1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எல்லாம் நன்மைக்கே...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, Jan 9, 2011.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ஒவ்வொரு தோல்வியின் போதும்
    எல்லாம் நன்மைக்கே...
    இதுவே கடைசி தோல்வி...
    என்று நினைத்து
    மேலும் உழைக்கிறேன்...
    வரும் என்ற நம்பிக்கையுடன்...
    அந்த நன்மையை தேடி!!!:drowning
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உன்னைத் தேடி வராம எங்கடா போய்டும்?

    மெல்ல வந்தாலும், உனக்கு சிறப்பான நிலையான வெற்றியா வரும்.

    அனைத்து முயற்சியும் வெற்றியில் முடிவதில்லை
    வெற்றி எதுவும் முயற்சி இல்லாமல் வருவதில்லை
    கிட்ட இருக்கும் வெற்றி கிட்டவில்லை என்றாலும்
    எட்டிப்பிடித்துவிடுவாய் நீ....அதை கண்டிப்பாய்

    வாழ்த்துக்கள்!!!!!
     
    Last edited: Jan 9, 2011
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Vaishu,muyarchi kandippaay thiruvinaiyaakkum.....

    good poem//////
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நம்பிக்கை வற்றிப் போனாலும் அது
    தைரியத்தால் பூரிப்படையட்டும்
    மனம் லட்சியத்தில் மிதக்கும் போது
    லட்சங்களாய் வரும் வெற்றிகளுமே.
    தங்கையே
    சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லையே
    தோல்வியை நீ கழுவு
    வெற்றி உன்னைத் தழுவும் ...
    வாழ்த்துக்கள்!!!!!
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வைஷு நம்பிக்கை தான் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படை.நீ தேடாமலே நன்மை உன்னை தேடி வரும்.நல்ல கருத்துள்ள கவிதை.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அழையா விருந்தாளி
    தோழ்வியே
    நீ என் தோளில் சாய்ந்து உறங்கு
    வெற்றி எனும்
    வெள்ளம் தெளித்து உன்னை எழுப்புகிறேன்

    தோழ்வியே
    உன்னை முறியடிப்பது என் நோக்கம் அல்ல
    என் முயற்சியை தூண்டிவிட்ட உன்னை
    வெற்றி கொண்டு எழுப்ப வேண்டும் என்பதே என் எண்ணம்

    வைஷு அருமையான ஆதங்க கவிதை
    உறக்கத்தில் இருக்கும் தோழ்வியை எழுப்பும் வரை
    நீ உறங்காதே விழித்திடு வென்றிடு
     
  7. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    வைஷு, ரொம்ப நல்லா எழுதியிருக்கே , நம்பிக்கையும், உழைப்பும் நிச்சயம் வெற்றி தரும், தரலேனாலும், அனுபவத்தை தரும்., ராமன் , உங்கள் பதில் கவிதை அருமை ..
     
    Last edited: Jan 9, 2011
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Vaishu,

    வென்றால் அனுபவிப்போம்..தோற்றால் அனுபவமாக ஏற்றுக்கொள்வோம்..தோல்வி தான் வாழ்க்கையில் நிறைய கத்துத்தரும்..எதற்கு தோற்றோம் என்று ஆராய்ந்துப் பார்த்து, மறுபடியும் அந்த தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்..:)
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கல்லூரியில் உன்னை யாரேனும் வைத்தாரோ,
    படிப்பது உன்னை படுத்தியதோ,இல்லை
    மதிப்பெண் வந்து குழப்பியதோ,சிறகடித்து
    பறந்திருக்கும் சின்ன குயில்களும்,இப்படி
    சித்தாந்தம் பேசுகிறதே அது ஏனோ?
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சிறகொடிந்து போகும் போது சிந்தாந்தம் பொதுவாகிறது சின்னவர்களுக்கும்!!!!!:)
     

Share This Page