1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எதை நோக்கி ???

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 17, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    எதை நோக்கி ???? கட்டுரை....
    _____________________________

    அவசரம்! வேகம்! பரப்பரப்பு !!! பதட்டம்!!!

    இவை எல்லாம் காலை விடியல் முதல் இரவு கண் இமை மூடும்வரை ,,,,

    பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் கண்ணோட்டத்தில் எழுதி உள்ளேன்..

    அவசரம், அவசரம் , அவசரம்..... காலை எழுந்து அரக்க பறக்க வாசலில் கோலம்,,, பின்பு காபி அதை நிறுத்தி நிதானமாய் நாம் ரசிக்க முடிகிறதா இல்லையே!!! அந்த காபி கையில் வைத்துக்கொண்டே காய்கறிகளை எடுக்க, பாலை காய்ச்ச என்று பல வேலைகள்.... காபியின் ருசி அம்மாவின் கையால் வாங்கி சாப்பிட்டதோடு சரி....ஆனால் ஒன்று, சமீபத்தில் முடிவெடுத்துள்ளேன். எந்த வேலையாக இருப்பின் எனக்கென்று சில நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்று... ஒன்று காலை காபி நேரம் , மாலை காபி நேரம்.... பத்து நிமிடங்கள்...எனக்கே எனக்காக ....ஒதுக்குங்கள் பெண்களே சுகம் தரும் தருணம் அதுதான்... சில சமயங்களில் அதுவும் முடியாது... ஆனால் முயற்சி செய்யலாம்..

    காபி முடிந்ததும் அவசர குளியல், பின்பு அவசர வணக்கம் கடவுளுக்கு , காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு , நடு நடுவில் இட்லி தோசைக்கு ஊறவைப்பது என்று வேலைகள் .... எதை விடுவது ???? இவை அனைத்தும் 8.30 குள்... பின்பு இருக்கும் 10 நிமிடங்களில் சிகை அலங்காரம், புடவை அலங்காரம் .....மாலை வரை அலுவலகத்தில்.... அங்கு உள்ள சிக்கல்கள், தொல்லைகள் இருப்பினும் சிறு இன்பங்கள்..... எல்லாவற்றையும் முடித்து மறுபடியும் மாலை, இரவு வேலைகள்......

    இப்படியே, நாட்கள் ஓடின, மாதங்கள் ஓடின, வருஷங்கள் ஓடின....... எதை நோக்கி இப்படி சுழல்கின்றோம் என்று நிதானமாய் யோசித்தால் " ஒன்றும் இல்லை" என்று தான் பதில் கிடைத்தது...

    ஒன்று ஒப்புக்கொள்கிறேன்!!! அந்த காலத்தில் பெண்கள் பணம் தேவைக்கு ஆண்களை சார்ந்து இருந்தனர் உண்மை... இருப்பினும் அப்பொழுது பெண்களிடம் தான் சம்பாதிக்கும் பணத்தை கொடுத்து வைத்திருந்தனர்.... இப்பொழுது நம்மிடம் பணம் இருக்கிறது , வீடு இருக்கிறது, நிறைய புடவைகள் இருக்கின்றன ஆனால் எதையும் சரியாக அனுபவிக்க கூட முடியவில்லையே??? வருத்தமாய் இருக்கிறது...

    உதரணத்திற்கு,,, அந்த காலத்தில் துணிமணிகள் கம்மிதான்... இருப்பினும் கல்யாணம், விசேஷங்கள் அதிகம்... உடுத்திய துணிகளையே திரும்ப திரும்ப போட்டுக்கொண்டாலும் நிறைவு இருந்தது... இன்றோ??? அலமாரியில் துணிகள் குவிந்துள்ளன நம்மால் அழகு செய்து பார்க்க நேரம் இருக்கிறதா?? கல்யாண முஹுர்த்தம் செல்ல முடிகிறதா.... இல்லையே??? ஏதோ போகவேண்டுமே என்று போகிறோம்.... எல்லாவற்றிலும் அவசரம்.

    சாப்பாட்டை எடுத்துக்கொள்வோம்... என்றாவது ஒருநாள் நிறுத்தி நிதானமாய் உட்கார்ந்து ரசித்து ருசித்து சாப்பிட முடிகிறதா??? ஏதோ அள்ளி போட்டுக்கொள்கிறோம்...சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்வியே முன் வருகிறது ....இருப்பினும் சுயன்ருகொண்டுதான் இருக்கிறோம்...
    எப்படி சரிசெய்வது??? முடியும் நம்மால் முடியும்...

    நமக்காக என்று சில வேலைகளை, கொள்கைகள் வைத்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இன்றைய கால கட்டத்தில் இருக்கிறோம்...

    நமக்கு பிடித்த பாடல்களை கேட்பது

    நான் ரசனை என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்... அதில் கூறிய படி நாம் செய்யும் சிறு சிறு வேலைகள், அதை நாமே ரசிப்பது... வாசலில் கோலம், நம் சமையல், சிறு கைவினை பொருள்.....

    நம்மை நாமே பாராட்டிக்கொள்வது .. இது மிகவும் அவசியம்...

    நமக்காக சிறு நிமிடங்கள் ஒதுக்கி கொள்வது .. காபி நேரம் போல்.....

    இவையே நாம் இன்பம் காண , கவலைகளை மறக்க உதவும்....

    பெண்களே..... கடமைகளை செய்வோம் ஆனால் நமக்காகவும் வாழ்வோம்.....

    மீண்டும் வருவேன்

    மைதிலி ராம்ஜி
     
    vaidehi71, Caide and uma1966 like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    வேலைக்கு செல்லும் பெண்ணின் மன நிலையை அப்படி யே படம் பிடித்தது போல் எழுதி விட்டீர்கள் . அருமை . நானும் 26 வருடமாக இயந்திர கதியில் ஒடிக் கொண்டு உள்ளேன். நீ ங்கள் எழுதியது போல் அரக்க பரக்க காலை 4 மணி க்கு எழுந்து , 8 மணிக்குள் சமையல் வேலை, சுவாமி ஸ்லோகம் ., washing வேலை என முடித்து வி ட்டு, வீட்டில் உள்ளவர்களையும் கவனித்து விட்டு , ஏனோ தானோ என்று make up செய்து , 8 மணிக்கு பஸ்ஸை பிடித்து இடி ராஜா க்களின் மத்தியில் பயணம் செய்து அலுவலகம் செல்வதற்கு ள் போதும் போதும் என்று ஆகி விடும் . மா லையிலும் அலுத்து சலித்து, வரும் பொழுதே காய்கறிகளை வாங்கி கொண்டு மறுபடியும் அரக்க் பரக்க வேலை செய்ய வேண்டிய நிலை. நீ ங்கள் சொல்வது போல் நம் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும் வி ஷயங்களிலும் நாம் கவனம் செலுத்தி னால் நம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் . நமக்கு சலிப்பு ஏற்படாது . நம் வாழ்க்கை நம் கையில். அழகான பதிவிற்கு நன்றி :thumbsup
     
  3. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    super ma unmai namakaga naam konjam time spend pandrathu thappe illa
     
    vaidehi71 likes this.

Share This Page