1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"ஐடியா"..உன்னை தேடித்தேடி.....

Discussion in 'Posts in Regional Languages' started by kkrish, Dec 29, 2010.

  1. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மீனா சங்கரன் என்னை தமிழில் எழுத ஊக்குவித்தார்கள். தெரியும், நீங்க எல்லாரும் “இது என்னடா புதிய சோதனை”ன்னு :eek:mg:தலைல கை வச்சு இருக்கீங்கன்னு!

    பாவம் மீனா; அவுங்க மேல் உங்க கோப கண்கள் திரும்பருத்துக்குள்ளே:rant அவர்களிடம் நான், காதலிக்க நேரமில்லை சினிமாவில் நாகேஷ் சார் ரவிசந்திரன் சாரிடம் சொல்வாரே, “……இந்த கத….கத மட்டும்தான் கிடைக்கலே….”ன்னு, அந்த ஸ்டைலில் “……இந்த “ஐடியா”…..”ஐடியா” மட்டுந்தாங்க கிடைக்கலே” ன்னு சொன்னாலும் உள்ளுக்குள்ளே அந்த ஆசை மட்டும் போகலே.:hide:

    “கிருஸ்துமஸ்” அன்று பகல் பால் பாயாசத்தோடு சாப்பாட்டு வேலை எல்லாம் முடிந்த பிறகு, என்னவோ “ரூம்” போட்டு யோசனை செய்கிறார்களே, நாமும் செய்து பார்போம் என்று நினைத்தேன்.
    முதலில் வினாயகரிடமே கேட்போம்:bowdown என்று பூஜை அறையில் சென்று உட்கார்ந்தேன். ஆனால் அங்கே என் வீணை ரூபத்தில் வீற்றிருந்த ஸ்ரஸ்வதி தேவி என்னை பார்த்து, “வீணை பயிற்சி செய்யாமல், என்ன இது எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை?” என்று கோபமாக கேட்பது போல் இருந்தது.

    “விடு விடு” வென்று அந்த இடத்தை விட்டு “கம்ப்யுட்டர்” அறைக்கு சென்றேன். “ஐடியா” ப்ரவாகமாக வர வர அதை நான் உடனே பதிவு செய்யலாம் இல்லையா?Computer Typing ஆனால் அங்கே என் கணவர் இருந்தார். அதனால் பெரிய பிரசினை ஒன்றும் இருக்காது என்று நான் நினைத்தது தவறாகி விட்டது. பேச ஆள் கிடைத்தால் போதும் என்பது போல் அவர், “செல் போன் –"அன்லாக்”, "ஜெயில் பிரேக்” என்று ஆரம்பித்துவிட்டார்shakehead.

    தப்பித்தேன் பிழைத்தேன் என்று என் பிள்ளைகளின் அறைகளுக்கு சென்றேன். பிறகுதான் ஞாபகம் வந்தது அவர்கள் இருவரும் விடுமுறையில் வீட்டில் இருப்பது.

    மிச்சம் இருந்தது என் படுக்கையறை. யார் தொந்தரவும் இல்லாமல் யோசிக்க இதுதான் நல்ல இடம் என்று தலையனையில் தலை வைத்தேன்.
    கண் திறந்து பார்த்தால் மணி மூன்று. இரண்டு மணி நேரம் எங்கே சென்றது?.

    கீழே இறங்கி வந்ததும், “நல்ல்ல்….லல தூக்கமா?” என்று கணவர் வரவேற்றார். வெளியே எட்டி பார்த்தேன். “ஸ்னோ” பெய்ய ஆரம்பித்திருந்தது.

    சென்ற வாரம் அவர்கள் ஊரில் “ஸ்னோ” வந்தபொழுது மீனா சங்கரன் சுட சுட பஜ்ஜியும், “பில்ட்டர்” காபியும் :coffeeசாப்பிட்டதாக சொன்னார்கள்.
    சரி, அவர்களை போல் எழுததான் முடியவில்லை, அவர்கள் செய்தது போல் பஜ்ஜியாவது செய்யலாம் என்று நினைத்தேன். மடமடவென்று உருளையும், வெங்காயமும் எடுத்தேன், ப்ஜ்ஜி மாவை கரைத்தேன். பஜ்ஜிகளை தயாரித்தேன்.

    “பில்ட்டர்” காபியுடன் சுடசுட ப்ஜ்ஜிகளை சுவைத்தேன், ரசித்தேன்.

    இந்த “ஐடியா”:idea மட்டும் இன்னும் வந்தபாடில்லை. அதுக்கெல்லாம் “ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்”ன்னு சொல்றீங்களா?
    அதுவும் சரிதான். சட்டியிலிருந்தாதானே அகப்பையிலே வர…..
     
    Last edited: Dec 29, 2010
    Loading...

  2. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Kamala,
    Super-a irundhadhu unga first tamil snippet.

    And also thanks for writing the above portion. Now I understand why DW runs out...oh! so, it could be that me talking gadgets makes her run out. அப்படிதான் இருக்குமோ!?? :hide:
     
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Super-a irundhadhu unga first tamil snippet.

    மிக்க நன்றி பீட்டர் பார்க்கர்!:bowdownYour appreciation means a lot to me!

    And also thanks for writing the above portion. Now I understand why DW runs out...oh! so, it could be that me talking gadgets makes her run out. அப்படிதான் இருக்குமோ!??

    அப்படியேதான்! பாவம் உங்கள் மனைவி; அவர்கள் படும் கஷ்டத்தை என் பதிவின் மூலம் அறிந்து கொண்டீர்களே!:cheers ஒரு அபலையின் வாழ்கையில் விளக்கேற்றி வைத்த திருப்தி எனக்கு! "...even if it helps one person, it is worth it..." என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள்; அது போல்.:)
     
    Last edited: Dec 29, 2010
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflமீனா எழுத்தை படிக்கையில் எனக்கு வரும் சிரிப்பில், கொஞ்சமும் குறையவில்லை உங்கள் பதிவை படிக்கையிலும்...
    உங்க பதிவை பார்த்ததும் எனக்கு IDEA சிம்கார்ட் விளம்பரம் ஞாபகம் வந்துவிட்டது..."சர்தார்ஜி.. ஒரு ஐடியா உங்க வாழ்க்கையையே மாற்றும்".

    நல்லா எழுதுறீங்க...தொடர்ந்து கண்டிப்பா எழுதுங்க...வாழ்த்துக்கள்!!!!!:thumbsup:thumbsup
     
  5. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    அதுதான் அக பய்யிலிரிந்து அகபைக்குள் வந்தாச்சே! அப்பரம் என்ன கவலை. நல்ல interesting -ஆ இன்ருந்துது உங்க முயற்சி பண்ணின விதம். இனி த்யர்யமாய் எங்களுக்கு பரிமாறுங்கள். காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.
     
  6. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Dear Kamala.
    :biglaugh:biglaughIdea vandhadho illayo enaku siripu vandhiruchu:cheers
     
  7. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அன்புள்ள கமலா
    உன்னுடைய முதல் கட்டுரை அற்புதமாக உள்ளது. ரொம்ப நன்றாகவும் நகைச்சுவை ஆகவும் எழுதி இருக்காய் . இன்னும் நிறைய எதிர் பார்கிறோம
     
  8. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக்க நன்றி தேவப்ரியா!
    நான் அடுத்த முறை அந்த விளம்பரத்தை கவனமாக பார்க்கிரேன்!
    உங்கள் "encouragemnet" டும் அன்பான வார்தைகளும் என்னை மகிழ வைக்கின்றன. உன்மையாகவே என்னிடம் ஐடியா இல்லைங்க!
     
  9. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மீரா! உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!
    I was glad it brought you a smile! I really have no idea what to write! But when I see other articles I think, "oh I could have written about that".

    Will try! You are a good writer too!
     
  10. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Raba
    A compliment from a good writer like you is really my honor and provilege.
    Innum idea varavillai. Miravidam naan sonnashu pol, matravargal articles paarthathum, adadaa idhai naan en ninaikkavillai endru ennikkolven!

    Thanks much
     

Share This Page