1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*ஒரு நிதர்சனமான உண்மை.*_

Discussion in 'Interesting Shares' started by Ragavisang, Apr 13, 2021.

  1. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    357
    Likes Received:
    443
    Trophy Points:
    123
    Gender:
    Female
    *ஒரு நிதர்சனமான உண்மை.*_

    _கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்._

    _அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது._

    _அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது._

    _வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது._

    _கைதட்டல்கள் முடிந்ததும், கவிஞர் கண்ணதாசன் சொன்னார்,_

    _''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல._

    _உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்._

    _அது மிக நன்றாக இருந்தது._

    _எனவே..._
    _நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு..._

    _அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்._

    _என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை._

    _அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு._

    _ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய...._

    _சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது."_
     
    Thyagarajan and dvl like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    12,749
    Likes Received:
    13,485
    Trophy Points:
    615
    Gender:
    Male
    இத்தனை நாளும் அறியேனே
    இது தானோ கண்ணதாசன் கண்ணதாசன்
    கண்ணா....கண்ணா......
     

Share This Page