1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஊதாப்பூ...{pub.in vikatan - 30/3/2016-thx vikatan.}

Discussion in 'Regional Poetry' started by bharathymanian, Mar 31, 2016.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    ஊதாப்பூ

    கவிதை: லக்ஷ்மி மணிவண்ணன்.

    பெருநகரப் பேருந்துப் பயணத்தில் மீண்டும் ஈஸ்வரிச் சித்தியை

    எதிர்கொள்ள நேரும் என நினைத்துப்பார்த்ததில்லை.

    அவளென்னை இனங்காணா வடிவில் பெருத்திருக்கிறேன் போலும்

    காக்கை பார்வையில் விலக்கிக் கடக்கிறது

    அவளது உத்வேகம்.

    கூந்தலில் சூடிய ஊதாப்பூக்கள்

    கிராமத்தில் அவள் உடன் தூக்கிய வண்ணம் மரமேறிய காலத்தின்

    அதே நிறத்துடன் இருந்தன

    அவை மரம் விட்டு மரம் தாவி இந்தப் பயணத்தில்

    உடன் நுழைந்ததெங்கனமோ?

    பெருநகரக் கடற்கரையைப் பாய்ந்து கிழித்துச்செல்லும் பயணம்.

    பயணத்தை நிறுத்தி இறங்கி வழிநடக்கும் அவளை

    ஓங்கிக் கத்திப் பின்தொடர்ந்த மனம்

    அவள் ஏற்றியிறக்கிய மரக்கிளையெல்லாம் தாவ...

    கடந்து செல்லும் ஈஸ்வரிச் சித்தியை

    வாழ்ந்துகொண்டிருக்கும் ஈஸ்வரிச் சித்தி

    அறிய மாட்டாள் என்பதல்லோ பெருந்துயரம்!

    மரக்கிளையில் இருக்கும் ஈஸ்வரிச் சித்தி

    பழைய நற்தருணம்

    மரக்கிளையில்தான் இருப்பு

    ஊதாப்பூக்கள் அவளது அடையாளம்

    ஊதாப்பூக்களின் நிறமொன்றே

    ஈஸ்வரிச் சித்தி என்றாலும் பிழையில்லை.

    பேருந்துப் பயணத்தில் மீண்டுமொரு மரக்கிளையில் எனையேற்றி

    பயணிக்கிறது கடற்காற்றின் சித்து.
     
    kaniths likes this.
    Loading...

Share This Page