1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்ன பெரிய நிறம்

Discussion in 'Regional Poetry' started by Sannjay, Aug 6, 2011.

  1. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    நிறம் பார்த்தா உன்னை காதலித்தேன்?
    உன் மனம் பார்த்து தான்
    உன்னை என் மனதில் ஏற்றினேன்

    உனக்கு ஏன் தாழ்வுணர்ச்சி?
    யார் எழுதி வைத்த சட்டமிது?
    ஆண் கருப்பாகவும் பெண் சிவப்பாகவும்
    இருக்க வேண்டுமென?

    உனக்கென்ன குறை கண்ணம்மா
    நீ எப்போதும் என் தேவதை தான்
    உனக்கு பதிலாக தான்
    நான் பிறந்திருக்கிறேனே சிவப்பாக?

    உன் கருமை பார்த்த பின் தானே
    கருப்பின் மேல் எனக்கு மையம் வந்ததே?

    எது உன் நிறம் என்றாலும்
    எப்போதும் நீ என்னவள் தான்

    நிறம் அல்ல பெண்ணே காதலை தீர்மானிப்பது
    மனம் அல்லவோ நிரந்தரம் காதல் வாழ
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிறம் நிரந்தரம் அல்ல
    அப்பழுக்கில்லா மனமே சுகம் தரும்...
    காதலுக்கு வெண்மை ,கருமை இல்லை.
    அதற்கு தேவை உண்மை...:):):)

    மிக அழகிய கருத்து
    நன்றி
     
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Correct Sanjay... காதலுக்கு color தேவையில்ல... ஏன்னா காதலுக்கு கண் இல்ல

    Yams
    உன் வினோதமானவளே வ சுட்டு இங்க கவித எழுதி இருக்காரு sanjay... Copy right துட்டு வாங்கிட்டாய
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காலை மலர்ந்த பூக்களின் நிறம்
    மாலை வந்தால் தானே மாறிவிடும்
    காலம் காலமாய் மாறாத நிறம் என்பது
    காதல் பூக்களுக்கு மட்டும் தான் என் கண்மணி

    என அழகா சொல்லிட்டீங்க சஞ்சய்
     
  5. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    "நிறம் அல்ல பெண்ணே காதலை தீர்மானிப்பது
    மனம் அல்லவோ நிரந்தரம் காதல் வாழ"

    How true and well said

    "உன் கருமை பார்த்த பின் தானே
    கருப்பின் மேல் எனக்கு மையம் வந்ததே?"

    In my view "maiyal"-"kaadhal" would be more apt than "maiyam"(center point). Tell me if I have misunderstood.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நிறம் பார்த்து வருவது காதல் அல்ல
    மனம் பார்த்து வருவதே உண்மை காதல்
    நல்ல கவிதை சஞ்சய்
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :clap:clap:clap:clap:clapமிகவும் தெளிவான சிந்தனை Jay.
    நீ எழுதிய வரியில் உன் எண்ணங்கள் மின்னுகின்றன அழகாய்! :thumbsup:thumbsup
    காதலிக்க எல்லாராலுமே முடியும். ஆனால் அதற்கான தகுதிகள் சிலருக்கு மட்டுமே உண்டு. அதில் நீ ஒருவன் என்பதில் எப்போதும் போல இப்போதும் எனக்கு மகிழ்ச்சியே :cheers
     
  8. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    மிக்க நன்றி. உண்மையும் அதுவே ஆனால் பலர் மறுக்கின்றனர் ஏற்க
     
  9. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    அந்த பொண்ணு கதை எழுதுனே எனக்கு நீங்க சொல்லி தானே தெரியும்னே.
    :)
     
  10. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    அய்யோ அப்டினு நான் எப்ப சொன்னேன் பாஸ்?
     

Share This Page