1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எச்சிலையும் வாஸனையும்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 26, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:எச்சிலையும் வாஸனையும்
    :hello:
    ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால்
    அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக
    நமக்கு வரும் .

    அது போல ஒருவர் செருப்பை ஒருவர்
    போட்டாலோ, இல்லை துணி மணியை
    உபயோகித்தாலோ,இல்லை ஒருவர்
    படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ,
    இல்லை ஒருவர் மாலையை
    இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ,
    ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர்
    உபயோகித்தாலோ, ஒருவர்
    உள்ளங்கையாய் இன்னொருவர்
    உள்ளங்கையால் தொட்டாலோ,
    அவர்கள் குணம் வாசனைகளாக
    நமக்கு வரும்.

    திருமணத்தின் பிறகு இருவருடைய
    மனமும் ஒத்து போக வேண்டும்,
    சண்டை போட கூடாது என்றால்
    இருவேறு குடும்பங்களில் இருந்து
    வந்த இவர்களுடைய குணங்களும்
    வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக
    வேண்டும்.
    அதற்க்கு தான் திருமண
    சடங்குகளில் ஒருவர் மாலையை
    இன்னொருவருக்கு போடுதல்,
    ஒருவர் எச்சில் செய்த தட்டில்
    இன்னொருவர் சாப்பிடுதல், இருவர்
    உள்ளங்கையயும் சேர்த்து
    பாணிகிரஹணம் என்று பிடித்தல்,
    ஒருவர் காலை இன்னொருவர்
    தொடுதல், ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும்
    துணியை இன்னொருவர் துணியுடன்
    முடி போடுதல், என்று இருவருடைய
    வாசனைகள்,
    குணங்களை பரிமாறி
    கொள்ளும் சடங்குகளாக வைத்து
    இருக்கின்றனர். அதனால் மனமும்
    குணமும் வாசனைகளும்
    ஒத்துப்போனால்,சண்டைகள் குறைந்து
    ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே
    காரணம்.

    இதனால் தான் சாஸ்திரங்கள்
    மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட
    எச்சிலை சாப்பிட்டு,அவர்களுக்கு
    கால் பிடித்து விடு,அவர்கள் உடுத்திய
    வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள்,
    அவர்களுக்கு போட்ட பூமாலையை
    நீ போட்டு கொள்,அவர்கள் கால் பட்ட
    மண்ணை தலையில் போட்டு கொள்
    என்றெல்லாம் சொல்வதற்கு
    காரணமும் இதுவே .

    அப்படியாவது அவர்களிடம் உள்ள
    தெய்வீகத்தில், குணங்களில் ,
    வாசனைகளில் கொஞ்சமாவது
    அழுக்கு படிந்த நமக்கு தப்பி
    தவறி வந்து விடாதா என்ற
    காரணமே.

    கோயில்களில் இறைவனுக்கு
    சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள்
    பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும்
    காரணமும் இதுவே

    உபநிஷதுகளில் மிக பெரிய
    தவங்கள் செய்த ஒரு மகரிஷி
    இன்னொருவர் செருப்பை போட்டு
    கொண்டதினால் இன்னொரு
    பிறவி எடுத்தார் . நாரதர் சாதாரண
    கீழ் குலத்தில் இருந்து நாரத
    மகரிஷி ஆனதிற்கு காரணம், ரிஷிகள்
    சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை
    அவர் உட்கொண்டு வந்ததே. இது
    போல எண்ணற்ற உதாரணங்கள்
    நமது சாஸ்திரங்களில்
    கொடுக்கப்பட்டுள்ளது .

    தண்ணீருக்கு இந்த வாசனைகளை
    போக்கும் சக்தி உண்டு .அதனால்
    தான் ரிஷிகள் ஒரு கமண்டலுவில்
    அருகில் தண்ணீர் வைத்து
    கொள்வார்கள் .ஒரு திருடனின்
    வாசனையை மோப்பம் பிடிக்கும்
    நாய் , தொடர்ந்து சென்று அவன்
    போகும் பாதையை கண்டுபிடிக்கிறது .
    ஆனால் அவன் ஒரு நீர் நிலையை
    தாண்டிவிட்டால் அந்த நாயினால்
    அவனுடைய வாசனைகளை
    கண்டுபிடிக்க முடிவதில்லை .
    தண்ணீருக்கு அத்தனை சக்தி
    உண்டு . அதனால் தான் பெரியோர்கள்,
    மஹான்கள் அடிக்கடி குளித்து
    கொண்டே இருக்கின்றனர்.

    பரிக்ஷித்து மஹாராஜா வேட்டைக்கு கிளம்பும் நேரம், அவரது கிரீடம் கிடைக்காமல் அவசரத்தில் பீமனுடைய கிரீடத்தை அணிந்து சென்றான்.

    அதன் விளைவே அவனுக்கு முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போடும் எண்ணம் ஏற்பட்டது.

    அதன் பின்விளைவு அனைவரும் அறிந்ததே
     
  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    • அந்த துறவியிடம், ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது.
      ‘சாஸ்திரங்களைப் படித்து, அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார்.
      சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே.. இடையில் குரு எதற்கு?’ என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது.
      அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து, சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது, துறவி களைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.
      ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான்.
      அந்த நூலில், ‘எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ என்ற வாசகங்கள் இருந்தது.
      அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான்.ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும், எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள்.
      இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். ‘சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள்’ என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று, குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான்.அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ‘ஏனப்பா! பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே...
      என்று விசாரித்தார்.
      ‘உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா?’ என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன்.முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு, அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான்.
      இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது.. ‘இவன் ஒரு அரைகுறை’ என்று.
      சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். ‘எச்சில் பரிசுத்தம்' என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் 'இறைவனுக்கு' பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக் கிறார்கள்’ என்று விளக்கினார்.
      சீடனின் மனதில் பெரிய குழப்பம். ‘அப்படியானால், வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள்?’ என்று வினவினான்.முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். ‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது.
      பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார்.
      சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரிந்தது.எதையும் மேலோட்டமாகப் பார்த்து படிப்பது என்பது வாழ்க்கைக்கு உதவாது. அதன் நுட்பத்தை ஆழமாக அறிய, ஒவ்வொருவருக்கும் "குரு"என்பவர் அவசியம் தேவை.
      On reading Shri Thyagarajan's write up I was reminded of the above story.
    • Jayasala42
    • ,
    • or
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நன்றி.
    அரு மையான விளக்கம்.
    For decades, I was watching mom would eat only after dad finishes his meal served in dad's silver elliptical plate and mom would eat small pyramids of rice in that plate unwashed.
     
    Last edited: Mar 28, 2021
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    In our family from the beginning this habit was thought of as unhealthy by my mother-in-law.But I have seen many wives eating in the same unwashed plate used by husbands.

    Jayasala42
     
    Thyagarajan likes this.

Share This Page