1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் இனியவளே...

Discussion in 'Regional Poetry' started by karnaa, Jul 31, 2010.

  1. karnaa

    karnaa New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    காண்பவரை வசமாக்கும் கண்களும்
    கேட்பவரை வசமாக்கும் குரலும்
    உள்ளம் தொட்டவர்கள் மட்டுமே
    உணர முடிந்த மென்மையும்
    உன் சொத்து என எனக்கு தெரியும்

    படிப்போரையும் வசமாக்கும் வரிகளும்
    உன் சொத்து என்பதை இப்போது தான்
    அறிகிறேன். என்னிடமும் மறைத்தாயே
    இதை????

    ஒன்றல்ல, ரெண்டல்ல, நூறுக்கு மேல்
    இருக்கும் போல இங்கேயே??? இங்கு
    மட்டும் தானா?? இன்னும் சிதறி உள்ளதா
    வேறு எங்கும்??

    துரியோதனின் நிலையில் நான் இப்போது
    சிதறிய முத்துக்களை, "எடுக்கவோ"
    "கோர்க்கவோ" என நிலை தடுமாறி
    நிற்கிறேன்..

    ஏன் சொல்ல வில்லை என்னிடம்???
    என்னிடம் கூட ஏன் சொல்ல வில்லை???
    உன் வரிகளின் திறம் அறியாது, நானும்
    என் கிறுக்கலை உன்னிடம் பெருமையாய்
    காட்டி இருக்கிறேன்..

    கண்டு ரசித்தவள் நீ..
    மனதார பாராட்டியவள் நீ..
    என்ன சொல்வேன் உன் மனதை...
    அதன் அழகை... என் இனியவளே ...
    இதயம் நிறைத்தவளே.. கண்களில்
    நீருடன் நான்... உன்னை இங்கு உள்ள
    உன் நண்பர்கள் அனைவரையும் விட
    அதிகம் அறிந்தவள் நான் என்பதில் துளி
    கர்வமும்....கொண்ட கர்ணா....
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வருக கர்ணா வருக.

    வந்து இந்தப் பகுதியை உங்கள் வரிகள் கொண்டு,
    கவிதையில் மென்மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

    வேணியை அறிந்தவர் நீங்கள் என்பதை அறியும்பொழுது,
    மிக, மிக மகிழ்ச்சி கொள்கிறோம். நீங்கள் சொன்னதுபோல் நாங்கள்,
    அவர் நட்பையும் இன்னும் பிற சிறப்புகளையும் இங்கு அவர் வரிகளின்,
    மூலமாகத்தான் அறிந்து மகிழ்கிறோம். வலை நட்பு அல்லாது உடன் இருப்பவரின்,
    நட்பையும் கொள்ளை கொண்டவர் என்பது இப்பொழுது புலப் படுகிறது உங்கள் கவிதையிலே.

    வேணியைத்தான் நீங்கள் சொன்னீர்கள், என்பதை அறிந்த கதை சொல்லவா?
    அந்தாதியில் அடிப் பாதகி வேணியே எங்கே சென்றாய் என்று நீங்கள் உரிமைக் குரல்,
    எழுப்பிய போதே நான் அறிந்து கொண்டேன் உங்கள் இருவரின் நட்பை.

    கர்ணா எனப் பெயர் கொண்டு,
    கர்ணனின் பெண் அவதாரமாக நட்பு பாராட்டிப் பாடுவது,
    மேலும் அழகு சேர்க்கிறது உங்கள் நட்புக்கு. வாழ்க தமிழ், வளர்க நட்பு.
     
    Last edited: Jul 31, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தோழியுடன் நட்பு ..வந்தது இவ்வண்
    வரிந்து கட்டிக் கொண்டு வர்ணனை வரிகளில்
    கர்வம் கொண்ட கர்ணா அதில் தப்பேதும் இல்லை
    ஆர்வம் கொண்டு நீங்கள் அழைத்த அந்த சொல்பதம்..பாதகி
    கண்டு நானும் வியந்தேன்...வேறு யாரும் சொல்லி இருந்தால்
    அந்த குதிக்கும் ஸ்மிலி கொண்டு கொத்துக்கறி ஆக்கி இருப்பாள்
    கொள்ளை கொண்டவள் என்பதால் குதூகலம் அவள் கையிருப்பில்.
    இனிமையானவளுக்கு இதம் தரும் இனிய இதழ் விரிப்பு.தித்திப்பு
    வாழ்க நட்பு.
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    மிக அருமை உங்கள் கவிதை...
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Romba arumai intha thiram migum pulamai karna
     
  6. karnaa

    karnaa New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    நட்பு நலமாய், வளமாய் வாழ வாழ்த்திய நட்புடனுக்கு.. நட்புடன் எனது நன்றிகளும்.. வணக்கங்களும்...

    இவள் நட்பை நான் பெற நான் செய்த பிரயத்தனம் எனக்குத்தான் தெரியும். ஓட்டமாட்டாள் யாரிடமும்.. ஓடவும் மாட்டாள் யாரை விட்டும்.. ஆனாலும் ஒட்டுதல் இருக்காது.. அதுவே என்னை இவளிடம் வலியச் சென்று வம்பிழுக்கவும், வம்பளக்கவும் வைத்தது.. அப்போதும் பேசுவது நானாகத்தான் இருக்கும், ஒரு புன் சிரிப்பு மட்டும் அவள் இதழில் இருக்கும்.

    உடன் இருப்பவர் அனைவருக்கும் அவளைப் பிடிக்கும். ஆனால் அவளுக்கு யாரைப் பிடிக்கும் என்பதை கண்டு கொள்வது மிகவும் சிரமம்.

    என் செல்ல தேவதை (இப்படி சொன்னால் அவளுக்கு பிடிக்காது:hide:) அவள். என் வாழ்வில் வண்ணமிகு, வாசனை மிகு பகுதிகளின் சொந்தக்காரி.. அவள் பற்றி நான் சொன்னது வெகு குறைவுதான்.

    இன்னும் பல கவிதைகள் எழுதலாம் அவளைப் பற்றி... எழுதுவேன்...

    நன்றி நட்புடன்
     
    Last edited: Aug 2, 2010
  7. karnaa

    karnaa New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்,

    என்னவளின் ரோஜா நீங்கள் என்பது எனக்கு தெரியும். சொல்லி இருக்கிறாள் உங்களைப் பற்றி.. உங்கள் தமிழும்... கலையும் அதன் களையும் சொல்லி, சொல்லி ரசித்திருக்கிறாள். அதைக் காணாமலே நான் உங்கள் ரசிகை. :)

    கோபம் அபூர்வம் அவளிடம். யாரிடமும் காட்ட மாட்டாள். காட்டினால் அவள் வட்டத்தில் அந்த நபருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பது பளிங்கு. பொதுவாய் ஒதுக்க சுபாவம்.. ஒதுங்குகையில் மீண்டும் சீண்டினால், அவர்கள் பாவம்..

    இதெல்லாம் நான் இங்கே பகிர்ந்ததற்கு என்ன வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறேனே எனக்குத் தெரியவில்லை. :hide:

    என் முதல் பதிப்புக்கே உங்கள் இந்த ஆழ்ந்த வரவேற்பில் நெஞ்சம் நெகிழ்ந்தேன். நன்றி உங்கள் வரிகளுக்கு. :bowdown
     
  8. karnaa

    karnaa New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    ரசித்ததற்கு நன்றி வைஷ்ணவி (உங்கள் பெயர் வேணிக்கு வெகு பிடித்தமாய் இருக்கும்.. அவள் பால்ய சிநேகிதியின் பெயர் இது)
     
  9. karnaa

    karnaa New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    நன்றி பிரண்ட். என்ன பேர் சொல்லிக் கூப்ட உங்கள?? எத்தன பேர் இருக்கு... சித்ரா... சோனியா, லக் ஷியா-ன்னு
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிடித்தவளின் போக்கை பிட்டு வைத்து என்ன திட்டு வாங்கப் போகிறீர்களோ????
    :ideaவரட்டும் பார்க்கலாம்.... அந்த மயில் தோகை உங்களுக்கு என்ன தொகையை வாரி வழங்கப் போகிறது என்று.
     

Share This Page