1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னதான் செய்தாய் நீ???

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Sep 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பிரவாகமாய் பொங்கும் வார்த்தைகள்,
    ஆரவாரமாய், எங்கும் நிறைந்த என்
    ஆளுமை, என அனைத்தும் இடம்
    தெரியாது போயின


    பார்வையில் தீர்க்கம், வாக்கிலே மூர்க்கம்,
    என ஒரு மார்க்கமாய் இருந்த என்னை
    என்ன செய்தாய் நீ??


    பார்வையிலே கனிவு, பேச்சிலே குழைவு
    என ஒரு இனிய கலவையாய் எனை
    மாற்றி இம்சிக்கிறாய் நீ...


    இதம் தரும் உன் பேச்சும்,
    மாருதமாய் அதன் வீச்சும்,
    வாசம் தந்து எனை வசம்
    இழக்க வைக்கிறதே...


    எனை வழி நடத்தும் சாரதியாய்....
    என் சோக இருள் அகற்றும் தீயாய்....
    என்னுளே அனைத்துமே நீயாய்....


    என்னிலே எல்லாமாய் நீ??
    என்னதான் செய்தாய் நீ???
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மனிதர்பால் காதலோ, கடவுள்பால் பக்தியோ,
    எதுவாக இருந்தாலும் உங்கள் கவி நன்று.
    -ஸ்ரீ
     
  3. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    Arumaiyana kavidhai from arumaiyana pennidamirundhu. Yar andha lucky nee

    love
    viji
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உயிருக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்
    அதிசயம் தந்த அதி ரசம்
    அதி ரசம் தந்த பரவசம்
    பரவசம் தந்த நவரசம்
    நவரசம் தந்த ஒரு வரம்
    எனக்குள் நீ
    எல்லாமும் நீ
    எப்படி?????
    அப்படி.

    ஆளவந்தான் .ஆழ உழுதான் .
    நல் வினை விதைத்து
    நல்ல பண்பான செழிப்பு
    அறுவடை.....கோமேதக குணவதி :)

    மூக்கணாங் கயிறு நல்லா தான் வேலை செய்யுது :exactly:
    எனக்கொரு சந்தேகம் :hide:
    அவுங்க மொதல்ல நாலு வார்த்தை கோர்வையா பேசுவாங்களா.... இல்ல நீங்கதான் பேச விடுவீங்களா....:biglaugh:biglaugh:biglaugh
     
    Last edited: Sep 2, 2010
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் வரையில் இருவரிடமும் நான் கொண்டதும், கொள்வதும் காதல் தான்....

    இந்த வரிகள் என் மன்னவனுக்காக...

    நன்றி உங்கள் வருகைக்கும்... வரிகளுக்கும்
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    நீண்ட நாள் கழித்து வந்த அன்பு அன்னையின் பின்னூட்டம்... எனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    அந்த நீ வேறு யாரும் அல்ல அம்மா, என் கணவர்தான்...

    நன்றி அம்மா, உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும், உங்கள் அன்புக்கும்...:bowdown
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அவர் அப்படி செய்ய நீங்கள் அவரை,
    ஏதோதோ செய்திருக்க வேண்டும் வேணி...
    பயங்கரமாக பாதிக்கப் பட்டத்தின் விளைவு,
    அவர் உங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டார்.

    உங்களை வர்ணித்ததைப் பார்த்தால்,
    தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில்,
    வரும் வில்லி ரேஞ்சுக்கு இருந்த உங்களை,
    நாங்கள் அனைவரும் நேசிக்கும் அன்பு உள்ளமாக,
    மாற்றிவிட்டார் போல் தெரிகிறதே. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    அவர் இது மாதிரி சொல்ல நினைப்பார் உங்களைப் பற்றி,
    ஒருவேளை அவருக்கு உங்களைப் போல் கவிதை எழுத தெரியாததனால்.


    என்ன செய்தாய்?
    என்னதான் செய்தாய்?
    எனை என்ன செய்தாய்,
    என்னை என்னச் செய்தாய்,
    என்னையே உணரச் செய்தாய்,
    என்னுள் இருப்பதை வெளிக் கொணர்ந்தாய்,
    என்னையே உன்னிடம் கொடுக்கச் செய்தாய்,
    என் வாழ்வில் அழகிய வண்ணங்கள் சேர்த்தாய்,
    என் கண்களில் உலகம் அற்புதமாக தெரியச் செய்தாய்,
    எனைக் காதல் என்ன என்பதை நான் அறியாமலே அறிய வைத்தாய்.......
     
  8. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi Veni,

    Arumaiyaana varigal..super unga kavithai.:thumbsup:thumbsup

    neenga ezhudhuradha rasichikitte irukkalam.


    Nats,

    ungal pathil kavithaiyum romba azhagu.:thumbsup
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super Veni.. anaithu perumaiyum ungalavaraiye serum.. :)
     
  10. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    என்ன செய்தாலும் மாறும் குணம் அல்ல உங்களுக்கு ஆனால்
    உங்களையே அவருக்குள் செதுகியதல் வந்த மற்றம் தானே?
     

Share This Page