோவில்களில்
    தான் கண்டேன்! அதனால் மன மகிழ்ச்சி கொண்டேன்!

    சாப்பாட்டுப் பிரியர்கள் அதிகம் இருப்பதால் – இங்கு
    சாப்பிடவே ஆவலுடன் வருவோரும் அதிகம்தான்!

    பிரசாதம் வழங்குவதும் உண்டு! – ஆனாலும்
    பிரதானமாய் இருப்பது ருசியான உணவுகள்தான்!

    :biglaugh :biglaugh :biglaugh
    *******************************************************
     
    1 person likes this.
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கொஞ்சம் சிரிக்க …

    நான் நினைத்த LADY !


    சுரங்கப்பாதை ரயில் ஒன்றில் மிகக் கூட்டம் ஒருதடவை;
    இறங்க சில நிமிடப் பயணம்தானே என்று எண்ணிக்

    காலியாக இருந்த ஒரே ஒரு இருக்கைதனில், அமர்ந்தேன்
    ஜாலியாக! அடுத்திருந்த முகம் பார்க்க முடியவில்லை!

    இருண்ட நீண்ட தலைமுடி; ஜீன்ஸ் அணிந்து
    திரும்பி அமர்ந்திருந்தது அந்த உருவம்!

    நான் நினைத்தேன் LADY என்று! – இறங்கும்போது
    தான் கண்டேன், அதன் முகத்தில் தாடி ஒன்று!!

    ************************************************

    மட்டிப்பால்!

    பக்தியால் உருகி, ஆண்டவனை வணங்கிவிட்டு
    ‘மட்டிப்பால்’ ஏற்றினேன்; புகை பற்றி எண்ணவில்லை!

    அடுப்படி வேலையில் நான் மூழ்கியிருந்தபோது,
    ‘திடுக்’கென்று ஊதியது பெரிய 'சைரன்' ஒன்று!

    நான் கண்ட திரைப்படத்தில் இதே சத்தம் கேட்டுள்ளேன்;
    நான் எண்ணி பயந்ததுபோல் அது SMOKE ALARM தான்!

    ஏன் இதை நிறுத்தவே முடியவில்லை?
    என்று மனம் கலங்கித் தவித்தேன்!

    இரு நிமிடப் பொழுதில் கதவில் ‘டக் – டக்’!
    ‘வருகிறேன்’ – எனக் கூறிக் கதவைத் திறந்தேன்!

    ஆறரை அடி உயரம்! மூன்று அடி அகலம்;
    வேறு யார்? FIRE BRIGADE தான்! ஆறு பேர்!

    'SORRY ' எனக்கூறி, மட்டிப்பால் பற்றிச் சொன்னேன்;
    ‘சரி’ – என்று சென்றார்கள்! நல்ல வேளை; தப்பித்தேன்!

    :hide: :bonk :hide:

    ************************************************
     
    1 person likes this.

Share This Page