1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏன் வரவில்லை????

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 22, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    K Dear. Will be waiting for that:)
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அனிதா,

    எனது கவிதை படித்து, ரசித்து, கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல. வருடக் கணக்கிலான ஏக்கம் தோழி. மனதின் வலியில் ஜனித்தவை.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அவன் பிறந்தது வேறு அன்னைக்கு,
    நீ பிறந்தது தெரியாது அவனுக்கு அன்றைக்கு,
    இதனால் வரவில்லை உனைக் கொஞ்சி மகிழ.

    நீ பிறந்தது அறியாத அண்ணனுக்கு,
    பள்ளிக்கு கை பிடித்துச் செல்ல வாய்ப்பு,
    இல்லாதே போனதில் அவனும் வருந்துகிறான்.

    பதக்கங்களும், பட்டமும் நீ வாங்கிய பொழுது,
    உடன் இருந்து கொண்டாட அவன் அது அறியலயே.

    தங்கை அவள் திறன் கொண்டவள்,
    திறமைகள் பல கொண்ட பெண்ணவள்,
    என்ற எண்ணம் அவனுக்கு, அறியாத தங்கை எனினும்,
    இது அறிந்திருந்தான் போல் இருக்கிறது, உடன் பிறக்காமலே.

    வாழ்க்கையே இந்த நாடகம் நடத்தும் பொழுது,
    உன் நாடகம் காண வராதது விந்தை இல்லையே.

    உற்றவனை கைப்பிடித்த போதும்,
    பெற்றவனை அள்ளிக் கொஞ்ச அருகில் இல்லாத போதும்,
    உன் போல் தங்கை இல்லியே என எண்ணி அவனும் தவித்திருப்பானோ?

    சிறப்பான தருணங்கள் இன்னும் உன் வாழ்வில்,
    நிறைய இருக்கின்றன, இனிவரும் அத்தருணங்களில்,
    இப்பொழுது வந்த அண்ணன், அன்புத் தங்கையின் ஏக்கங்களையும்,
    ஆசைகளையும், கண்டிப்பாக நிறைவேற்றி, அவன் இழந்த பாசத்தையும்,
    உன் போல் தங்கையிடம் இரட்டிப்பாக பெற்று மகிழ்வான். கவலை மற வேணி கண்மணியே.

    வந்துவிட்டான் அண்ணன் ஒருவன் என்று நம்புகிறேன்.

    (** இப்பொழுது கிடைத்த தங்கைக்கு, அந்த அண்ணனின் கவிதை மறுமொழி**)

    வேணி உங்கள் அண்ணன் ஏன் வரவில்லை கவிதை அருமை.

    இப்பொழுது ஒரு அண்ணன் கிடைத்திருந்தால், அவன் இப்படித்தான் பதில் சொல்லியிருப்பான்.
     

Share This Page