1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எப்படி இவர்கள் இங்கு!!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Nov 9, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    பயணம் அமைதியாக இருக்கத்தான், நாம்
    பயணம் செய்கிறோம் முன் பதிவு செய்து!

    நம்முடன் பயணிக்கும் நபர்கள் பிறருக்குத்
    தம்மால் இயன்ற தொல்லைகள் தந்திருக்க,

    இப்போது வருகிறார் பல வண்ண மனிதர்,
    தப்பாது ரயிலுக்குள் மேலும் கீழும் நடந்து!

    முதலில் வந்தவர் டி- ஷர்ட் வியாபாரி! சரி!
    முதல் போணியாக இரண்டு வாங்கினேன்.

    பின் தொடர்ந்தனர் ஊசி பாசி விற்பவர்கள்,
    தம் வினோத மொழியில் பேசிக்கொண்டு!

    தொடர்ந்து வந்தவை சாவி வளையங்கள்,
    அடர்ந்த கொத்துக்களாகத் தொங்கியவாறு!

    ரயில்வே கான்டீனின் காபி, டீ மட்டுமல்ல;
    ரயிலினுள் வந்தன பற்பல பழ வகைகளும்!

    கொய்யா, அன்னாசி, வாழைப் பழங்கள் என
    அய்யாக்கள் பலரும் வாங்கிக்கொண்டனர்!

    மசாலாப் பொரி, பட்டாணிக் கடலை இவை
    மசாலா தோசையைத் தொடர்ந்து வந்தன!

    ஏதோ, மக்கள் பசியைத் தீர்க்க விழைகிறார்;
    ஏன் தவறாக இதை நினைக்க வேண்டுமென

    மனதை சமாதானம் செய்து கொண்டபோது,
    தனது பாட்டுத் திறமையினைப் பறைசாற்றி

    வந்தாள் ஒரு சிறுமி, தாளக் கட்டைகளோடு!
    தந்தார் பலரும் சில்லறைக் காசுகளை. பின்

    அங்கஹீனத்தைக் காட்டுபவர், சமூகத்தில்
    அங்கம் வகிக்கத் தயங்கும் திரு நங்கைகள்

    என்பதாக, பிச்சை கேட்கும் பட்டாளமே வர,
    என்ன ரயில் நிர்வாகமோ இது? முன் பதிவு

    செய்து, அமைதிப் பயணம் வேண்டுபவருக்கு
    செய்ய முடியவில்லையே அந்த வகையில்!

    எல்லாப் பெட்டிகளும் நடுவில் இணைந்திட,
    எல்லா வித மனிதர்களும் உள்ளே வருகை!

    ஒரு பெட்டியில் பத்து ரூபாய்; பத்து எனில்
    நூறு ரூபாய்; ஐந்து ரயில்களே தரும் ஐநூறு!

    சுளையாக மாதம் பதினைந்தாயிரம் வருமே!
    சுலபத்தில் பிச்சையை ஒழிக்க முடியுமோ?

    சுதந்திர இந்தியா அல்லவா? அதனால் நாம்
    சுதந்திரமாக மக்களை விட வேண்டாமோ?

    இறைவன் நம்மைக் காப்பானாக! :bowdown
     
    Loading...

Share This Page