1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்---காகம் !!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Aug 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்


    பக்கத்துக்கு வீடு முருங்க மரத்து உச்சியில் ஒர் இரவுக்குள் புதிதாய் ஒரு கூடு.
    அந்தி சாய்கையில் தூறலாய் போட்ட சாரலில் ஒரு குட்டிக் குளியல்.
    உடல் சிலுப்பி குடும்பத்தோடு குதூகலமாய் அந்தப் பறவைகள்.
    கூட்டுக்குள் இரண்டு வெளிர் நீல நிற முட்டைகள். தினமும் அவைகளை பார்ப்பதே வேலையாய் போனது எனக்கும் என் புகைப் பட கருவிக்கும்.
    இருபது நாட்களாய் தொடர்ந்து என் கண்காணிப்பில் அந்த சின்னச் சிறு வீடு .....
    கீச்..கீச்......
    இன்று காலை எழுந்தவுடன் என் காதுகளில் இனிய கீதம்....மொட்டைமாடிக்கு ஓடிச்சென்று பார்த்தால்......
    வெளிறிய சாம்பல் நிறமாய் செக்கச் சிவந்த சொண்டோடு
    கவான் கவான் என்று குஞ்சுகள் ..எங்கிருந்தோ வந்த தாய் காகம்
    அவற்றின் வாயில் உணவைத் துணிக்க ...பார்க்க பார்க்க பரவசம் எனக்கு.
    இந்த இருபது நாட்களில் நான் அதற்கு விருந்தாளி ஆனேன்

    என் காக்கை நண்பனின் அழகு நிழற்படங்கள் இங்கே:
    http://www.indusladies.com/forums/d...g-natures-nurture-through-my.html#post1356524

    தொடர்ந்து படிக்கவும்......
    **************************************************************************


    அண்டசராசரம் அதிகாலையில் விழித்திட கத்தும் கடிகாரம்
    கரிய நிற மேனியுடன் சர சரவென சுறுசுறுப்பாய் சிறகடித்து
    நல்ல விடியலுக்காய் நேசர் படையுடன் அறைகூவல் விடும் காக்கை.

    மெதுவாய் எட்டிப் பார்த்தேன் ...பிறன் மனை நோக்குவது அசிங்கம் தான்
    ஆர்வம் மேலிட அவைகளை நோட்டம் விட்டேன்.
    ஆடம்பரம் ஏதுமற்ற எளிய வீடு,,,குஞ்சு குளவான்களோடு
    அருகில் நடப்பவை பற்றி கவலை ஏதும் இன்றி அட்டகாசமாய்
    குடித்தனம் நடத்தும் கன்னம்கரிய காக்கை நண்பன்.
    இரண்டடி கூட்டுக்குள்
    இரண்டரை கோடி சந்தோசங்கள் ........

    கருத்த உடல்,ஒற்றைக்கண் தலை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்து
    ஓன்று என்னை உற்று நோக்க, நானும் நோக்கினேன்.
    அப்படி ஒன்றும் அழகில்லை..ஆனால் அதனிடம் குறை இல்லை.
    குயிலன் நிறம் தான் என்றாலும் இவைகள் பெறுவதில்லை அவைகளின் மவுசு.
    சாய்ந்த தலை கொண்டு மேலும் என்னையே வெறித்துப் பார்த்து......
    கேள்விக்கணைகளால் என்னை துளைப்பதுபோல் இருந்தது .

    வீட்டின் முற்றத்தில் பிதுருக்களுக்காய் விழுந்த சோற்றுப் பருக்கை
    கண்ட அந்தக் காக்கை
    கரகரவென கரைந்து தன் சுற்றம் கூட்டி கரிய சொண்டினால்
    கவ்வி எடுத்து தன் குஞ்சுகளுக்கு ஊட்ட,
    கூடி வாழும் பண்பில் உயர்ந்து நிற்கும் காக்கை......
    கால மாற்றத்தில் - காலத்தின் கட்டாயத்தில் - அவசர உலகினில்
    அணைத்து நிற்க வேண்டிய உறவுகளை அறுத்தெறிந்து
    தன்னலமாய் தனக்காய் மட்டுமே வாழும் தரங்கெட்ட மனிதனே
    இந்தப் பண்பை எங்களிடம் நீ கற்காதது ஏனோ

    என்று என்னைப் பார்த்து எள்ளி நகைக்கிறதோ ????


    தன் இனத்தில் ஓன்று இறக்கையில்
    நாற்புறமிருந்தும் ஒற்றுமையாய்க் கூடி வானத்தில் வட்டமடித்து
    துக்கத்தில் கரையும் காக்கைகள்....
    கொள்ளையாய் தன் இனம் அழிகையில்
    குப்பையாய் அதில் உயிர் அழுகிப் போகையில்
    பந்தபாசம் அற்று வெற்று உடலாய் ஊமையாய் இருக்கும் தமிழனே! மனிதனே
    இந்தப் பண்பை எங்களிடம் நீ கற்காதது ஏனோ
    என்று என்னைப் பார்த்து கோபமாய் கரைகிறதோ????


    எச்சம் வந்து விழும் போது அசிங்கம் பிடித்த காக்கை என
    எத்தனை முறை வசை ???
    உண்ட மிச்சங்கள்,வீசி எறிந்த சொச்சங்களை தின்று
    சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் ஆகாயத்தோட்டிகள் காகங்கள்......
    தம் கையை தாமே அறுப்பதுபோல் இயற்கையை அழித்து
    அகழ்வாரைத் தாங்கும் தாயதை கூறு போடும் மூட மனிதனே
    எங்களை இகழ்வது எங்கனம்? என என்னை ஏக்கமாய் கேட்கிறதோ???


    திருடன் போல எதையும் தெரியா தெடுக்கும் காக்கை!
    இருளைத் துணையாக்கி யாரும் அறியாமல் இருப்பதைச் சுரண்டும்
    இதயமற்ற திருட்டு மனிதனே உன் ஈனச் செயல்களினால்
    இனிமையான உலகம் ஊனம் ஆயிற்றே ..
    என் பட்டப் பெயர் உனக்குத்தான் சாலப் பொருத்தம்
    என்று என்னை நக்கல் செய்கிறதோ ???


    பகிர்ந்துண்ணும் பண்பு,பந்தபாச ஒற்றுமை
    சிலிர்க்கவைக்கும் தாயன்பு,சிறகடிக்கும் சுதந்திரம்
    சிறிதேனும் இல்லாத மனித சாதியுடன்...
    "காக்கை குருவி எங்க சாதி.." என்று
    முண்டாசுப் புலவன் எங்களையும் சேர்த்துப் பாடியது
    சரிதானா என்று என்னை இரக்கத்தோடு கேட்கிறதோ?


    நியாயமே???
    கேட்பது ஐந்தறிவு ஜீவனானாலும்
    என் ஆறாம் அறிவு கொண்டு பதில்தர என்னால் இயலவில்லை.

    நாம்
    அவைகளின் அழகை ரசிப்பதில்லை
    அவைகளின் குணத்தையும் கருத்தில் கொள்வதில்லை.
    இவை போல் நம்மால் வாழ முடியாதா-இல்லை வாழத் தெரியாதா
    ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள் மண்டைக் குடைச்சலாய்
    காக்கையுடன் வாழ்ந்திட்ட இந்த இருபது நாட்களாய் ......


    ஒன்றாய் இருக்கக் கத்துக்கணும் அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்....காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கற்றுக் குடுத்தது யாருங்க".


    [​IMG]
     
    Last edited: Aug 11, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன் பறவைப் பட்டியலில் இந்த காகத்துக்கும் இடம் தந்த உனக்கு என் வந்தனம் முதலில்...

    காகத்தின் சிறப்பை யாரும் இத்துனை சிறப்பாய் சொல்ல முடியாது...

    பகிர்ந்துண்ணும் பண்பும், கூட்டமாய் வாழும் பண்பும், நம் சுற்றுப் புறத்தை அவை தூய்மை செய்வதையும் எண்ணிப் பார்க்கையில் நாம் என்ன செய்தோம் எனும் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.

    வரிகள் அனைத்தும் அருமை.. காக்கையுடன் வாழ்த்திட்ட உன் இந்த இருபது நாட்கள், எங்களுக்கும் மிகவும் உபயோகமாய்.. இருந்தது..
     
    Last edited: Aug 11, 2010
  3. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    ulagathil ulla anaithu jeeva rasikalidamum oru nalla gunam irukum, avatrai nam katru kolla endrum thayanga kudathu, ungal rasipu arumai, azhagna rasanai,

    dinam dinam pala veedu marathil kakangal kutti podudukindrathu anal athai rasithu parka oru manam vendum rasithathai yelutha oru rasanai vendum athu ungalidam athigam.
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Super yashi.Ottrumaya alaga soliteenga.Kaaka unga kitta solla sonna messages elathayum soliteenga very good keep it up.Nice work.
     
  5. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    என் அருமை தோழியே
    உன் நிழல் படமும் அழகு உன் கவிதையும் அழகு உனக்கு பிநூண்டல் அனுப்புவதால் நான் பெறுவேன் அழகு
    kantha
     
  6. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    என் அருமை தோழியே
    உன் நிழல் படமும் அழகு உன் கவிதையும் அழகு உனக்கு பிநூண்டல் அனுப்புவதால் நான் பெறுவேன் அழகு
    kantha
     
  7. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    ungal rasanai arumai, varigal super..pics too..:thumbsup:thumbsup:thumbsup
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Kaagathin koodi vazhum magathuvathai aumayaaga velipadithiya enadhu thozhiye unakku enadhu panivarndha nandrigal pala.......

    Mikka arumai unadhu neenda kavidhai !!
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நம் வாழ்வில் நாம் தினமும் காணும் ஒரு பறவை இந்த காகம் தான் ....
    பார்த்து ரசிக்கும் அழகு இல்லாவிடினும் இதன் குணாதிசயங்களை கண்டு கண்டிப்பாக நாம் வியக்க தான் வேண்டும் ....நம்மை நினைத்து நொந்து கொள்ள தான் வேண்டும் ....

    அருமை சரோஜ் காகத்திற்கு உங்கள் கவிதை ....
     
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi Saroj,

    ungal tamil pulamaiyai paarka paarka enakku eekamaaga irukkirathu.
    pallikoodathil thaai mozhiyai innum sirathai eduthu katru kondirukkalamo endru enna thonrugirathu.

    ungal kavithai arumai saroj. unmaithaan. kaakai,kuruvi engal jaathi endru paadal manitha inathukku oththu varaathu. manithargalidaiye jaathi irukkaiyil, naam engirunthu paravai inaththai serthu kolvom? apppadiththu magizhthaen.
     

Share This Page