1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் விழிகளின் கனவு நீ

Discussion in 'Stories in Regional Languages' started by deva12, Jan 16, 2016.

  1. deva12

    deva12 Silver IL'ite

    Messages:
    37
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi friends,

    அனைவருக்கும் வணக்கம்.

    எனது முதல் கதையான என் விழிகளின் கனவு நீ மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது கதையின் முதல் அத்தாயத்துடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

    Deva
     
    1 person likes this.
    Loading...

  2. deva12

    deva12 Silver IL'ite

    Messages:
    37
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    என் விழிகளின் கனவு நீ - 1
    சென்னையை நோக்கி செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் இன்னும் ஐந்து நிமிடத்தில் பிளாட்பாரம் ஒன்றிலிருந்து புறப்பட போகிறது என அறிவிப்பு வர பயணிகள் அனைவரும் தங்கள் இடத்தில் அமர அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் விடை பெற்றனர்.போனில் பேசியபடியே கதவோரம் வந்து நின்றான் அன்புசெழியன்.

    ரன்னிங் ரேசில் முதலிடத்தை பிடிக்க வெறியுடன் ஓடுவதை போல் ரயிலை பிடிக்க ஓடி வந்தாள் இனியாஅன்பரசி . நல்ல வேளை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் ரயிலை பிடித்தாள். ஏறிய வேகத்தில் கதவருகில் நின்றிருந்தவன் மேல் மோத சாரி சார் தெரியாம மோதிட்டேன் என கூறி அவன் முகத்தை பார்க்க அவனோ அவளை முறைத்து விட்டு நகர்ந்தான்.

    போயும் போயும் இவன்மேலயா மோதனும்? எல்லாம் உன் நேரம்டி இனியா என மனதுக்குள் தன் தலையில் குட்டி கொண்டு தன் இருக்கை நோக்கி சென்றாள்.

    அவசரமாக ஓடி வந்ததில் மூச்சிரைக்க தன் கைபையை திறந்து தண்ணீர் பாட்டிலை திறந்து குடித்தவள் தன் செல் சிணுங்க யாரென்று எடுத்து பார்த்தவள் அதில் பத்து மிஸ்டு கால்கள் இருக்க தன் தோழி சிந்துவிற்கு டயல் செய்தாள்.

    மறுமுனையில் ஏன்டீ அறிவில்ல உனக்கு? எத்தனை தடவை கால் பண்றது? அட்டென்ட் பண்றதுக்கு என்ன? டிரெயினை பிடிச்சிட்டியா இல்லை விட்டுட்டியா? என அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள் சிந்து.

    ம்ம் இந்த தடவை கரெக்ட்டா டிரெயின பிடிச்சுட்டேன். காலையிலே 5.30 மணிக்கு நான் சென்னை வந்திடுவேன்.அதுசரி என்னை யாரும் தேடலையே?

    நீ ஏன் கேட்க மாட்ட? நீ எங்க கூட இருக்க மாதிரியே பில்டப் குடுக்க எவ்ளோ பிளான் போட வேண்டியதா இருக்கு? அதுவும் அந்த சி.ஐ.டி சகுந்தலா கண்ல படாமா இருக்க எவ்ளோ போராட வேண்டியதா இருக்கு தெரியுமா? சரி நீ அந்த மோதிரத்தை எடுத்தியா இல்லையா?

    நல்ல வேளை மோதிரம் டேபிள் மேலே தான் இருந்தது என்றாள் இனியா.

    அதை எடுக்க உனக்கு இவ்ளோ நேரமா? நல்ல வேளை உன்னோட லக்கேஞ் எங்ககிட்ட இருந்தது. அதனால நாங்க தப்பிச்சோம். அம்மா தாயே தயவு செய்து சீக்கிராம வந்து இந்த ஜக்கு கிட்ட இருந்து எங்கள காப்பாத்துமா உனக்கு கோடி புண்ணியமா போகும்.

    சரி சரி பயந்து நீங்களே அந்த ஜக்குகிட்ட மாட்டீக்காதீங்க.

    அது சரி அந்த மோதிரத்தை எடுக்க இவ்ளோ நேரமா? டிரெயின் கிளம்பறதுக்குல்ல வந்துடுவேன்னு சொன்ன?

    அதை ஏன் கேக்குற சிந்து? நம்ம தங்கியிருந்த ஹோட்டல் போய் நாம தங்கியிருந்த ரூம் சாவி கேட்டா அங்க இருந்த ரிசப்ஷனிஸ்ட் வேற ஏதோ ரூம் சாவிய கொடுத்துட்டாங்க. நானும் டிரெயின பிடிக்கற அவசரத்துல ரூம் நம்பர பார்க்காமா கதவ திறந்து மோதிரத்தை தேடிகிட்டு இருந்தேன். அப்போ ஒருத்தன் திடீர்னு (நம்ம ஹீரோ தாங்க) உள்ள வந்தான்.

    ஹலோ யாரு நீங்க என்னோட ரூம்ல என்ன பண்றீங்க?

    சாரி சார் கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இந்த ரூமை வெக்கேட் பண்ணோம். அவசரத்துல என்னோட மோதிரத்தை மறந்துட்டேன் அதான் எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.

    இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க? பார்த்தா படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கு ஆனா செய்றதெல்லாம் திருட்டு வேலை என்றான்.

    எக்ஸ்கியூஸ் மீ கொஞ்சம் பார்த்து பேசுங்க. யார பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க? நீங்க சொல்ற மாதிரி வேலையெல்லாம் செய்யனும்னு எனக்கு அவசியம் இல்லை.

    அப்போ எதுக்கு என்னோட ரூம்க்கு வந்தீங்க?

    அதுதான் சொன்னனே என்னோட மோதிரத்தை எடுப்பதற்குனு.

    மறுபடியும் பொய் சொல்லாதே. நான் இந்த ஹோட்டலுக்கு காலையிலே வந்துட்டேன். நீ எப்படி கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வெக்கேட் பண்ணியிருக்க முடியும்?

    அவள் பேசிகொண்டே மணியை பார்க்க அது மணி ஓன்பதை காட்டியது. ஓ மை காட் இன்னும் அரை மணி நேரத்துல டிரெயின் கிளம்பிடும். இவன்ட்ட சண்ட போட்டுகிட்டு இருந்தா டிரெயினை பிடிக்க முடியாது என அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தேடுவதை தொடர்ந்தாள்.

    இவளிடம் பேசி பலன் இல்லை என அவன் மேனேஜரிடம் சொல்ல அவரோ அவளிடம் விசாரிக்க இனியா தன் கல்லூரி பெயரை கூறினாள். அவர் ரிஜிஸ்டர் புத்தகத்தை பார்த்து அவளின் ரூம் நம்பரை சொல்ல ஆமாம் சார்.

    நான் ரிசப்ஷெனில் அந்த நம்பரை சொல்லித்தான் சாவி கேட்டேன் என சொல்ல அந்த மேனேஜர் ரிசப்ஷெனிஸ்ட்டை அழைத்து கேட்க அவர் தவறாக வேறொரு அறையின் சாவியை கொடுத்து விட இனியவும் அவசரத்தில் அதை கவனிக்கவில்லை. மானேஜர் நடந்த தவறுக்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு இனியா தங்கியிருந்த அறையின் சாவியை கொடுத்தார்.

    ஒருவழியாக மோதிரத்தை எடுத்து கொண்டு
    கிளம்பினாள்.

    தான் மோதிரத்தை எடுத்துவிட்டதை கூறுவதற்காக சிந்துவிற்கு கா
    ள் செய்ய தன் கைபேசியை எடுக்க அதில் அவளின் தோழிகளிடம் இருந்து இருபது மிஸ்டுகால்கல் இருக்க தன் தோழிக்கு காள் செய்தாள்.

    ஏண்டீ அறிவில்ல உனக்கு? நாங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எத்தனை தடவை உனக்கு போன் பண்றது?

    சாரி டீ இங்க ஒரு சின்ன பிரச்சனை அதான் அட்டென்ட் பண்ணமுடியல.
    இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுவேன் என இனியா சொல்லி கொண்டிருக்க அங்கே அவள் செல்ல வேண்டிய டிரயின் புறப்பிட்டது.

    நீ வந்துடுவ ஆனா உனக்காக டிரெயின் காத்துகிட்டு இருக்காது.

    சிந்து என்னடீ சொல்ற?

    டிரெயின் கிளம்ப போகுதுனு சொல்லத்தான் உனக்கு போன் பண்ணோம் நீ தான் அட்டென்ட் பண்ணவே இல்லை.

    சரி சரி விடு அடுத்த டிரெயின்ல வந்
    தா போச்சு என சொல்லி போனை வைத்து விட்டு அடுத்த டிரையின் எப்போது என விசாரிக்க இன்னும் பத்து நிமிடத்தில் ஒரு டிரெயின் இருப்பதாக சொல்ல வேகவேகமாக சென்று அவள் டிக்கெட் எடுத்து பிளாட்பாரம் வருவதற்குள் ரயில் கிளம்பியது. இந்த டிரெயினை விட்டால் அனைவரும் அவர்களின் ப்ரொபெச்சர் சகுந்தலாவிடம் மாட்டிக் கொள்ளக்கூடும் என்று ரன்னிங் ஓடி ரயிலை பிடித்தாள்.
     
    3 people like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தேவா கதை ரயில் பயணத்துடன் ஆரம்பமாகி விட்டது .நல்ல துவக்கம் .விரைவு ரயில் வேகத்தில் கதையை தொடருங்கள் .வாழ்த்துக்கள்
     
    1 person likes this.
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    ரொம்ப அழகாக கதையை ஆரம்பித்து இருக்கிர்கள். உங்களின் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அடுத்த பகுதிக்காக ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறேன்.
     
    2 people like this.
  5. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Madam, the story is super. Expecting your next part soon.
     
    1 person likes this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    தேவா.. ஆரம்பமே மிகவும் அசத்தலாக ஜெட் வேகத்தில் செல்கிறது . அடுத்த பதிவை எதிர்பார்கிறேன் ... கதையின் தலைப்பு அருமை
     
  7. deva12

    deva12 Silver IL'ite

    Messages:
    37
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female
    என் விழிகளின் கனவு நீ - 2

    இனியா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ கம்பியூட்டர் சயினஸ் நான்காம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். இறுதி ஆண்டு என்பதால் கல்லூரி சுற்றுலாவிற்கு மங்களூர் வந்து சுற்றுலா முடிந்து அவர்கள் சென்னை திரும்பும் போது தான் அவள் தன் மோதிரத்தை ஹோட்டல் அறையில் மறந்துவிட அதை எடுக்க போய்தான் டிரெயினை தவறவிட்டாள்.

    இனியா டிரெயின் ஏறிட்டியா? என்ற ரிஷியின் பதிலுக்கு ம்ம் ஏறிட்டேன் என சுரத்தை இல்லாமல் பதில் சொன்னாள்.


    என்னாச்சு உனக்கு? ஒரு மாதிரி டல்லா பேசுறே? என ரிஷி கேட்டது தான் தாமதம் அதற்குள் இனியா நடந்ததை எல்லாம் பொரிய ஆரம்பித்துவிட்டாள்.

    சரி விடு நீ பார்த்து பத்திரமா வா. சாரி சாரி பக்கத்தில இருக்கவங்க காதுல இரத்தம் வர அளவுக்கு பேசாம அவங்கள பத்திரமா பார்த்துக்க என அவளை ரிஷி வெறுப்பேற்ற டேய் உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை சொல்லனும்.

    எல்லாம் அந்த சிடுமூஞ்சியால் வந்தது அவன் மட்டும் எங்கிட்ட சண்ட போடாம இருந்திருந்தா உன்கிட்டலாம் பேச்சு வாங்க வேண்டியது இருக்குமா என அவள் கூற ஏதோ போனா போகுதுனு நீ புலம்பியதா கேட்டேன் பாரு என்னை சொல்லனும் என்றான் ரிஷி.

    பின் சிறிது நேரம் அவனிடம் வம்பளத்து விட்டு போனை கட் செய்துவிட்டு நிமிர அங்கே செழியன் நின்று கொண்டிருந்தான்.

    ஐயோ இவன் எப்போ வந்தான்னே தெரியலையே நான் பேசுனத முழுசா கேட்டுயிருப்பானோ? என பார்க்க அவன் முழுவதையும் கேட்டதற்கு அறிகுறியாக அவனின் கண்களில் கோபம் தெரிந்தது.என்ன செய்வதென்று தெரியாமல் அவனிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் போனில் பேசுவதை போல் எழுந்து சென்றாள்.

    ஒரு கால் மணிநேரம் கழித்து தன் இருக்கைக்கு வர அங்கே செழியன் தன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.அப்பாடா தப்பித்தோம் என நல்ல பிள்ளை போல் தன்னுடைய இருக்கையில் படுத்தவள் அயர்ந்து உறங்கிவிட ரயிலின் குலுக்கலில் கண்விழித்தாள்.

    இன்னமும் செழியன் லேப்டாப்பில் வேளை செய்து கொண்டிருக்க அவனை பார்க்காதவள் போல் ரெஸ்ட் ரூம் சென்றாள்.போனவள் அதே வேகத்துடன் திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்து தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தாள்.வேர்வையில் உடல் நனைய செழியன் ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டு என்னாச்சு? என்று வினாவினான்.அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க இப்போது அவளின் உடல் நடுங்க ஆரம்பிக்க செழியன் என்னாச்சுனு கேக்றேன்ல என உறக்க கேட்க இனியா அங்க கதவுகிட்ட அவன் என மேலும் சொல்ல முடியாமல் திக்கினாள்.

    என்ன அங்க? வா என் கூட என அவன் அழைக்க அவள் எழாமல் இருக்க வான்னு கூப்பிடுறேன்ல? எனக்கு பயமா இருக்கு என அவள் கண்கள் கலங்க நான் இருக்கேன் வா என அவளை கை பிடித்து கூட்டி செல்ல கதவு பக்கத்தில் நின்றுருந்தவனை கண்டு அவள் பாதியில் நிற்க இனியாவை பார்த்து அவன் வன்மமாக சிரிக்கசிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந்தவனை நோக்கி பளார் என கன்னத்தில் அறைய டேய் யாரடா அடிச்சே? என அவன் கத்த அவர்களின் சண்டையில் டிரெயினில் உறங்கி கொண்டிருந்தவர்கள் முழிக்க அனைவரும் அங்கே கூடிவிட்டனர்.

    என்ன தம்பி என்னாச்சு? என்றார் பெரியவர் ஒருவர் செழியனை நோக்கி.ஒன்னுமில்ல சார் நான் ரெஸ்ட் ரூம் வந்தேன் அப்போ இவர் கதவு கிட்ட நின்னு சிகரெட் புடிச்சுகிட்டு நின்னார்.

    சார் டிரெயின்ல சிகரெட் பிடிக்காதீங்க. குழந்தைகளாம் இருக்காங்னு சொன்னேன்.அதுக்கு உனக்கென்னய்யா நான் அப்படி தான் பிடிப்பேனு சொல்லி கெட்ட வார்த்தைல திட்டுறாரு என அவன் சொல்ல ஏன்ப்பா அறிவில்ல உனக்கு பொது இடத்துல சிகரெட் பிடிக்க கூடாதுன்னு தெரியாது?ஒருத்தர் நல்லது சொன்னா கேட்கமாட்டீங்களே என அங்கு கூடி இருந்தவர்கள் பேச ஆரம்பிக்க சரி போதும் போங்கப்பா என பெரியவர் கூட்டத்தை களைத்தார். கூட்டம் களைந்ததும் அவனிடம் செழியன் ஏன் உண்மைய சொல்லல தெரியுமா நான் சொல்லியிருந்தா நீ இங்கயிருந்து ரத்த கரையோட தான் போயிருப்பே என அவனை எச்சரித்துவிட்டு இனியாவின் பக்கம் திரும்பினான்.

    போய் முகம் கழுவிட்டு வா என்றான்.அவள் அங்கேயே நிற்பதை பார்த்து என்ன? என்றான்.எனக்கு பயமா இருக்கு. மறுபடியும் அவன் வந்துட்டானா? அவளின் பயம் கண்களில் தெரிய செழியனின் மனம் இளகியது. நான் இங்கே இருக்கேன் நீ போயிட்டு முகம் கழுவிட்டு வா. அவள் முகம் கழுவிவிட்டு வெளியே வர செழியன் தன் இருக்கை நோக்கி செல்ல ஒரு நிமிஷம் என்றாள் இனியா.என்ன?ரொம்ப நன்றி.எதுக்கு? என்றான் செழியன . எங்கே உண்மைய சொன்னால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமோன்னு பொய் சொன்னதுக்கு.

    அதுமட்டுமில்லாம சமயத்துல உதவினதுக்கு.இனியாவது ஜாக்கிரதையா இரு என்றுவிட்டு தன் இடத்துக்கு சென்றவனின் மேல் மரியாதை வந்தது.

    சென்னை சென்றடையும் வரை இனியா அமைதியாக வந்தாள். சென்னை சென்ட்ரல் வர அனைவரும் இறங்க இனியா இறங்கும் முன் சாரி என்றாள் செழியனிடம்.எதுக்கு என்றான் செழியன் .

    அதுவந்து ஹோட்டல்ல நடந்ததுக்கும் பிளஸ் போன்ல உங்கள திட்டியதுக்கும் என்றாள் சின்ன குரலில்.

    பரவாயில்லை உனக்கு கொஞ்மாவது மரியாதை தெரிஞ்சிருக்கே என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்.

    ஹலோ போனா போகுது ஏதோ எனக்கு ஹெல்ப் பண்ணீங்களேனு சாரி கேட்டா எனக்கே மரியாதை தெரியாதுனு சொல்றீங்களா? என மறுபடியும் அவனிடம் சண்டைக்கு நிற்க சிந்துவிடம் இருந்து அழைப்பு வந்தது.

    என்ன டீ ஸ்டேஷன்ல இறங்கிட்டியா இல்லையா? இந்த ஜக்கு இப்போ அட்டென்டஸ் எடுக்க போகுது என அவள் பதட்டதுடன் சொல்ல சகுந்தலா அனைவரின் பெயரையும் கூப்பிட ஆரம்பித்தார். ஒவ்வொரு மாணவரும் தங்கள் இருப்பை பதிவு செய்ய அடுத்து இனியாவின் பெயரை அழைக்க தோழியர் என்ன செய்வது என தெரியாமல் திருதிருவென முழித்து கொண்டிருந்தனர்.
     
    4 people like this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Deva மிகவும் அருமையாக கதை நகர்கிறது சூப்பர்
     
  9. StrangerLady

    StrangerLady Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    855
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi @deva12

    migavum azhagana thodakkam. Pls post the next update
     
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    I read the next update as soon as you posted but forgot to post my comments. Sorry for the late feedback.

    Kathai migavum arumai. Adatha paguthikaga arvamaga kathuerukiren.
     
    2 people like this.

Share This Page