1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"ஒரு கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்,'

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Jul 31, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [h=3]மன்னர் ஒருவருக்குத் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்களின் இன்ப துன்பங்களை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விநோத ஆசை ஏற்பட்டது. அதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டார்.[/h]அடுத்த நாளே மன்னரின் பயணம் தொடங்கியது. நாட்டின் குக்கிராமத்திற்குக் கூட அவர் செல்ல விரும்பியதால் சில இடங்களில் வாகனங் கள் எதுவும் செல்ல முடியவில்லை. கால் நடையாகவே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
    இவ்வாறு தனது நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார் மன்னர். நிறைய கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்றதால், அவரது கால் பயங்கரமாக வலித்தது.
    உடனே அமைச்சரை அழைத்து, ""இந்த நகரத்தின் சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக இருப்பதால் நடப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே நாட்டில் உள்ள அத்தனை சாலைகளிலும் விலங்கு களின் தோலைப் பரப்பி, நடப்பதற்கு எளிதாக இருக்குமாறு செய்ய வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.
    விலங்குகளின் தோலைக் கொண்டு சாலை அமைப்பதென்றால் ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொல்ல வேண்டியது வரும். அதற்கு நிறைய செலவாகும்.
    இந்த உண்மையை மன்னரிடம் சொல்வதற்கு அமைச்சர் தயங்கினார். மற்றவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்களே தவிர, யாருக்கும் மன்னரிடம் சொல்கிற தைரியம் வரவில்லை.
    அப்போது வாயிற்காவலன் ஒருவன் மட்டும் தைரியமாக மன்னர் முன்னே சென்று வணங்கி, ""ஒரு கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்,'' என்றான் பணிவாக.
    உடனே மன்னர், ""சொல்'' என்றார்.
    ""விலங்குகளின் தோல்களால் சாலை அமைப்பது நல்ல யோசனைதான். அதற்கு நிறைய பொருள் செலவாகும். கணிசமான அளவில் விலங்குகளையும் கொல்ல வேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக, மிருதுவான தோலினால் ஆன காலணி ஒன்றைத் தயாரிக்கச் சொல்லி அதனைத் தாங்கள் அணிந்து கொள்ளலாம் மன்னா,'' என்றான் அந்தப் பணியாள்.
    இதைக் கேட்டு வியப்படைந்த மன்னர், இந்தப் பணியாளின் யோசனையை ஏற்றுக் கொண்ட தோடு, உடனடியாகத் தனக்கு காலணி தயாரிக்க உத்தரவிட்டார்.
    அமைச்சர்கள் உட்பட, அனைவரும் அவனை பாராட்டினர். மன்னர் அவனைப் பாராட்டி பரிசுகளை கொடுத்தார்


     
    2 people like this.
    Loading...

  2. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Re: "ஒரு கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும&#302

    நல்ல கருத்து !
     

Share This Page