1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னிலுன்னைக் காண எனக்கு வரம் அருள்வாய் !

Discussion in 'Posts in Regional Languages' started by AbhiSing, Nov 9, 2010.

  1. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female

    எனக்கு சுமார் மூன்று வயதிருக்கும்போது என் வீட்டில் ஒரு ரெகார்ட் பிளேயர் வாங்கினார்கள். His Masters Voice-ல் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டிக்கவசம்/ஸ்கந்த குரு கவசம் அடங்கிய இசைத்தட்டு தான் அதில் போட்ட முதல் ரெகார்ட். முருக பக்தையான அம்மாவுடன் தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி சொல்லி மனப்பாடமும் ஆகிவிட்டிருந்தது 6/7 வயதில்.

    குடும்பத்தலைவியும்(!) ஆகி இங்கே வந்தபின் பெரிதாக பூஜை செய்வதில்லை. சில நாட்கள் ஒரு ஹலோவுடன் முடித்துக்கொள்வேன்.சில நாட்கள் தூங்கி கொண்டிருக்கும் மனசாட்சி என்னைத் தட்டி எழுப்பி(போன் மூலம் கேட்கும் அம்மாவின் குரல் வடிவில்) விலாவாரியாகப் பூஜை செய்வதும் நடக்கும்.

    கூகுளாண்டவர் உபயத்தில் கேள்விப்படும் சுலோக பாராயண வகைகளையெல்லாம் ஐ -டியுனில் தரவிறக்கம் செய்து (சுட்டு:wink:)அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனாலும் மனப்பாடம் ஆன கந்த சஷ்டிக் கவசம் தான் என் மனதிலும் அவ்வப்போது வாய் மூலமும் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

    (சரி எதற்கு இந்த சுய புராணம் எனக் கேட்பவர்களுக்கு...'வரலாறு முக்கியம், அமைச்சரே":thumbsup)

    என்றாலும், கேட்கும் தடவைஎல்லாம் மிகுந்த அர்த்தமுள்ளதாகவும், பொருள் செறிவு நிறைந்த செந்தமிழ் வார்த்தைகள் நிறைந்ததாகவும், "Positive Thinking" genre-ல் விற்கும் Best sellers எல்லாவற்றின் சாராம்சத்தை உள்ளடக்கியதாகவும் விளங்குவது ஸ்கந்த குருகவசம் தான். (பெரும்பாலான மற்ற சுலோகங்கள் சமஸ்க்ருதத்தில் இருப்பதால் அம்மொழி தெரியாத எனக்கு இத்துடன் ஒப்புநோக்க வேறு சுலோகங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறுங்கள். தெரிந்து கொள்கிறேன். )

    சற்றே கனத்த சாரீரம்(சரீரமும் தான்) கொண்ட சகோதரிகளின் குரலில் ஒலிக்கும் அந்தக் கவசத்தை நாள் முழுமைக்கும் கேட்டுக் கொண்டேயிருந்திருக்கிறேன். ஏன் ஏறக்குறைய நாத்திகரான என் கணவரும் ரசித்துக் கேட்கும் பாடல் இது. ஷிவ் கேரா பக்கம் பக்கமாக எழுதி குவிக்கும் புத்தகங்களை 20 நிமிடத்தில் அனாயசமாக சொல்லிச் செல்கிறார் இதை எழுதிய ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள்.

    மேலோட்டமாக முருகனைப் போற்றிப் பாடும் பாடலாகப் புனையப்பட்டிருந்தாலும், சமயத்தில் புத்த மதத் தத்துவங்களும் இதில் மறை பொருளாக இருப்பது போல் தோன்றும்.

    புத்த மதத்திலும் சமஸ்க்ருத வார்த்தையான ஸ்கந்த என்ற சொற்பதம் புழங்குகிறது. ஸ்கந்தா என்றால்-Aggregate of existence என்று பொருளாம். Form,Sensation, perception, mental formation & conciousness ஆகியவற்றை உள்ளடக்கியது தான் மானுடம் என்கிறது அத்தத்துவம். நம் பஞ்ச பூத தத்துவம் சொல்வதும் அதைத்தானே.

    "அன்பே சத்தியம்;அன்பே நித்தியம்; அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்"; என வரும் இடத்தில் எல்லா மதங்களின் பொதுக்கருத்தை, மானுடத்திற்கு அவசியமானதை சாந்தானந்த ஸ்வாமிகள் வலியுறுத்துவதை உணரலாம்.

    " எதுவாக ஆகவேண்டுமென்று நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"-என்ற நியதியை பக்தியின் மூலம் உணர்த்தும் உற்சாக பானமாகவும், தன்னம்பிக்கை ஊற்றாகவும் எனக்குத் துணை இருக்கிறது இப்பாடல்/செய்யுள் /ஸ்லோகம்.

    "எண்ணியதெலாம் கிட்டும்;எமபயம் அகன்றோடும்;
    மூவுலகும் பூஜிக்கும்; முருகனருள் முன்னிற்கும் "
    என்று வரும் வரிகளைக் கேளுங்கள் சோர்வு ஓடியே போய், புத்துணர்வு பொங்கும்.

    ஸ்கந்த குரு கவசத்தை இங்கே கேட்டு மகிழலாம். கந்தனருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!

    உங்கள் மனம் கவர்ந்த ஸ்லோகத்தைப் பற்றி நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

    (Pictures: Google images)
     
    Loading...

  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    AS,

    Indha padaippil theiveega manam um bhakthi paravasam um vazhinthodugiradhu. Kantha Sashti Kavasam kettu irukkiraen. Innaikku thaan adhan depth konjam purindhu kondaen. Nanri!!

    Enakku migavum pidithathu: MS Subbulakshmi avargalin Venkatesa Suprabatham..

    Temple ambiance, prasaathathirkkum, Perumal koyil thulasi theerthathirkkum temple pohum "Atheist" naan :)
     
  3. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    I never used to be a very religious person until i quit my job and came here.

    my grandma, parents and brother were very different from me...i will just pray to god every morning and evening and my one line prayer was please take care of all of us....please keep everyone happy today.

    My dad used to pester me to go to temple daily which was on the way to busstop...but still i believed that praying god from outside or entering the temple and praying is the same....only thing is how we believe in god...i used to fast on special days only for mum's sake.

    all this changed after i lost my first child (8 months -before delivery)

    i became too religious...reading about god and fasting on 6 sashtis ...mainly reading kandha sashti kavacham, lighting lemon lamps for durga on tuesdays and fridays, reading durga slokams....

    of all i never used to miss reading kandha sashti kavacham even while travelling in bus to office...just bcos my mom used to say that murugan blesses us with kids...

    my son was born and i was really astonished, happy and amazed to hear unknown people call him lovingly as "balamuruga..." by looking at his face....

    even now when i switch on tv in the mornings i check vasanth tv first bcos they telecast kanda sashti kavacham every day morning.

    i do love to visit palani and pray we are able to have a wonderful darshan of balamurugan in the coming vacation.

    thanks abhi...your blogs are really interesting ya......

    benefits of chanting kanda sashti kavacham (zoom and read)

    Kanda Sashti Kavasam English

    [​IMG]
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    ஒரு சிறு விளக்கம். ஸ்கந்த குரு கவசத்தைப் பற்றி தான் இந்தப் பதிவு.
    தெய்வீக மணம் , பக்திப் பரவசம் போன்ற புரியாத வார்த்தை எல்லாம் சொல்றீங்க.(ம்..நடக்கட்டும் நாச வேலைகள்:crazy)

    என் கணவர் கேள்விகேட்காமல் எனக்காக கோயிலுக்கு வரும் Atheist .என் மகன் கேள்வி கேட்டே என்னை அசரடிக்கும் atheist.( அதாவது கணவர் பிரசாதம் கிடைத்தால் சாப்பிட்டுக்கொள்வார். மகன் பிரசாதம் கிடைக்குமா என்று உறுதி செய்து கொண்டபின் தான் கோயிலுக்கே வருவான்.:idea)

    அடிக்கடி வாங்க சிங்கம். உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகப்படுத்துகிறது. நன்றி.
     
  5. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    For your eloborate feedback.

    Thiruchendur is my favourite Murugan Koil. In my childhood, my parents used to bring me there every year for 5 days. Hmmm...Long time.

    In a way we both share same sentiments. I also lost my first born. And my son Abhi is gifted to me by God, the second time. So I can understand the feelings. And I too chant Kandha Sashti Kavasam in the train on the way to office.

    Thank you Sunita. Your Comments are more interesting, bringing out so many memories. Visit again.

     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Hai abhi...enakum romba pidichathu sasti kavasam
    aanalum nan athigam kepathu MS Amma vin padagal...
    mukiyamaga "Kurai onrum illai","Bhaja Govindham","Suprapatham"
     
  7. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    நீங்கள் குறிப்பிட்டுள்ள -ன் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.
    உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அருமையாக இருக்கிறது படிக்க.
    இவ்வளவு தாமதமாகப் படித்து விட்டு, பின்னூட்டம் தருவதற்கு மன்னிக்கவும்.
    எனக்கும் ஸ்கந்த குரு கவசம் மிகவும் பிடிக்கும்.
    சூலமங்கலம் சகோதரிகளின் சாரீரம் பற்றியும் சொல்லி, இலேசாக குறும்பு கலந்திருந்தது இரசிக்க வைத்தது.
    -ஸ்ரீ
     
  9. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    மன்னிப்பா ..என்னதிது ? நீங்க நேரம் இருக்கும்போது படித்து பின்னூட்டமிட்டால் எனக்கு மகிழ்ச்சிதான்.மற்ற பதிவுகளையும் படிங்க. கருத்தைச் சொல்லுங்க.

    குறும்பை ரசித்தமைக்கு நன்றிகள். :)
     
  10. sojourner

    sojourner Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    75
    Trophy Points:
    68
    Gender:
    Male
    > ஏறக்குறைய நாத்திகரான என் கணவரும் ரசித்துக் கேட்கும் பாடல்

    I was glad to see the above line. I don't know anything in particular about this song. And in my case, one can definitely eliminate the ஏறக்குறைய. However, I like listening to religious songs and even singing religious songs as well as other songs. My children are both trained in Western music and make fun of my singing but that won't stop me :)

    > குடும்பத்தலைவியும்(!)

    I was glad to see this too, since I also put a major act on, pretending to be the head of my household :)
     

Share This Page