1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ! அமெரிக்கா!

Discussion in 'Regional Poetry' started by rajiram, Apr 18, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்க அனுபவங்களை, சுவையா, ரசிக்கும்படி இங்கே பகிர்ந்துக்கரதுல ரொம்ப சந்தோசம்.

    பார்க்கும் விஷயங்களில் உள்ள நல்லதை, சுவை குறையாம இங்கே பதிக்கற உங்க பாணி ரொம்ப நல்லா இருக்கு. :thumbsup

    தொடருங்கள் உங்கள் பணியை. நான் அடிக்கடி வரலேன்னாலும், வரும்போது உங்க பதிவுகளை விட்ட இடத்திலே இருந்து படிச்சுடிரேன். :)
     
    1 person likes this.
  2. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Hi raji,

    very true. Though india looks westernized it is only by looks. there are so many good things to be learnt from them. There the beggars roam in suits, here it's not so. That's why such things of India sounds new to them. ha.ah.a... nice poems. Keep sharing.
     
    1 person likes this.
  3. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hello,

    too good. Your writing skill i have to search words in the dictionary. Your bonvoyage is enjoyable one.
     
    1 person likes this.
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Veni, Mira and Sree!

    Thanks a lot for your feed back and happy to note you like the write up!

    I started writing such poems only during our first visit to the US, when our son was not married.... it was in 2003! I have written in detail, about the entire trip in the thread பயணக் க(வி)தைகள் - கடல் கடந்த முதல் அனுபவம். This is the shorter version of those experiences! Some lines might have appeared in the detailed version too.. Still short is sweet :thumbsup

    In the same thread, now I am posting the experiences during our second visit in 2009, this time our son married! Hope you will read them too!

    Raji Ram :cheers
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வண்டிகள்…

    பாலை விடப் பெட்ரோல் மிக மலிவு! – அதனால்
    சாலைகளில் வண்டிகள் போவதில் குறைவில்லை!

    கார் கிடைக்கும் குறைவான வாடகைக்கு – அதனால் நம்
    கார் டயர்கள் தேய்க்காமல் நெடுந்தூரம் போய் வரலாம்!

    அடுக்கடுக்காய்க் கார்களை ராக்ஷஸ வண்டிகள்
    எடுத்துப் போவதைப் பலமுறை காணலாம்!

    [​IMG]

    ஒரு ஊர் 'ஏர்போர்ட்டில்' வண்டி எடுத்து – நாம் போகும்
    வேறு ஊர் 'ஏர்போர்ட்டில்' விட்டுவிட வசதியுண்டு!

    மிகப் பெரிய நகரத்தில் மிகவும் நெரிசல்தான்!
    மிகப் பெரிய வேலைதான் வண்டி அங்கு ஓட்டுவது!

    வண்டி இருப்போரும் வேலைக்குச் செல்ல அதைக்
    கொண்டு செல்வதில்லை; தினம் 'சப்வே' பயணம்தான்!

    :spin :spin
     
    1 person likes this.
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    சென்று வந்த அனுபவங்களை இங்கே எங்களோடு புதிதாய் அறியும்படியும், ரசிக்கும் படியும் அழகா சொல்லிடு வரீங்க.

    என்றும் தொடருங்க இந்த பணியை. அவசியம் வந்து படிக்கிறோம் :)
     
    1 person likes this.
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Jaya,

    Thanks for your compliments.... Yes! I will definitely share my experiences with my friends here. The third trip overseas is due in middle of June and hope to submit new pages too!!

    Raji Ram :)
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஆடைகள்…

    சூரிய ஒளி கண்டுவிட்டால் ஆடைக் குறைப்பு ஆரம்பம்!
    சூரிய ஒளி கண்டு நம் கண்கள் கூசுவதைவிட – இந்த

    ஆடை அலங்கோலம், கண் கூச வைத்து விடும்! – இதே
    ஆடைக் குறைப்பைத்தான் கற்கின்றார் நம் பெண்கள்!

    வேதனைதான் தோன்றும் இந்த மதி கெட்ட மாதர் கண்டு!
    வேறு நற்பண்புகளை இவர்கள் ஏன் கற்பதில்லை?

    கண்ணோட்டம் சரியில்லை என்பார் சிலர்!
    மண்ணில் மனிதப் பிறவியே நாம் அல்லவா?

    ஆடையின்றித் திரியும் விலங்குகள் என்று,
    ஆடை குறைத்து நாமும் உலவ முடியுமா?

    :hide:
     
    1 person likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது போல் நம்மவர்கள் பிறரிடம் இருந்து என்றும் நற்பண்புகளை கற்று கொள்வதே இல்லை.பயண கவிதை சுவையாக உள்ளது.
     
    1 person likes this.
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    சிறந்த ஆடைகள்...

    ஒருவர் வீடு இல்லை என்ற பலகை வைத்து
    வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டாலும்,

    கோட்டு அணிந்து கொண்டுதான் கேட்பார்!
    ரோட்டில் வந்து தொப்பியைக் காட்டுவார்!

    கழிவறைகள் சுத்தம் செய்யும் பெண்களும்,
    அழகுற ஆடைகளையே அணிந்திடுவார்!

    குப்பை லாரி என்று நாம் ஏளனம் செய்யும்
    குப்பை வண்டிகள் ஓட்டுபவரும், 'ஸ்டயிலே'

    ஹீரோ போலவே வந்து, மிக பந்தாவாக
    He Man கணக்காய் டிராஷ் பை எடுப்பார்!

    உடையை வைத்து எடைபோடுவது, இங்கு
    உடனே நாம் அறிந்துகொள்ள முடியாதது!

    :hide: . . :idea
     
    1 person likes this.

Share This Page