1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவோ அவளின் நிலை ?

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 18, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தோட்டத்து மல்லிகையின் வாசம் அவள் நுகரவில்லை !
    வீட்டு வாசலிலே கோலம் கூடப் போடவில்லை!
    ஆட்டம் போட்டு விளையாடும் குழந்தைக்கு ஈடாக
    பாட்டெதுவும் பாடவில்லை, தாலாட்டும் கூறவில்லை !

    பாலில் சர்க்கரைச் சேர்த்தாலும் இனிக்கவில்லை !
    நூலில் ஆடுகின்ற பொம்மை போல அவளின் நிலை !
    வேலை ஓடவில்லை, நினைவும் நகரவில்லை !
    சேலை நேர்த்தியாகக் கட்டிக் கொள்ள வரவில்லை !

    இதன் பின்னணி பெரிதாகக் கவலை கொள்ள ஒன்றுமில்லை !
    ஆதலால் உலகத்தீர் தவிக்க வேண்டாம் , பணி நிமித்தம்
    காதல் கணவனவன் வெளியூர் சென்ற தனிமை
    வேதனைதான் அவள் கவலை ,படர்ந்ததே பெரும் பசலை !!!

    பி.கு இந்தப் பாட்டுடைத் தலைவி நான் இல்லை !!gigglingsmiley


    Regards,

    Pavithra
     
    4 people like this.
    Loading...

  2. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    I thought she was bedridden with fever. :)
     
    1 person likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Googly !!:rotfl
     
    2 people like this.
  4. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பி.கு இந்தப் பாட்டுடைத் தலைவி yarunu therinchiduchcha. !!
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female


    அதை வாசகர் வசம் விட்டு விடுகிறேன் !!
     
    1 person likes this.
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @PavithraS,

    Good one .........
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நம்பிட்டேன் .பசலை படர்ந்த அந்த பைங்கிளி யாரோ .
     
    1 person likes this.
  8. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    கவிதை அருமை...
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நன்றாக இருக்கிறது பவித்ரா. வாழ்த்துக்கள்.

    நீ அணைத்திட விலகும்,
    பிரிந்திட விரைவில் பரவும்,
    நோயில் விழுந்திட்டேன் நானும்!
    இப்பொழுதும் நரகெனவே நீளும்!

    நீ வரும் வரை கல் போன்றும்
    பின் நீரில் துணி போன்றும்
    ஆன என் நிலையை அறிவாயா?
    அறிந்திருந்தால் பிரிந்திருப்பாயா?

    நாம் சேர்ந்து கண்ட பொருளெல்லாம்
    சோபை இழந்தே காட்சி தரும்,
    நமைச் சேர்த்து வைத்த வெண்ணிலவும்
    வாராதிருந்தே இருள் சேர்த்துவிடும்!

    என்றைக்கு வருவாய், அன்பே சொல்?
    சூடா மலர் போல் தனித்திருக்கும் நான்
    வாடாமலராய் மகிழ்ச்சியுறும் நாள்
    அருகில் உண்டா? உடன் நீயே சொல்!
     
    4 people like this.
  10. girvani

    girvani Platinum IL'ite

    Messages:
    1,020
    Likes Received:
    2,914
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Very beautiful, loved it
     

Share This Page