1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

எப்போ நிறுத்தப் போறீங்க?

Discussion in 'Regional Poetry' started by malarvizhi, Apr 26, 2011.

  1. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    வித்தியாசங்கிறான்…
    மாறுபட்ட படங்கிறான்…
    இது திரையுலக புரட்சிங்கிறான்…
    எட்டு மணி நேரம் மேக்-அப் போட்டேங்கிறான்
    எட்டுக்கால் பூச்சி கடிச்சதையும் தாங்கிகிட்டேங்கிறான்…
    -
    படத்தக் கதை கேட்டுப்புட்டு
    நடிகை காசு வாங்காமலேயே
    நடிச்சுப்புட்டு நாலுநாள் அழுதாங்கிறான்
    -
    அந்தப் பெரிய நடிகர் ரஷ் பார்த்துப்புட்டு
    மூணுநாள் பிரஷ் பண்ணலைங்கறான்!
    சான்ஸே இல்லை சர்வதேச சினிமாவுக்கு
    சவால்னு சிலுப்பறான்
    -
    நம்பி நம்பி உட்கார்ந்தே
    நாசமாப் போனவன்தான்டா தமிழன்
    எவ்வளவுதான் இப்படி பில்டு-அப் பண்ணுவீங்க?
    -
    ஸ்பானிஷ் சரக்கை பாதி உருவி
    இந்தி சால்னாவை இஷ்டத்திற்கு கலந்து
    குடியாத்தம் குத்தாட்டத்தை குறுக்கே சேர்த்து
    பிச்சைக்காரன் பித்தளை தட்டு சோறு போல
    கலந்து கட்டியா வைச்சுப்புட்டு
    -
    மோவாயில கை வைச்சு மோட்டு வளைய பார்த்துகிட்டு
    பதேர் பாஞ்சாலி, எலிபத்தாயம் கணக்கா
    எட்டு வாரம் ஒன்பது சேனல்ல பில்டு – அப் கொடுக்கறத
    எப்போ நிறுத்தப் போறீங்க?
    -
    நல்ல விதமா படம் எடுத்தா
    நாயர் கடையில் நாலு அவுன்ஸ் டீ
    குடிக்கிறவனுக்கும் தகவல் தானா போயுடும்டா…
    புரிஞ்சுக்கடா… கோடம்பாக்கத்து ஜீன்ஸ் தம்பி!

    ==============================================

    - கவிஞர் காத்துவாயன்
    நன்றி: குமுதம்
     
    Last edited: Apr 26, 2011
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    உண்மையை உரக்க சொல்லிய கவிதை..... Thanks for sharing malarvizhi... padithathil pidithadho??
     

Share This Page