1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 4, 2016.

 1. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  10,104
  Likes Received:
  4,374
  Trophy Points:
  490
  Gender:
  Female
  அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
  அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


  அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

  ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

  அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
  அன்புடைய மாமனும் மாமி யும்நீ
  ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
  ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
  துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
  துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
  இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
  இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.
   
  uma1966, IniyaaSri, PavithraS and 2 others like this.
  Loading...

 2. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  5,257
  Likes Received:
  10,386
  Trophy Points:
  438
  Gender:
  Female
  Rules have already changed inTamilnadu Govt.Even when when both parents are alive and there is perfect harmony one can have initials of mother.It is quite legal. Nobody can question you or ask for legal document.Days are changing madam.

  Can be argued anyway-matha pitha guru deivam enru thaan solgirom and not pitha , matha.
  In olden days there was so much of insult heaped on those children-karna was the classic example.
  Children born out of illegal relationship were treated with contempt.With Test Tube babies artificial insemination processes and IVF procedures and surrogate mothers ,the sanctity of fatherhood or motherhood is totally lost and legal and ethical significance also is slowly disappearing.
  In case of legal adoption, the identity of biological parents is not conveyed to adoptee parents,and after the legal court order, the child gets the initials of adoptee mother or father.

  Adopted children and kids born thro surrogacy, who are very sensitive about their birth and parentage may raise strong objection to what you say.
  jayasala 42
   
 3. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  10,104
  Likes Received:
  4,374
  Trophy Points:
  490
  Gender:
  Female
  உங்கள் பின்னூடத்துக்கு மிக்க நன்றி...நான் அப்பா பேர் மட்டும் தான் முதலெழுத்தாக பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவே இல்லையே....ஏன் பயன்படுத்துகிறோம் என்று தான் போட்டிருக்கிறேன்.......அவ்வளவுதான்.........மற்றபடி அம்மா பேரை உபயோகிக்கக் கூடாது என்றோ, அப்பா பேர் மட்டும் தான் போடணும் என்றோ நான் சொன்னால், மற்றவர்கள் என்னைக் கேள்வி கேட்பார்கள் என்று நீங்க சொல்லலாம் :)

  single parent பெருகிவரும் இந்தக் காலத்தில் நாம் மேலே சொன்னது, "ஒ! முன்காலத்தில் அப்படி இருந்ததா?" என்று தெரிந்து கொள்ளத்தானே தவிர வேறில்லை.......மேலும் அப்போதே அம்மா பேரை சேர்த்து சொன்னது இல்லியா? " கொந்தேயன்"....என்று குந்தி புத்திரர்களையும் "ராதேயன்" என்று கர்ணனையும், அம்மா பேரை சேர்த்து சொல்லி இருக்கிறார்களே? .............:)

  அன்புடன்,
  கிருஷ்ணாம்மா :)
   
  jayasala42 likes this.
 4. PavithraS

  PavithraS Platinum IL'ite

  Messages:
  2,045
  Likes Received:
  4,127
  Trophy Points:
  290
  Gender:
  Female
  :blush:
   
  Last edited: Apr 10, 2016
 5. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  5,257
  Likes Received:
  10,386
  Trophy Points:
  438
  Gender:
  Female
   
 6. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  5,257
  Likes Received:
  10,386
  Trophy Points:
  438
  Gender:
  Female
  Thank you for your reply.I just wrote the facts, not with a view to hurt or threaten you.Ordinarily 'the initial' is a sensitive topic.
  Kauntheya,Raadheya ,kausalya supraja,sumitranandan etc are only literary ways of addressing.Naam kooda 'ithu en akka pillai 'enru pechchu vazhakkil solvom.
  But
  'initial'in a name has a well recognized official and legal sanctity.

  Jayasala 42
   
  krishnaamma likes this.
 7. IniyaaSri

  IniyaaSri IL Hall of Fame

  Messages:
  3,681
  Likes Received:
  5,382
  Trophy Points:
  415
  Gender:
  Female
  @krishnaamma ,
  இது எனக்கு முற்றிலும் புதிய தகவல். பகிர்ந்ததருக்கு மிக்க நன்றி. எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தனி பட்ட முறையில் என் தந்தை, என்னுடைய தாயின் முதல் எழுத்தையும் சேர்க்கவேண்டும் என்றதால் என்னுடைய பெயருக்கு முன் என்னுடைய தந்தை மற்றும் அன்னையின் முதலெழுத்தையும் கொண்டுள்ளேன்.
  எப்படியானாலும் புதிய சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி :blush::blush::blush:
   
  krishnaamma likes this.
 8. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  10,104
  Likes Received:
  4,374
  Trophy Points:
  490
  Gender:
  Female
  sensitive topic தான், நான் ஜஸ்ட் விவரத்துக்காகத்தான் சொன்னேன் :) ..மிக்க நன்றி !
   
 9. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  10,104
  Likes Received:
  4,374
  Trophy Points:
  490
  Gender:
  Female
  மேலே ஜெயா மா சொன்னது போல இப்போ காலம் ரொம்ப மாறிப் போச்சு இனியா :)............நான் மேலே போட்டது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளத்தான்..........உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி !
   
  IniyaaSri likes this.
 10. uma1966

  uma1966 Platinum IL'ite

  Messages:
  1,192
  Likes Received:
  867
  Trophy Points:
  208
  Gender:
  Female
  @krishnaamma
  இந்த பதிவின் மூலம் தெரியாத தகவலை தெரிந்து கொண்டேன். முதலில் கருவை சுமந்தவர் அப்பாவா.. ஆச்சர்யமான விஷயம் . மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
   
  krishnaamma likes this.

Share This Page