1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 15, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்


    டொக்.. டொக்.... டொக்
    மரம் விட்டு மரம் தாவும் மரங்கொத்தியே
    என் மனம் கொத்தியே நீ பறந்து போனதெங்கே!

    பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகுனதே
    மரப் பட்டைகளை நீ உரிக்கும் அழகு அழகே.
    உடும்புப் பிடியெனப் பிடிக்கும் கால் விரல்கள்,
    எதிர் அதிர்வுகளைத் தாங்கும் தசைஅடர்ந்த கழுத்து,
    இரையைக் குத்தி வெளிக்கொணர லாயக்கான நீண்ட நாக்கு,
    உன் சிறு மூளைக்கு பாதுகாப்பாய் மிருதுவான மண்டை ஓடு.
    இத்தனை விந்தையான உடலமைப்பு உன் உருவத்திற்கே
    உன் தமிழ் பெயரும் தச்சன் குருவியாமே!

    பைன் மரங்களின் வயதை ஆராயும் ஆராய்ச்சியாளரே.....
    நூறுவயது பைன் மரமே நீ தங்கத் தேர்ந்தெடுக்கும் விடுதியே.
    உளிஅலகு கூர்பட்டு மரத்தண்டில் தூர்வேலை ஆகுதுவே
    சடுதியில் அங்கொரு விடுதி ஆனதே !

    ஒரு வீடு இரு வாசல் தத்துவம் உன் இனத்திற்கே
    உள்ள போக ஒருவழி:பகைவரிடம் இருந்து பறந்து போக மறுவழி
    வாரித்தெறிக்கும் மரத்துகள்கள் குஞ்சுகளுக்கு பட்டு மெத்தையே
    அம்சமாய் அதற்குள்ளே உன் குடும்பம் வாழுதே
    பைன் மர கோந்தே உன் துளையின் காவலனே!
    பாம்பு வந்தால் பத்தடி தூரம் ஓடிடுமே பாவமே.

    உன் துளைகள் ஒரு போதும் வெறுமையாய் இருந்ததில்லையே
    அவை நிரம்பும் நீ நிரப்பும் சோளப் பொறிகளாலே.
    பின்வரும் கோடைக்காய் நீ முன்னமே சேர்த்து வைக்கும் உணவாமே
    அடடே அறிவே என்னே உன் எச்சரிக்கை
    நாங்களுமே அதை அறிந்தாலும் செயல்படுத்துவதில்லை எந்நாளுமே.

    சுவற்றில் கை மோதினாலே இரத்தக்கசிவு எங்களுக்காமே
    உன் தலை கொண்டு
    நீ செய்யும் துளைவேலையில் இல்லை ஒரு சிதைவு இது நிஜமே.
    அடி வாங்கி உடைபடும் அலகு உன் அலகு அல்லவே
    இடிதாங்கி சாதனத்தை படைப்பாளன் உன்னுடன் பதிந்தானே.
    இதைப் படிப்பவனும்
    மனம் வைத்தால் உறுதியாய் சாதனைகள் பதியலாமே!!!!!

    மரத்திலுள்ள பழங்களை நிலைகுலைய நாசமாக்கும் பறவைகளே
    மரங்களையே வெட்டிவீழ்த்தி தலைகுனிய மோசம்செய்யும் மனிதனே
    வனத்தை வதம் செய்யும் புழுபூச்சிகளை கண்டு உண்டே
    இனத்தின் நலம் காக்கும் என் மரங்கொத்தியைப் பாருங்களேன்.
    இயற்கையின் எழிலில்தான் எத்தனை இன்பம் அளிக்கிறாய் இறைவனே!

    பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
    வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
    நாமும் கூட ஆடி ஞானப் பாட்டுப் பாடி.....



    தமிழ் விக்சனரி
    பைன் மரம்-Pine tree
    அதிர்வு-Vibration
    உளி-Chisel
    விடுதி-Home/Hostel
    தூர்வேலை-Bore
    மரத்துகள்கள்-Sawdust
    பைன்மர கோந்து-Gum
    துளைகள்-Holes

    [​IMG]
     
    Last edited: Jun 15, 2010
    Loading...

  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    Saroj...........neenga Mirugaviyal maanavi enbadhu inge palichidugiradhu......
    Migavum arumayo arumai !!
    Enakkum en iranddam aandu mirugaviyal vaguppu (Vertebrates) gnabagam varuthu.......
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    என் மனம் கொத்திப்
    போனதடி உன் மரங்கொத்தி

    ஒரு வீடு இருவாசல் - இது
    தவிர்க்குமே பூசல்.. வருங்
    கால சேமிப்பு, வைத்திருக்கும்
    கையிருப்பு, பறவையின்
    உறுப்பு என நீ பட்டியலிட்டது
    சிறப்பு

    அடி தாங்கி, இடி தாங்கி என
    அதன் அலகை நீ அலசிய
    விதம் வெகு அழகு

    தச்சன் குருவிக்கு உன் புகழாரம் .... அழகே அழகு... நீளம் குறைந்ததில் நான் சென்றேன் வெகு தூரம், என் கண்ணிலே நீலம் காணும் வரை ....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!


    ஆஹா ஆஹா ...என்னே ஒரு ஞாபக ஞானம்
    சந்தோசம் தோழியே.
    என் வரிகளில் தடம் மறந்த பாடம் வந்து உங்களில் படிந்ததது கண்டு மற்றட்ட மகிழ்ச்சி.
    முதல் பின்னூட்டம் கொடுத்த என் தோழியே.வாழ்க உங்கள் ஞாபகமறதி:biglaugh
     
  5. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    Dear Saroj
    Your poem is excellent.
    kantha
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    என் மரங்கொத்தியின் மனதை வருடியவளே
    என் மனம் கவர்ந்தவளே
    உன் சிறப்பான பின்னூட்டம் கண்டே
    நானுமே ஆடுகிறேன் தலை கீழாய் [​IMG]

    உன்னில் நீலம் கண்டால் நான் சிவந்து விடுவேன்
    என் கவிசுருக்கம் உன் நெஞ்சினில் இன்பப் பெருக்கம்
    தொடரும்!!!!! இந்த மகிழ்ச்சியான தருணம்.
    நன்றி.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!


    என் மரங்கொத்தி உங்களை கொத்திக் கொண்டு வந்து இங்கு விட்டு விட்டதா.
    தட்டுத் தடுமாறி ஒருவழியா வாழ்க்கை வரலாறு படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி. :)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    Ssssshhhhaaaaaabbbbbaaaaaaa........ enakku nalla purunjuthe intha kavithai.........:idea
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    மரங்கொத்தியை பற்றி கூறி எங்கள் மனதை கொத்தி சென்று விட்டீர்கள் ...சரோஜ்...

    இந்த பறவையின் தமிழ் பெயர் தச்சன் குருவி யா?????..அப்போ மரங்கொத்தி என்பது எந்த மொழி????:confused2:

    ஒரு வீடு இரு வாசல்.....இது ஒரு தமிழ் படத்தின் பெயர் தானே....:bonk
    மரங்கொத்தியை பற்றி அழகான ஒரு விளக்கம் ....:thumbsup
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்---மரங்கொத்தி!!!

    அம்மாடியோவ் ........எனக்கும் தெரிஞ்சுது நீ புரிஞ்சுகிட்ட அழகு ...
     

Share This Page