1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ! அமெரிக்கா!

Discussion in 'Regional Poetry' started by rajiram, Apr 18, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எண்ண அலைகள் ...

    புதிய சுற்றுச்சூழல்கள்; புதிய வாழ்க்கை முறைகள்;
    இனிய எம் முதல் அமெரிக்க விஜயத்தில் கண்டது!

    எண்ணங்கள் அலைகளாய் மனதில் வந்து மோத,
    எண்ணங்கள் வருகின்றன, புதுக் கவிதைகளாக!

    அமெரிக்காவின் நியூயார்க்கில் என் காமராவில் சிக்கிய,
    அமர்க்களமாக, ஆகாய தேவனின் கண் போல மின்னிடும்

    அந்த ஆதவனின் புகைப்படத்தை முன்னிறுத்திவிட்டு,
    இந்தப் பகுதியைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!

    [​IMG]

    உலகம் உய்ய வேண்டும், :bowdown
    ராஜி ராம்
     
    1 person likes this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இனி அமெரிக்காவை சுற்றிக்காட்ட போகிறீர்களா? காத்திருக்கிறோம்
     
    1 person likes this.
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பண்பு…

    வெளியில் நாம் சென்றால், எதிர் வருவோர் நம்மிடம்
    துளியும் தயங்காமல், வாழ்த்துத் தெரிவிப்பர்!

    அழகான புடவை உடுத்திச் சென்றால் – அது மிக
    அழகாக இருப்பதாய்ப் பாராட்டும் தெரிவிப்பர்!

    ஒரு கதவைத் திறந்து, நாம் உள்ளே சென்று – நம் பின்
    வருவோருக்காக, அதைப் பிடித்து நின்றால்,

    'நன்றி' – எனச் சொல்வார்கள்; புன்னகை புரிவார்கள்!
    சின்னச் சின்ன உதவிகளுக்கும், உடன் நன்றி பாராட்டும்,

    இந்தப் பண்புதான், இன்னும் நாம் கற்கவில்லை!
    இந்தியாவிற்கு, இங்கிருந்து நல்லவை போகவில்லை!!

    :hide:
     
    2 people like this.
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Priya,

    அமெரிக்க அனுபவங்களைப் படங்களுடன் "பயணக் க(வி)தைகளில்", 'கடல் கடந்த முதல் அனுபவம்' என எழுதியுள்ளேன்! 'கடல் கடந்த இரண்டாம் அனுபவம்' நாளை அதே 'நூலில்' தொடரும்...

    இங்கு நான் தருவது, நான் அமெரிக்காவில் பார்த்த பொதுவான விஷயங்களையே!

    Keep reading, please,
    Raji Ram :coffee
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நிச்சயமாக படிப்பேன் ராஜி....பொதுவான விஷயம் என்றதும் ஒன்று நினைவிற்கு வருகிறது....சாம்ப்ராணி புகை போட்டால் ஏதோ எச்சரிக்கை ஒலி வரும் என்று படித்த நினைவு.... அதையும் இங்கே கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் பிளஸ்...
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ராஜி இன்னும் ஒன்றை விட்டு விட்டீர்கள்.வரிசையில் நிற்கும் போது ஒருவரைஒருவர் இடிக்காமல் இடைவெளி விட்டு நிற்பது எனக்கு மிகவும் பிடித்த பண்பு.தொடருங்கள் உங்கள் பயணத்தை.
     
    1 person likes this.
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Rukmani,

    எத்தனை சந்தோஷம் தங்கள் பின்னூட்டம் கண்டு! கொஞ்சம் சுருக்கமாகவே இங்கு சொல்லி இருக்கிறேன்!
    விரிவான அனுபவங்கள் இரண்டு பகுதிகளாக, 'பயணக் க(வி)தைகளில்' எழுதியுள்ளேன்! Please read and enjoy!!

    Regards,
    Raji Ram :cheers
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Priya!

    கட்டாயமாக! என் 'மட்டிப்பால்' அனுபவம் வந்துகொண்டே இருக்கிறது!!!!

    Best wishes,
    Raji Ram
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    சாலைகள்…

    சாலைகள் பராமரிப்பு மிக உன்னதம் – இருபுறமும்
    சோலைகள் போல ஓங்கி உயர் நெடுமரங்கள்!

    நெடுஞ்சாலை இருபுறமும் நான்கு வழிப் பாதைகள்;
    எதிர்வருவோர் எப்போதும் வருவதில்லை நம் பக்கம்!

    அறிவிப்புப் பலகைகள் மிக நேர்த்தி! – பயணத்தால்
    களைத்தவர்கள் இளைப்பாற ” EXIT ” – களில் உணவகங்கள்!

    எல்லோருக்கும் தொலைதூரம் செல்வது பழகியதால்
    பல்வேறு வசதிகள் செவ்வனே செய்கின்றார்!

    இரவுகளில் “ஹைவேயில்” இனிய பயணங்கள்!
    இருவழிப் பாதைகளில் ஓடும் வண்டிகளின்

    வண்ண விளக்கு ஒளிகள் கொள்ளை கொள்ளும் நம் மனதை!
    வண்ணம் இரண்டு ஒளிர்ந்து எண்ணத்தில் நிலைத்து நிற்கும்!

    முன் செல்லும் விளக்கு ஒளிகள் மாணிக்க மாலை போல;
    முன் வரும் விளக்கு ஒளிகள் வைரக்கல் மாலை போல!

    வண்ணமாய்க் கண்களை நிறைத்துவிடும் – இது
    திண்ணமாய்ச் சொல்லுவேன், புதிய அனுபவம்தான்!

    [​IMG]
     
    2 people like this.
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வேலை…

    எந்த வேலையும் தாழ்வில்லை இங்கு;
    அந்த விஷயம் மிகவும் நல்லதுதான்!

    தானே 'டிக்கட்' கொடுத்து, தானே 'பஸ்' துடைத்து,
    தானே அதை ஓட்டி, தானே 'ட்ராஷ்' எடுக்கும்,

    'பஸ்' ஓட்டுனர்?….. இல்லையில்லை!
    'பஸ் பாதுகாப்பாளர்' கண்டு, அதிசயித்தேன்!

    ‘அண்ணே! அண்ணே!’ என்று நம்ம ஊரில்
    பின்னே சென்று, பணிவுடன் உதவி,

    டீ யும், கூடவே அடியும் வாங்கும் அந்தக்
    'கிளீனர் ' வாண்டுகள், இங்கே கிடையாது!

    பாம்பாட்டி நாடென்று நம் நாட்டைக் கூறுவோர் – இங்கு
    பாடும் ‘நடுத்தெரு நாயகர்’ பற்றி ஏன் சொல்வதில்லை?

    ‘பணமில்லையேல் பாட்டில்லை’ – என அறிவிப்பு வைத்துப்
    பணம் சேர்க்கப் பொது இடத்தில் பாடுவோர் பலருண்டு!

    தெருவில் வித்தை காட்டுவோரும் இங்கு உண்டு!
    ஒரு நாளில் பல டாலர் நோட்டுக்கள் தேறுமாமே?

    :rotfl . . :biglaugh
     
    1 person likes this.

Share This Page