மாடிப் படிகளைத் தாண்டித் தாண்டி ஏறாமல், ஆடியாடி, கைப்பிடியைப் பிடித்தபடி ஏறுவது! தரை மீது நொடிப் பொழுதிலே அமர்ந்திடாது, தரையிலே கை ஊன்றியும், அமரத் தவிப்பது! சீருந்தில் லாவகமாக இருக்கையில் அமராது, சிரமத்தோடு வளைந்து, அதன் பின் அமர்வது! பேருந்தைப் பிடிக்க, அதைத் துரத்தி ஓடாமல், பேருந்து நின்றிடும் வரை பொறுமை காப்பது! பயணப் பெட்டியை எளிதில் தூக்க முடியாமல், பயணத்திற்கு Pull-man suitcase ஸை நாடுவது! காலையில் காபி போட ஆவலுடன் செல்லாது, காலைக் காபி கையில் வராதா என ஏங்குவது! ஓஹோ....... எனக்கு மணிவிழா முடிந்துவிட்டது!! :hide: