உலகத்தின் தலையெழுத்தை மாற்றும் மாறுபட்&#

Discussion in 'News & Politics' started by Basuradhu, Oct 5, 2013.

  1. Basuradhu

    Basuradhu Silver IL'ite

    Messages:
    355
    Likes Received:
    75
    Trophy Points:
    68
    Gender:
    Female
    [h=3]உலகத்தின் தலையெழுத்தை மாற்றும் மாறுபட்ட சிந்தனைகள்!!![/h]


    நமக்குத் தெரிந்து புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டனை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.ஆனால்,நமது பாரத நாட்டில் பலதுறைகளில் நியூட்டன்கள் உருவாகிக்கொண்டே இருப்பதை நாம் உணரவில்லை.

    நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு பழுத்த ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்தது;அப்படி விழுந்த ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியது;பூமிக்கு புவியீர்ப்பு விசை உண்டு என்பதை அந்த சிந்தனையின் இறுதியில் கண்டறிந்தார்.

    இந்தியாவைச் சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து பேட்டன் ரக பீரங்கிகளை பாகிஸ்தான் வாங்கிக் குவித்தது;நமக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையில் பேட்டன் பீரங்கிகளைக் கொண்டே இந்தியாவை வீழ்த்திவிடலாம் என்று பாகிஸ்தான் செயல்பட்டது. ஆனால் நடந்ததோ தலைகீழ்!! பேட்டன் பீரங்கியின் முன்புறம் வலுவானது. எப்பேர்ப்பட்ட [​IMG]தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையுடையது, ஆனால் அதன் பின்புறம் மிகவும் பலவீனம் மிக்கது எனவே நமது இந்திய ராணுவ வீரர்கள் இதைக் கண்டறிந்து, பேட்டன் பீரங்கிகளை முன்னே போக விட்டு பின்னே அடித்து நொறுக்கினர்.பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது அது மட்டுமா? உலக வல்லரசு அமெரிக்கா பேட்டன் பீரங்கிகள் தயாரிப்பதையே நிறுத்தியது. இந்த சம்பவத்தின் மூலமாக அசல் உத்தர்(நிஜமான பதிலடி) என்ற வீர சகாசம் இந்திய ராணுவத்தின் வரலாறாகிவிட்டது.இந்த வார்த்தையைக்கேட்டால்,பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு கடுப்போ கடுப்பு உண்டாகும்.

    பேரீச்சம்பழத்திலிருக்கும் விதைகளை நீக்கி அதை அழகாக 'பேக்' செய்து விற்றால் என்ன? என்று திருச்சியைச் சேர்ந்த ஒருவர் நினைத்தார்.லயன் டேட்ஸ் பிறந்தது;இன்று அவரே இந்தத் தொழிலில் முன்னணியில் வளர்ந்துகொண்டிருக்கிறார்.

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக்கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில், சாஷேயில் எண்ணெயை தந்தால் என்ன? என்ற சிந்தனையால் இன்று பாராசூட் தேங்காய் எண்ணெயை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்!!

    மனித உடலின் வளைவு நெளிவின் தன்மையைக் கொண்டு தயாரிக்கப்படும் செல்போன்களை ஜப்பான் சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தியது; அப்படி அறிமுகப்படுத்தும் முன்பு இது தொடர்பாக எடுத்த சர்வேகுழுவில் இருந்தவர்கள் நமது இந்திய எம்.பி.ஏ மாணவர்கள், அவர்களின் நுணுக்கமான சர்வேயால் இன்று அந்த மாடலில் கிடைக்கும் செல் போன்கள் உலக செல்போன் சந்தையைக் கைப்பற்றத்து வங்கியிருக்கின்றன (கன செவ்வகம்,கன சதுரம் என்ற வடிவில் சில வருடங்களுக்கு முன்பு வந்த செல்போன் மாடல்கள் தற்போது காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன)

    இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் ஆரம்பத்தில் வர்த்தகம் செய்யத் தான் வந்தான். ஏன் நமது [​IMG]நாட்டோடு வர்த்தகம் செய்ய வந்தான்? நம்மில் பலருக்குத் தெரியாது. ஏனெனில்,கி.பி.1800 வரை முடிவடைந்த 2500 ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய, சுயச் சார்புள்ள பொருளாதார வல்லரசாக நமது இந்தியா இருந்தது.(நாம் தற்போது அமெரிக்காவுக்கு வேலை தேடி ஓடுகிறோம்; ஓடுவதை பெருமையாக நினைக்கிறோம் இல்லையா?) எனவே,இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய வந்தவன், மொகலாயர்கள் காலத்தில் (முழுமையாக வாசிக்கவும்: மதன் எழுதிய வந்தார்கள்;வென்றார்கள்) சென்னை, மும்பை,கொல்கத்தாவில் குடோன்கள் கட்டி அதைப் பாதுக்காக்க மொகலாய மன்னரான ஷாஜஹானிடம் அனுமதி கேட்டனர். அனுமதியும் கிடைத்தது அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை ஆள்வதே சிறந்த வியாபாரம்! என்பதை உணர்ந்து,கி.பி. 1850க்குள் ஒட்டு மொத்த இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

    முதல் இந்திய விடுதலைப் போர் கி.பி.1857 இல் நிகழ்ந்தது, பல விதமான போராட்டங்களுக்குப் பிறகு கி.பி.1947 இல் நாம் சுதந்திரம் பெற்றோம், இதே கால கட்டத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்த ஒருவர்,வித்தியாசமாக சிந்தித்தார்.

    எல்லோரும் ஆங்கிலேயனை எப்படியாவது இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும்? என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால்,இந்த டாக்டர் மட்டும் எப்படி இந்த ஆங்கிலேயன் நமது நாட்டை அடிமைப்படுத்தினான்? என்று சுமார் 20 ஆண்டுகளாக சிந்தித்தார்.தனது சிந்தனையை பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பலருடைய ஆலோசனைகளையும் கேட்டார்.

    ஏனெனில் நமது நாடு ஏராளமான வீரர்களை ஈன்றுள்ளது; கல்வியில் தன்னிறைவு பெற்ற நாடாக கி.பி.1700 வாக்கிலேயே இருந்திருக்கிறது; வான சாஸ்திரம், போர்க்கலை, வைத்தியம், அரசு நிர்வாகம், தியானம் என மனித இனத்துக்குத் தேவைப்படும் அத்தனைத் துறைகளிலும் சாதனை உச்சங்களைத் தொட்டிருக்கிறது. உலகின் செல்வச் செழிப்பான நாடாகவும் இருந்திருக்கிறது.இருப்பினும் எப்படி சில நூறு ஆங்கிலேயன் 27 கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தினான்? என்பதே அவரது சிந்தனை!

    அவருடைய 20 வருட சிந்தனையின் விளைவாக தோன்றிய இயக்கமே ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.ஆகும்.

    [​IMG]இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்து தர்மத்தின் பெருமைகளை அறிய வைப்பதே நோக்கம்; அப்படிச் செய்து விட்டால், எதிர்காலத்தில் இதே போல மீண்டும் காலனியாதிக்கம் வராமல் போய்விடும், இந்தியாவை இந்தியர்களே ஆள முடியும், இந்து தர்மத்தை பாதுகாத்து, பராமரித்து, மேலும் மேலும் மெருகு படுத்திட முடியும் .இந்த நாட்டில் பிறக்கும் கடைசிக்குழந்தைக்கும் இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் உருவானதே ஆர்.எஸ்.எஸ்.

    மாறுபட்ட சிந்தனைகளால் மனித குலம் பலவிதமான முன்னேற்றங்களை சந்தித்திருக்கிறது.ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றத்தினால் இந்து தர்மத்துக்கு ஒரு சக்தி மிகுந்த பாதுகாப்புக் கவசம் உண்டாகியிருக்கிறது.இருப்பினும்,நமக்கு இரண்டாவது சுதந்திரப்போர் இன்று அவசியமாக இருக்கிறது.அந்த அளவுக்கு அறிவு சார்ந்த காலனியாதிக்கம் நமது இந்தியாவை உலகமயமாக்கல்,முதலாளித்துவமயமாக்கல் என்ற பெயரில் ஆக்கிரமித்திருக்கிறது.


     
    Loading...

Share This Page