1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எழுத்தும் நாடும், கண் எனத்தகும்.

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Sep 8, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: எழுத்தும்
    நாடும், கண் எனத்தகும் :hello:

    வ உ சிதம்பரனாரின் வாரிசுகளை, ஆளுநர் தன் மாளிகைக்கு அழைத்து கவுரவித்துள்ளார் ஆளுநர் ரவி.
    தமிழகத்தில் முதன் முதலாக தங்கள் முன்னோர் இந்நாட்டுக்காக இழந்த வாழ்க்கைக்கு, சொத்தையும் வாழ்வையும் இழந்து தங்களை வறுமையுற்றோராக்கினாலும், நாட்டுக்காக செய்த தியாகத்துக்கு உரிய மரியாதை கிடைத்ததை எண்ணி அந்த வாரிசுகள் மகிழ்கின்றார்கள்.
    நிஜமாக ஆளுநர் செய்திருப்பது மிகபெரிய கவுரவம்*, சரியாக செய்யபட்ட மரியாதை.

    *புகைப்படம் கீழே காண்க

    நிச்சயம் அந்த வ.உ.சி கப்பல் ஓட்டாமல் இருந்திருந்தால், அவரின் சொத்து பல்லாயிரம் கோடிகளாக பெருகியிருக்கும், இன்று வ உ சியின் சொத்து அப்படி.
    பாரதி - நாடும் இந்துமதமும் - எழுதாமல் "பரணியின் செல்வன்" "மோக முள்" "விஷ்ணு புரம்" "நைலான் கயிறு" என எழுதியிருந்தால் அவன் வம்சம் எவ்வளவோ சம்பாதித்திருக்கும்.

    அவன் பத்திரிகையினை தேச அபிமானமின்றி
    தன் பணத்திற்காக வம்சதிற்காக நடத்தியிருந்தால் இன்று விகடன், இந்து குழுமம் போல் பாரதி குடும்பம் எங்கோ நின்றிருக்கும்.

    தாகூர் போல வெள்ளையனை பாடினால், அவனுக்கு நோபல் பரிசே கிடைத்திருக்கும்.

    அப்படி வளமான வாழ்வை தூக்கி எறிந்து, நாட்டுக்காக தாங்களும் கெட்டு, தங்கள் வம்சத்தையும் பரிதாபத்துகுரியவர்கள் அவர்கள்.

    எந்த நாட்டுக்காக சொத்தை இழந்தார்களோ, அந்த தேச அரசு அவர்கள் வாரிசுகளை அரவணைப்பது சரியானது. ரவி அதை செய்திருக்கின்றார். அவருக்குவாழ்த்துக்கள்.
     
    Last edited: Sep 8, 2022
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male

Share This Page