1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஊர்பாசம் - தனலட்சுமி டாக்கீஸ்

Discussion in 'Posts in Regional Languages' started by Nilaraseegan, Oct 28, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    உலகின் எந்த புலத்தில் என் பாதங்கள் படும்பொழுதும் ஏற்படாத அற்புத உணர்வை நான் பெறுவது ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான்.
    அது என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த என் கிராமம். பாரதி பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் எனும் சிற்றூரின் அருகே
    இருக்கும் நடுவைக்குறிச்சிதான் என் ஊர். வெள்ளந்தி மனிதர்களாலும் எண்ணிலடங்கா விளையாட்டினாலும் நிறைந்தது என் பால்யம்.

    பள்ளி மைதானத்தில் "ரவுண்ட் ரேஸ்" அல்லது "சில்லாங்குச்சி" விளையாடி கொண்டிருக்கும்போது நேரம் என்ன என்பதை எங்களுக்கு உணர்த்துவது எங்களூர் தனலட்சுமி டாக்கீஸ். தினம் இரண்டு காட்சிகள் மட்டுமே கொண்ட சிறிய தியேட்டர். மாலை ஐந்து மணிக்கும் இரவு எட்டு மணிக்கும் காட்சிகள் ஆரம்பமாகும். நான்கு நாற்பத்தைந்துக்கு சத்தமாக ஒலிக்க ஆரம்பிக்கும் பழைய பாடல்களை கேட்டவுடன் மணி ஐந்தாக போகிறது என்பதை அறிந்துகொள்வோம்.

    "நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்","குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா" என தினம் ஒலிக்கும் பாடல்கள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்டவை. தரை டிக்கெட்,பெஞ்சு டிக்கெட்,சேர் டிக்கெட்,சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தியிருப்பார்கள். பெண்கள் பக்கத்திற்கும் ஆண்கள் பக்கத்திற்குமிடையே குட்டிச்சுவரொன்று நிற்கும். அலைபேசிகளும் இணையமும் வருவதற்கு முந்தைய காலகட்டமது. காதலர்கள் தாங்கள் நேசிப்பவரை சந்திக்கும் இடமாக விளங்கியது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். உழைத்து ஓய்ந்த ஜீவன்களின் மாலைப்பொழுதை ரம்மியமாக்குவதும்,வெளியூர் கண்டிராத கண்களுக்கு புற உலகையும் திரைப்படங்களின் வழியே காண்பிப்பதும் எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். இடைவேளையின் போது கிடைக்கும் முறுக்கும்,வடையும் வேறெங்கும் கிடைக்காத சுவை கொண்டவை.

    கேபிள் டீவியின் வருகையினாலும்,சிடி,டிவிடி என்று பெருகிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் வருமானமின்றி கடுமையான பாதிப்புக்குள்ளானது எங்களூர் தியேட்டர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ்.

    கால்சட்டை நிறைய கோலிக்காய்களுடன் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு தனலட்சுமி டாக்கீஸில் படம் பார்க்கும்போது கிடைத்த பரவசம் சென்னையின் மல்டிப்ளெக்ஸில் பார்க்கும்போது கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

    -நிலாரசிகன்.
     
    Loading...

  2. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hello Neelaraseegan,

    Beautifully described your feeling and memories of your childhood. I am also form a small town ( village) near Tenkasi. The movie talkies used to be far form home. We get to go only when my cousins used to visit. Best part of the show used ot be intervel. I love the Kalar soda wit muruggu etc. Nothing like watching in a talkies than watching anywhere in the world.
    Good writing!!!! Great memories!!!!

    Thanks for bringing back my memories.
     
  3. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    டூரிங் டாக்கீஸ்கள் ...காலத்தால் அழிந்த அழகான கோலங்கள்.

    தனலட்சுமி டாக்கீஸ் மட்டுமல்ல...எல்லா டாக்கீஸ்களும் தான்.:)


    (நடுவைக்குறிச்சி-என் batchmate/senior -ன் சொந்த ஊர் .)
     
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Beautifully narrated and Great Writing!! Thanks for sharing :)
     

Share This Page