1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

உலகத்தை ஆட்டுவித்துக் கொண்டு இருப்பவர் யார்?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 17, 2022.

 1. Thyagarajan

  Thyagarajan Finest Post Winner

  Messages:
  9,595
  Likes Received:
  10,445
  Trophy Points:
  490
  Gender:
  Male
  :hello:உலகத்தை ஆட்டுவித்துக் கொண்டு இருப்பவர் யார்?:hello:

  ரமேஷ் சந்திரா என்ற பெயருடைய ஒருவர் ராஜஸ்தானில் இருந்தார்; அவர் கிருஷ்ணபகவானின் ஒரு அன்பான பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் சிறிய படம் ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும், கடையை அவர் திறந்த உடன், கடையை சுத்தம் செய்து விட்டு, அந்தப் படத்தையும், அதாவது கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம், பத்தி ஏற்றுவார்.
  அவருக்கு ஒரு மகனும் கூட உண்டு. அவர் பெயர் ராகேஷ். மகன் ராகேஷ் தனது படிப்பை முடித்துக் கொண்டு விட்டார். இப்போது அப்பா கூட கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பார். அவர் இந்த காலத்தில், படித்த ஒரு இளம் வாலிபர். ராகேஷ் தன் அப்பாவிடம் விவரித்து கூறினார்; அதாவது கடவுள் என்று ஏதும் கிடையாது; இது எல்லாம் ஒரு மாயை. மனதின் மாயை. அதாவது இல்லாத ஒன்றாகும்.
  சூரிய பகவான் தன்னுடைய ரதத்தில் உலகத்தையே சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்று மறை நூல்கள் சொல்கின்றன. அதே நேரத்தில் அறிவியல் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது ……….. இந்த வகையான அறிவியலின் புதிய எடுத்துக் காட்டுகளைக் கூறி தினமும், கடவுள் இல்லை என்று நிரூபித்துக் காட்டுவதற்கு முயற்சி செய்வார்.
  அந்த அப்பாவானவர், அவனைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டு, வெறுமனே புன்சிரிப்பை சிந்துவார். இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாடவோ அல்லது விவாதம் பண்ணவோ, அவர் விரும்பவில்லை.
  காலம் கடந்து சென்றது. அந்த அப்பாவுக்கும் வயதாகி விட்டது. இப்போது தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.
  ஆகவே, ஒரு நாள் அவர், அவருடைய மகனிடம் கூறினார், “மகனே, நீ கடவுளை நம்புகிறாயோ அல்லது இல்லையோ, எனக்கு ஒன்று போதுமானது, அதாவது நீ கடினமான ஒரு உழைப்பாளி; இரக்கமானவன்; மேலும் நேர்மையானவன். ஆனால், இந்த ஒன்றை மட்டும் கவனிப்பாயா; எனக்குக் கீழ்ப்படிவாயா?”
  அந்த மகன் கூறினார், “உறுதியாகச் செய்வேன், அப்பா; நான் நிச்சயம் சம்மதிக்கிறேன். “
  அப்பா கூறினார், “ மகனே, என்னுடைய மரணத்திற்குப் பிறகு, கடையில் இருக்கும் கடவுளின் படத்தை தினமும் சுத்தம் செய்திட வேண்டும். ஏதாவது கஷ்டத்தில் நீ எப்போதாவது சிக்கிக் கொண்டால், பிறகு உன் கையை குவித்து உன்னுடைய பிரச்சனையை ஸ்ரீகிருஷணரிடம் கூறு. நான் கூறியது போல் இதை மட்டும் சற்றே செய்து விடு. “ அந்த மகனும் சம்மதித்தார்.
  சில நாட்களுக்குப் பிறகு, அந்த அப்பாவும் இறந்து போய் விட்டார். காலமும் கடந்து கொண்டே இருந்தது ….
  ஒரு நாள் கன மழை பெய்து கொண்டிருந்தது. ராகேஷ் கடையில் அந்த நாள் முழுவதுமாக உட்கார்ந்து இருந்தார். வாடிக்கையாளர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மின்சாரம் வேறு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று முழுவதும் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே ஒரு பையன் ஓடி வந்தான், கூறினான், “ அண்ணா, எனக்கு இந்த மருந்து தேவைப் படுகிறது. என் அம்மா மிகவும் சுகவீனமாக இருக்கிறாள். இந்த மருந்தில் நான்கு ஸ்பூன்கள் உடனடியாக கொடுத்தாக வேண்டும்; அதன் பிறகுதான், உன் அம்மாவைக் காப்பாற்றிட முடியும் என்று டாக்டர் கூறி விட்டார் ….. இந்த மருந்து உங்களிடம் இருக்கிறதா?
  ராகேஷ் மருந்து சீட்டைப் பார்த்து விட்டு, உடனே கூறினார், “ ஆம், என்னிடம் இது இருக்கிறது.” அந்தப் பையன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்; சீக்கிரமே மருந்துடன் கிளம்பினான்.
  ஆனால், இது என்னவாக ஆயிற்று !! அந்தப் பையன் கிளம்பிய உடனே, ராகேஷ் கவுண்டரைப் பார்த்தார்; அவர் வியர்த்து, விறுவிறுத்துப் போனார் …….. ஒரு வாடிக்கையாளர் சிறிது நேரத்துக்கு முன்புதான் ஒரு பாட்டில் எலி விஷத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றிருந்தார். கரண்ட் இல்லாமல் இருந்ததால், ராகேஷ் லைட் வந்த பிறகு, அதனை சரியான இடத்தில் வைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டே அதை கவுண்டரில் வைத்து விட்டார். ஆனால் இந்த மருந்து பாட்டிலுக்குப் பதிலாக எலி விஷம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவனுக்கு படிக்கவும் கூட தெரியாது.
  “ஓ கடவுளே !! இந்த சொற்கள், தானாகவே, ராகேஷின் வாயிலிருந்து வெளியே வந்தன. இது என்ன பேரழிவு !! “ பிறகு அவருக்கு அவருடைய அப்பாவின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன. உடனே, கைகளை குவித்து, கிருஷ்ண பகவான் படத்தின் முன்னே சென்று, கனத்த இதயத்தோடு, பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்:
  “ஓ பிரபுவே! அப்பா, எப்போதும் வழக்கமாக கூறுவார், அதாவது நீங்கள் இருக்கிறீர்கள் (கடவுள் இருக்கிறார்) என்று. நீங்கள் அங்கே இருப்பது உண்மை என்றால், பிறகு தயவு செய்து இன்று நடக்கும் இந்த விரும்பத்தகாத நிகழ்வை நடக்க விடாமல் செய்து விடுங்கள். தன் மகனின் கைகளில் விஷத்தைப் பெற்று ஒரு அம்மா குடிப்பதை …. பிரபுவே அவள் குடிக்க விடாமல் செய்து விடுங்கள் !!!
  “அண்ணா! “ அந்த நேரத்தில் ஒரு குரல் பின்னால் இருந்து கேட்டது. “அண்ணா, சேற்றின் காரணத்தால் நான் வழுக்கி விழுந்து விட்டேன்; அந்த மருந்து பாட்டிலும் கூட உடைந்து போய் விட்டது! தயவு செய்து வேறு ஒரு பாட்டில் தாருங்கள்.”
  “ அபிமான புன்னகையுடன் தோற்றமளிக்கும் கடவுளை அந்தப் படத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ராகேஷின் முகத்தில் கண்ணீர் பாய்ந்தோட தொடங்கியது!
  அந்த நாளில், ஒரு நம்பிக்கை அவருள் விழித்தெழுந்தது. அதாவது அங்கே யாரோ ஒருவர் இருக்கிறார்; அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார் …… சிலர் அவரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள்; சிலர் அவரை ஈடு இணையற்றவர் என்று அழைக்கிறார்கள்; சிலர் அவரை எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், மேலும் சிலர் தெய்வீக சக்தி என்றும் கூறுகிறார்கள்.
  அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்தோடு செய்யப்படும் பிரார்த்தனையானது ஒரு போதும் கேட்கப்படாமல் போகாது.
   
  vidhyalakshmid likes this.
 2. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  5,223
  Likes Received:
  10,291
  Trophy Points:
  438
  Gender:
  Female
  It moistened my eyes. Gripping narrative!

  Jayasala 42
   
  Thyagarajan likes this.
 3. Thyagarajan

  Thyagarajan Finest Post Winner

  Messages:
  9,595
  Likes Received:
  10,445
  Trophy Points:
  490
  Gender:
  Male
   

Share This Page