1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவென்று நான் சொல்ல என் நிலையை???

Discussion in 'Regional Poetry' started by ramyaraja, Sep 16, 2010.

  1. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அலார அலறலில் கண்விழித்து
    மணி பார்த்து மனம் பதைத்து
    அவசரமாய் கறிகாய்கள் நறுக்கி,
    மிக அவசரமாய் சாதம் வடித்து,
    கழுத்தை திருப்பி அறையில் பார்த்தால்
    சின்ன சிட்டு நிம்மதியான உறக்கத்தில்..
    உதடுகள் கொஞ்சம் விரித்து சிரிக்கிறாள்..
    கனவில் கடவுள் பூவை காட்டுகிறார் போல..
    மெல்லிய புன்னகை பூக்க..
    மீண்டும் திரும்பி செய்தேன் அதே அவசர சமையல்..

    முன்னறையில் மாட்டிய கடிகாரக்குயில் எட்டு முறை கூவி உள் செல்ல
    மெதுவாய் என் சின்னவள் அறை சென்று
    தடவி, அவள் முடி கலைத்து, முத்தம் வைத்து எழுப்பினேன்
    அம்மா என்று சிரித்து எழுந்த செல்லப்பட்டு
    சட்டென முகம் சுழித்து “டே கேர் வேண்டாம் மா
    எனக்கு அம்மா கேர் தான் வேணும்” என கண்கள் நனைய
    ஆரம்பித்தாள் தினம் பாடும் பல்லவியை..
    கண் துடைத்து அணைத்திட துடித்தாலும்..
    முகம் சுருங்கி அவள் உறுத்து கூறினேன்..
    “குட்டி பெண் போல் அடம் வேண்டாம்”
    சுட்டி பெண் விசும்பி கொண்டே காலை கடன்கள் முடித்தாள்..

    தினம் காலை நடக்கும் இந்த நாடகம் பார்த்து
    கண்களால் புலம்பிய படி என்னவர் சோர..
    விசும்பிய பெண்ணுக்கு புது சட்டை போட்டு..
    பட்டாய் அவள் சிறு முடி சேர்த்து ஒரு கொண்டை போட்டு..
    அழகாய் அலங்காரம் செய்தேன்..
    இருவருக்கும் சேர்த்து அடுக்கிய பைகள் எடுத்து
    விரைந்து சென்று வாகனம் எடுத்தேன்..
    முன் ஏறி அவள் நிற்க..
    பள்ளி வாகனம் ஒன்று வந்து நின்றது..
    சின்னஞ்சிறுசுகள், பொடி வாண்டுகள் வண்டியில் ஏற்ற
    வீட்டில் மட்டும் உழைக்கும் அம்மா கூட்டம்..

    அம்மாக்கள் டாட்டா காட்ட மெதுவாய் ஊர்ந்தது பள்ளி வாகனம்..
    என் பக்கம் திரும்பிய என் செல்வமகள்
    “நானும் பஸ்ஸில் போனால் நீ நின்று டாட்டா சொல்வாயா???”
    கேள்வி ரொம்ப சிறிதாய் இருப்பினும்
    எனக்கு தான் முள்ளாய் குத்தியது..
    டே கேர் விட்டு வண்டி எடுக்கையில்..
    பண்ணிய சிங்காரங்கள் கையால் கலைத்து
    கண்ணில் பொங்கும் கண்ணீருடன்
    குற்றம் சாட்டும் பார்வை பார்த்து
    நிலைப்படியில் நின்றபடி பிஞ்சு மகள்..

    மகளின் மனம் உடைத்து பணம் தேவையா??
    புலம்பி கலங்கி அழுதபடியே வாகனம் எடுத்தேன்..
    தினம் தினம் நடக்கும் இதே கூத்து தான்..
    வீடு வந்து சேர்ந்ததும் தங்கம் அவளை கையில் ஏந்தி கேட்டேன்..
    “அம்மா தான் உனக்கு பதிலே சொல்வதில்லையே
    தினமும் ஏன் இதே கேள்வி??”
    “என்றாவது ஒரு நாள் நீயும் ‘நிச்சயம் குட்டி
    நானும் உனக்கு டாட்டா காட்டுவேன் கீழ நின்றபடி’ன்னு
    நீ சொல்வாயோ என்று தான்”
    முகத்தில் யாரோ பட்டென்று அறைந்தது போல் நின்ற அந்த நிமிடம்..
    இரவு முழுதும் விசித்த படியே நான் உறங்கி
    மீண்டும் மறுநாள் எழுந்தேன் அலார அலறலில்..
     
    Loading...

  2. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    பணீக்கு செல்லும் பெண்களீன் நீலைமையையும், குழந்தைகள் படும் ஏக்கத்தையும் மிக அழகாக எடுத்துரைத்துதற்க்கு பாராட்டுக்கள்.
     
  3. kannaa

    kannaa Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Male
    ஒரு பெண்ணின் அர்பணிப்பு வாழ்க்கை உங்கள் எழுத்துகளில் தெரிகிறது வாழ்த்துக்கள்...........
     
  4. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    velaiku pogum pengalin kashtam azhagai yeduthu uraitheergal:thumbsup
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அலுவலகத்தில் அல்லல் படும் தையலின் வேதனை,
    பார்க்க,படிக்க வேதனை தான்,இருப்பினும்,
    அவசரமான இந்த உலகினில்,
    நிமதியாய் இருந்திட ஏதடி பெண்ணே நேரம்,
    உனக்கு சிந்திக்கவாவது நேரம் இருந்ததே,
    அது தரும் நல் வழியும்,நல் மொழியும்,
    மகளுடன் இருக்கும் பொழுதில்,
    இனிமையாய்,இன்பமாய் கழித்து களித்திரு!
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Velaikku pogum palarin vethanaiyaana unmaiya azhaga sollirkeenga ramya...Enaku unga kutti ponnen nambikkai romba pidichirkku...:) amma endraavathu ipadi enkooda irupaalnu nambikaiyooda oru chinna yekkam azhaga theriyuthu..Super ma

    Idu unga sontha kadhaiya???:hide:
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Ramya, romba arumai varigal..........aayin manam romba kalangiyadhu unadhu varigalai padithu !!
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Ramya pichu otharittinga unmaayana nigalvai kanmunney nirutthi alagaai

    vaditthu kaati uleergal:bowdown:bowdown:bowdown
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Ramya,enna solradhu......manasa touch paniteenga.....velaiku pora ovvoru ammavoda feelings idhu ilaya....

    but unga chinna chittoda futureku dana ...so no guilt feelings....sekarama ava puringuppa....
     
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Ramya,

    Super pa...oru chinna kathai maathiri azhaga kavithaila oru thaayin vethanaiya solli irukeenga.:bowdown
     

Share This Page