1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உலகம் உன் பின்னால்........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 2, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உலகம் உன் பின்னால்........


    உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
    பூ இதழ் விரிக்காமலே இறந்திக்கக் கூடும்.
    உன் நினைவுகளும் அப்படியே...உதிர்ந்தாலும் மீண்டும் மலரும்.

    கருகி விடுவோம் என கலங்கி இருந்தால்
    விறகு சருகாய் வீணாய் காய்ந்திருக்கக் கூடும்
    உன் நெஞ்சுரமும் அப்படியே ....கருகினாலும் உரமாய் மாறும்

    கரைக்கே திரும்புவோம் என எண்ணி இருந்தால்
    அலைகள் அலையாமல் ஆடாமல் நின்றிருக்கும்
    உன் காத்திருப்புகளும் அப்படியே .....அலை மோதினாலும் கரையைத் தொடும் .

    மண்ணில் விழுந்து கரைவோம் என பயந்திருந்தால்
    மழைத்துளி விண்ணிலே காணாமல் போயிருக்கும்
    உன் முயற்சிகளும் அப்படியே .....கரைந்தாலும் விளைச்சலைத் தரும்.

    உன்னைத் தளர்த்தும் சோதனைகள்
    சாதனைகளுக்கு சாலைகள் ஆகட்டும்.....
    உன்னை துரத்தும் தோல்விகள்
    வெற்றிக்கான வேள்வியை வளர்க்கட்டும்....
    உன்னை குறைக்கும் எதிர்ப்புகள்
    எதிர்கால வாழ்க்கைக்கு ஏணிகள் ஆகட்டும்.....
    உன்னை உடைக்கும் தடை கற்கள்
    உன் பாதைக்கு பூ மழை தூவட்டும்.....

    உனக்கென்று ஒரு உலகம்
    உரிமையாய் காத்திருக்கிறது .
    உன்னைத் தொட்டிருக்கும் தூசியை
    தட்டிவிட்டு
    உறுதியாய் உன்னைப் பின் பற்று
    உலகம் உன் பின்னால்
    நீ அதன் முன்னால்.
    வரலாறு உன் பேர் சொல்லட்டும்
    நீ அதன் வழி காட்டியாய்!!!!!!!
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    துவண்டு போன நெஞ்சங்களை தூசி தட்டி, புத்துயிர் பெற்று எழ வைக்கும் வரிகள். வரிகளா அவை???? நட்டவுடன் கனி தரும் மரங்களின் வீரியம் மிக்க விதைகள்.

    உலகம் உன் பின்னால் வர, சோதனைகளை, வெற்றிப் பாதையின் சாலைகளாக்கி, வேதனைகளை, வெற்றி யாகத்தின் வேள்வியாக்கி, எதிர்ப்புகளை ஏணியாக்கி வீறு கொண்டு வெற்றி நடை போட வேண்டும் என்பதை, வெகு அழகாய், ஆழமாய், அழுத்தமாய் சொன்ன விதம் வெகு அருமை தோழி. :thumbsup
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தன் பலம் தன் கையே ..நம் பலம் தன்னம்பிக்கையே.நான் போட்ட விதை உடனேயே வளரத் தொடங்கியது உன் பின்னூட்டம் கண்டு . என் பலம் இது போன்ற முத்தான பின்னூட்டங்களே .
    நான் சொன்ன கருத்தை சிந்தித்து
    சிந்தாமல் சிறிய அளவில் சுருக்கி கொடுத்த தோழியே நன்றிகள் பல.Bow.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் மிக அருமையான,
    காலை நேர மோட்டிவேஷனல் தெரபி கவிதை,
    கண்டு உள்ளம் சிலிர்க்கிறது....

    ஆனா என்ன மாதிரி சோம்பேறிக்கு,
    இத ஒரு காப்ஸ்யூல் பார்ம்ல தந்தா,
    ரொம்ப எளிமையா இருக்குமேன்னு.....

    ஐயோ அம்மா அருவாளா அது???? :hide:
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அருவாள் மட்டும் தானா??? மிச்சம் ???? :rant:rant:rant
     
    Last edited: Jun 2, 2010
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    saroj....

    miga arumayana ..arputhamana..kavithaiyai .........

    kandippga....intha maathiri karuthukkal solla neengal irunthal...evarukkum saathikkum ennam melongi irukkum....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காப்ஸ்யூல்?????
    அருவாள் ????
    ரெண்டுமே இருக்கு .
    ஈசியா தண்ணில முழுங்குற காப்ஸ்யூல்... அப்புறம் சைடு எபெக்ட் கொடுக்கும்
    அருவா கொண்டு பயம் காட்டுனா அதோட பயம் போய்டும்....அப்புறம் நா எத வச்சு மெரட்டுறது.
    எதுக்கு இத்தன வம்பு?? பேசாம நா குடுக்கிற வரிய படிச்சுட்டு சரியாய் நடந்துகோங்க :)

    நன்றி நண்பரே உங்கள் பின்னூட்டம் எனக்கு ப்ரோமொஷனல் தெரபி. :coffee
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சின்ன பையனுக்கு அருவாளே தேவை இல்ல ....Pen knife போதும்.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் வரிகள் படித்து சாதனை படைக்க போகும் பெண்ணே (கண்டிப்பாய் தொலைந்த நித்திரை அல்ல)
    உனக்கு என் வாழ்த்துக்கள் .
    என்னை மகிழச் செய்த பின்நூட்டத்திர்க்காய் நன்றி
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தோல்வி கண்டு துவள கூடாது தோழி என்று அன்பான கண்டிப்புடன் கூறிய கவி அருமை தோழி!
    வான் மழை பற்றிய வரிகள் உள்ளம் நெகிழ செய்தது!
    வான் வரை பரவட்டும் உன் கவி பெருமை!
     

Share This Page