1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எப்டி டா சமாளிச்ச???

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, Apr 28, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பித்து சில நாட்கள் கழிந்திருந்தன. குணா இவன் தான் இந்த கதையின் hero. இவன் வகுப்பில் மொத்தம் 32 பேர் பெண்கள் 8 பேர் ஆண்கள் 24 பேர். இவர்களுக்குள் ஒரு பழக்கம் வகுப்பை கட் அடிக்க முடிவெடுத்தால் வகுப்பில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக தான் கட் அடிப்பார்கள் girls முதல் கொண்டு. அன்றும் அப்படி தான் மாஸ் கட் அடித்தனர். girls படத்துக்கு செல்ல முடிவெடுத்தனர். பசங்க கிரிக்கெட் விளையாட செல்லலாம் என முடிவெடுத்தனர்.
    டேய்! மச்சான் யாரு கிட்ட டா பேட்டும் பந்தும் இருக்கு என்று குணா கேட்க்க
    மச்சி! சந்தோஷ் கிட்ட தான் டா இருக்கு ஆனா தலைவரு இன்னைக்கு காலேஜ் வரல டா என்று மனோ சொன்னான்
    சரி! டேய்! யாருக்காவது அவனோட வீடு தெரியுமா
    எனக்கு தெரியும் மச்சி என்று ரமேஷின் குரல் நண்பர்கள் மத்தியில் இருந்து வந்தது.
    அப்பாடா என்று ஒரு மூச்சு விட்ட குணா சீக்கிரம் வாடா அவன்கிட்ட போயி பேட்டையும் பந்தையும் வாங்கிட்டு வந்தரலாம் என்று ரமேஷிடம் கூறி கார்த்தியிடம் இருந்து பைக் சாவியை வாங்கிக் கொண்டு இருவரும் பைக்கில் ஏறி அமர்ந்து
    மச்சி! நீங்க எல்லாரும் பிட்ச் ல போயி வெயிட் பண்ணுங்க நாங்க ரெண்டு பேரும் போயிட்டு நேரா பிட்சுக்கு வந்தர்றோம் நு சொல்லிவிட்டு இருவரும் சந்தோஷ் வீட்டுக்கு சென்றனர்
    இருவரும் வண்டியில் சிட்டாக பறந்து கொண்டிருக்கையில் மச்சி! என்றொரு சத்தம்
    நான்காவது கியரிலேயே வண்டி நகராமல் நின்றது. யாரு டா அந்த புண்ணியவான் என்று இருவரும் பார்த்தனர். கூப்பிட்டது வேறு யாரும் இல்லை இருவரும் தேடி சென்ற சந்தோஷ் தான்.
    உடனே குணா தலைவரே ! தெய்வமே ! வாங்க வாங்க உங்கள பாக்கத்தான் உங்க வீட்டுக்கு போயிட்டு இருந்தோம்.
    தியேட்டர் போயி பாக்கனுமேனு நெனச்சுட்டு இருந்த படத்தோட CD வீடு தேடி வந்த மாதிரி நீயே நேர்ல வந்துட்ட
    அப்டியாடா மச்சான் என்று சந்தோஷ் ஆரம்பித்தான்
    குணா சரி சரி மொக்க போடாத வண்டில ஏறு உங்க வீட்டுக்கு போயி சில பல itemgalai எடுத்துட்டு உடனே நாம கிரௌண்டுக்கு போறோம். அது சரி பேட்டும் பந்தும் உன் கிட்ட தான இருக்கு என்று குணா கேட்க்க
    ஆமா மச்சி என்று சொன்ன பிறகு தான் அவர்களுக்கு உயிரே வந்தது.
    மூவரும் பேட்டையும் பந்தையும் எடுத்து விட்டு மீண்டும் சிட்டாக ஒ! இத ஏற்கனவே use பண்ணியாச்சா சரி புயலாக க்ரௌண்டை நோக்கி கிளம்பினர்
    மூவரும் க்ரௌண்டை அடைந்ததும் அது வரை சோம்பி இருந்த பசங்க முகத்தில் பேட்டையும் பந்தையும் பாத்ததும் அவர்கள் முகத்தில் உற்சாக வெள்ளம் உருண்டோடுவது தெளிவாக தெரிந்தது.
    அனைவரும் கூடி டீம் பிரிக்க பேசிக்கொண்டு இருந்தனர்
    நேரம் ஆவதை உணர்ந்த குணா டேய்! ரமேஷ் நீயும் கார்த்தியும் டீம் பிரிங்க டா என்று கூறினான்
    சரி மச்சி என்று இருவரும் டீமை பிரிக்க ஆரம்பித்தனர்
    இதற்கிடையில் டேய் ! குணா ஒரு பந்து போடு டா என்று மனோ அவனிடம் பந்தை வீசி விட்டு பேட்டுடன் நின்று கொண்டிருந்தான் .
    குணா பந்தை எடுத்து முதல் பந்தை வீசினான் மனோவால் அந்த பந்தை அடிக்க முடியாமல் பந்து அவனை கடந்து பின்னால் சென்றது.
    மீண்டும் மனோ குனவிடம் மச்சி... மச்சி.. இன்னொரு பந்து போடு டா ப்ளீஸ்..... என்று இழுத்தான்
    ஏன் டா ! நாம தா வெளயாட போறோம்ல அப்புறம் ஏன் டா அலையற என்றவன் சலித்து கொண்டே சரி புடிச்சு தொலை என்று சொன்னவன் மனதில் பேண்ட் வேற டைட்டா இருக்கு கிழிஞ்சு கீது போயிருமோ என்ற பயத்துடனே அந்த பந்தை போட்டான்.


    டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............என்று ஒரு சப்தம்.
    இனி தான் சமாளிப்பு ஆரம்பம்
     

    Attached Files:

    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......என்ற சப்தம் கேட்ட மனோ குணாவிடம் மச்சி ! என்னடா ஆச்சு என்று கேட்டான்
    டேய் ! மாப்ள! பேண்ட் கிழிஞ்சு போச்சு டா என்று சொன்னவன் முகத்தில் பால் வடியாதது ஒன்று தான் குறை அவ்வளவு அப்பாவியாக கூறினான் .
    சுற்றி இருந்த நண்பர்கள் இதை கேட்டதும் சிரிக்க தொடங்கி விட்டனர் அவர்கள் சிரிப்பை அடக்க சிறிது நேரம் எடுத்தது
    சரி ஓகே மச்சி நீ விளையாட மாட்டீனு நெனைக்கிறேன் அப்டி ஓரமா பொய் உட்க்காந்து வெடிக்க பாரு அப்பப்ப பந்து உன் பக்கம் வந்தா எடுத்து வீசு என்று கேலியாக சொன்னான ரமேஷ்
    போடா டேய் கிழிஞ்சது கிழிஞ்சு போச்சு
    ஐயோ கிழிஞ்சு போச்சேன்னு அதையே நெனச்சுட்டு உட்க்காந்துட்டு இருந்தன்ன அப்புறம் கிழிஞ்சதுக்கு அர்த்தமே இருக்காது என்று சொன்னதும் விளையாட ஆரம்பித்தனர்
    குணா நன்றாக பந்து வீசுவான் என்பதால் முதல் ஓவரை அவனிடமே கொடுத்தான் ரமேஷ்
    டேய் கரெக்டா போடு பேண்ட் கிளிஞ்சத நெனச்சுட்டு கோட்டை விட்டுறாத என்று நக்கலாக கூறினான் ரமேஷ்
    போடா டேய் என்று முதல் பந்தை வீசினான் அந்த ஒவேரரில் மூன்று ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினான்.
    இவ்வாறு ஒவ்வொரு ஓவர் வீசும் போதும் ரன்களை கட்டுப்பாடாக வைத்து இருந்தான் ஆஅனால் அவன் பேண்ட் விரிசல் விலாசமாகி கொண்டே போனது விளையாட்டு மகிழ்ச்சியில் அவன் பேண்ட் கிளிந்ததையே மறந்து விட்டான்
    ஆனால் அவன் நண்பர்கள் விடுவதாக இல்லை குணா fielding செய்து கொண்டிருக்கும் போது பேட்டிங் டீமில் உள்ள அவன் நண்பர்கள் அவ்வப்போது அவனருகில் சென்று மச்சி ! எங்க பேண்ட் எ கொஞ்சம் காமி என்று கூறிக்கொண்டே இருந்தனர் அவனை அன்று ஒரு exibition ஆகவே மாற்றி விட்டனர்
    மேட்ச் முடியும் தருவாயை அடைய அடைய அவன் மனதில் கவலை ஆட்க்கொள்ள ஆரம்பித்தது
    எப்டி டா குணா இந்த கிழிஞ்ச பேண்டோட ஐம்பது ௦ கிலோ மீட்டர் ரெண்டு பஸ் மாறி போகப் போற என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்
    ம்ம்ம்.....சமாளிப்போம் என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு நண்பர்களிடம்
    மச்சி யாராவது பேண்ட் குடுங்கட என்று கேட்டான்
    அதற்க்கு கார்த்தி டேய் உன் சைஸ் கு இங்க எவன் கிட்டயும் பேண்ட் இல்லைட என்று சொன்னான் இந்த பதிலை எதிர் பார்த்தே தான் குணா அந்த வினாவை வைத்தான்.
    சரி மச்சி உன்னோட நோட்ட குடு என்று மனோ விடம் கேட்டான்
    டேய் எதுக்கு டா நோட்ட கேக்குற என்றான் மனோ
    அப்புறம் கிளிஞ்சத மறைகிரக்கு என்னடா பண்றது நா வேற நோட் கொண்டு வரல அதான் கேட்டேன் என்றான்
    உடனே மனோ அவனிடம் இருந்த இரண்டு லாங் சைஸ் நோட்டுகளை கொடுத்தான்
    மனோ குணா இருவரும் ஒரே பஸ் ஸ்டாப்பில் தான் பஸ் yeruvaarkal வண்டியை கார்த்தி எடுத்து சென்று விட இருவரும் நடந்தே சென்றனர் .
    குணா மனோ விடம் மச்சி கவர் பண்ணியே நடந்து வா டா
    மச்சி ஒன்னும் தெரியலைல என்ற கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தான் .
    டேய் மனோ நா முன்னாடி போறேன் நீ பின்னாடி இருந்து கிளிஞ்சது தெரியுதான்னு பாருடா என்றான்
    சரி போ என்றவன் பின்னாடி இருந்து சிரித்துக் கொண்டே வந்தான்.
    டேய் தெரியுதா இல்லையானு சொல்லித் தொல டா என்றான் குணா
    மச்சி தெரியல டா தொடையோட சைட்ல தான் கிழிஞ்சிருக்கு அதுனால் பின்னாடி இருந்து பாத்தா தெரியல டா எதுக்கும் கால ஒட்டி வச்சே நட எனா பேண்ட் கிழிஞ்சு கந்தல் கந்தலா தொங்கறது பின்னாடி இருந்து பாத்தா தெரியரக்கு சான்ஸ் இருக்கு என்று மனோ கூற அப்போது காலை ஒட்டியவன் தான் எடுக்கவே இல்லை.
    அவ்வப்போது கிழிந்த பேன்ட்டை சரியாக நோட்டை வைத்து மறைத்து இருக்கிறோமா என்று பார்த்துக்கொண்டே வந்தவன் மனதில்
    ஆண்டவா ! எனக்கு மட்டும் எதுக்கு இந்த மாதிரி நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன் சைடுல ஒரு நாய் வருதுல அதோட பேண்ட் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா அதெப்படி கரெக்டா என்னோட பேன்ட்ட கிழிச்ச என்று புலம்பிக் கொண்டே நடந்தான்.
    ஒரு கட்டத்தில் மச்சி நா வேணா நைட் வரைக்கும் இங்கயே ஒரு ஓரமா உட்காந்துட்டு போயிரட்டா என்று மனோ விடம் கேட்டான்
    போடா டேய் இவ்வளவு தூரம் அசராம வந்துட்ட இனி என்ன என்று சொல்ல
    இல்லடா காலேஜ் வேற விட்டிருப்பாங்க புள்ளைங்க எல்லாரும் பஸ் ஸ்டாப்ல இருப்பாங்க பேண்ட் கிழிஞ்ச மேட்டர் தெரிஞ்ச ஒரே காமெடி ஆயிரும் டா என்று குணா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே horn சத்தம் கேட்டு இருவரும் திரும்பினர் பார்த்தால் அரசு பேருந்து தள்ளாடி வந்து கொண்டிருந்தது
    உடனே குணா மனோ விடம் மச்சி மச்சி பஸ் கு கை போடு டா நிறுத்துனா இங்கயே நா ஏறி போயிருவேன்டா என்று சொல்லிக் கொண்டே பஸ் கு கை போட்டான் கூட சேர்ந்து மனோவும் கை போட பஸ் நின்றது .
    பஸ் உள்ளே இருப்பவர்களுக்கு ரகசியம் தெரிய கூடாது என்பதால் ஒரே தாவலாக மூன்று படிகளையும் தாண்டி கண்ணிமைக்கும் நேரத்தில் இருக்கையில் அமர்ந்தான்
    சிறிது நேரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை பஸ் பேருந்து நிலையத்தை நெருங்க நெருங்க கவலை அவனை நெருங்கியது
    பஸ் பேருந்து நிலையத்தை அடைந்தது பஸ்ஸை விட்டு இறங்கியவன் நடக்கிறான ஓடுகிறான என்ற சந்தேகம் அங்கு நின்று கொண்டிருந்த பலருக்கும் ஏற்பட்டு இருக்கும். ஆனால் குணா யாரையும் கண்டு கொள்ளவே இல்லை. fly ஓவரில் ஏறி ரோட்டை கிராஸ் செய்து அவன் ஊருக்கு செல்லும் பஸ்ஸை அடைந்து இருக்கையில் அமர்ந்தான் வழக்கமாக இந்த தூரத்தை கடக்க கால் மணி நேரம் ஆகும் இன்று இவன் அடைந்த வேகம் அளப்பரியது.
    பஸ் கிளம்பியது ஒரு மணி நேரம் எந்த பிரச்னையும் இல்லை. ஒரே ஒரு முறை நோட்டை எடுத்து கிழிந்திருந்த பேன்ட்டை பார்த்தான் அதன் பிறகு அவன் நோட்டை தன மடியில் இருந்து எடுக்கவே இல்லையே.
    பஸ் அவன் இறங்கும் இடத்தை நெருங்கியதும் பேருந்தை விட்டு இறங்கினான் அங்கு இருந்து அவன் வீடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தினமும் அவன் நடந்தே செல்வான். ஆனால் இன்று அவன் நடந்து செல்லும் நிலையில் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அவன் நண்பனுக்கு போன் செய்தான் போன் செய்து
    மச்சி நான் தான் டா குணா
    ம் ....சொல்லு மச்சி என்ன விஷயம்
    டேய் நா பிரச்சினைல இருக்கான் டா நீ தான் டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்
    என்ன பிரச்சினை டா
    டேய் யாரு கிட்டயும் சொல்லிராத டா என்னோட பேண்ட் கிழிஞ்சு போச்சு டா வந்து என்ன எப்டியாவது வந்து காப்பாத்தி எங்க வீட்டுக்கு கொண்டு போயி விட்டுரு டா என்றதும்
    ஒரு மிக பெரிய சிரிப்பு சத்தம் அதன் பிறகு வர்ரன் டா என்று கூறி குணாவின் நண்பன் பஸ் ஸ்டாப்பிற்கு சைக்கிளில் வந்தான்
    போகும் வழியில் அவன் நண்பன் எப்படி இந்த துயர சம்பவம் நடந்தது என்று விசாரித்து கொண்டே வந்தான் குணாவும் அச்சம்பவத்தை விளக்கி கொண்டே வந்தான் சொல்லி முடிக்கவும் அவன் வீட்டை அடையவும் சரியாக இருந்தது
    வீட்டிற்கு சென்றது முதல் வேலையாக அந்த பேன்ட்டை கலட்டி தலையை மூன்று சுற்று சுற்றி தூங்கி எரிந்தாவன் ஒரு பேரு மூச்சு விட்டான்
    மீண்டும் காலை காலேஜ் சென்றவனுக்கு புள்ளைங்க சைட்ல இருந்து கேள்வி மேல கேள்வி பசங்க அந்த மேட்டர புள்ளைங்க கிட்ட போட்டு குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி அமர்ந்து இருந்தனர் அவர்களை பார்த்து ஏண்டா மச்சி இப்டி பண்ணுனீங்க என்று கேட்பது போல் பார்த்தான்
    உடனே நித்யா அவனிடம் எப்டி டா நடந்தது என்று கேட்க்க மற்ற புள்ளைங்க சுற்றி நின்று ஆவளுடன் கேட்டனர் குணா சொல்ல ஆரம்பித்தான்
    அட நாங்க வெளயாட போனோம் மனோவை நோக்கி கை நீட்டி இதோ இந்த நாய் மனோ இருக்காம் பாரு இவன் தான் பந்து போட சொன்னான்
    ஒரு பந்து போட்டேன் நல்ல சுவாரசியமா இருந்துச்சு அந்த நாய் அத அடிக்காம விட்டுட்டன் . டேய் மச்சி இன்னொரு பந்து போடு தாணு கெஞ்சுனான் சரி தொலையிதுன்னு போட்டேன் அப்ப தான் வந்துச்சு வெனை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....நு ஒரு சவுண்ட் என்னடான்னு பாத்தா பேண்டோட உருவமே மாறி இருந்துச்சு நா அப்டியே ஷாக் ஆயி நின்னுட்டேன் வேர்ல்ட் ல எங்கயும் அந்த மாதிரி ஒரு டிசைன் கிடையாது
    அப்டி ஒரு டிசைன்
    சரி டா அப்புறம் எப்டி சமாளிச்சு வீட்டுக்கு போன பஸ் ஸ்டாப்ல ஒரே கூட்டமா இருந்திருக்குமே எல்லாரும் பாத்தாங்கள என்று நித்யா கேட்க்க
    யாரு பாத்தாங்க யாரு பாக்கலைன்னு எனக்கு தெரியாது ஆனா நா ஒருத்தரையும் பாக்கள
    ஓட்டம்னா ஓட்டம் அப்டி ஒரு ஓட்டம் இன்னும் ஒலிம்பிக்ஸ்ல கூட அந்த மாதிரி யாரும் ஓடுல அப்டி ஒரு வேகம்.
    ஓடுன ஓட்டத்துல பஸ் லாரி ரோடு எதையும் பாக்கள என்னோட aim எல்லாம் பஸ்ல ஏறி உட்காரதுல தான் இருந்துச்சு
    இப்படி சொல்லிக் கொண்டே வகுப்பின் வாசலுக்கு செல்ல
    ஏன் டா நாயே இவ்வளவு நடந்தும் உனக்கு இன்னும் புத்தி வரல பாரு மறுபடியும் டைட்டா தா பேண்ட் போட்டு இருக்க . அப்புறம் மறுபடியும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........ஆயிரப் போகுது என்று நித்யா சொன்னவுடன்
    வகுப்பு சிரிப்பில் மூழ்கியது
    THE END
     

    Attached Files:

    Last edited: Apr 29, 2010
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaugh:biglaugh:biglaugh

    dai sirppa control panna mudiyala da! aamaa eththana machi???????
    hmmm kaadhu valikkudhu adha mattum konjam control panniyirukkalaaam machi!

    maththabadi kadha comedyla a1!:thumbsup
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much yams friends kulla pesum pothellam machinu solluvom athan iththana machi
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Ram,

    Nallaarukku - yathaarthamaa irukku.

    As usual tarrrrrrrrrrrrrr hero neenga thaanaa? :rotfl

    Oru drawing puriyala, centre one.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    athu naa illeengo nats centre drawingla ava bus ah pudikka oodura maathiri bus sirusaa irukku ava perusaa irukurathunaala puriyaathu naa zoom panni kaamichu irukken thanks nats
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    enakku adhu purinjudhu next dhaan puriyala wat pic is that?:confused2::confused2:
     
  8. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,


    Nice comedy story.

    A tonic for us.


    Goodluck.
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much kalasen and yams antha picture bus la pogum pothu notta eduthu paappaanla athu
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ராம் தம்பி, ரொம்ப நல்ல சமாளிப்பு தான். ஆனா இதை படிச்சுட்டு வந்த சிரிப்ப தான் என்னால சமாளிக்க முடியல. ஆபீஸ்-ல பக்கத்து சீட் காரன் வேற என்னை மொறைக்கிறான் டா.

    உனக்கு காமெடி நல்ல வருத்துப்பா. இன்னும் எழுதுங்க. படிக்க நாங்க இருக்கோம். உங்க டிராயிங் -சும் ரொம்ப நல்ல இருக்கு. மூணாவது படம் ஏரியல் view -வா?? ரொம்ப நல்ல இருக்கு ராம். :thumbsup
     

Share This Page