1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவுகள் நீடிக்குமா?

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Mar 24, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உறவுகள் நீடிக்குமா?

    காலம் மாறுகிறது! பொருட்களின் மதிப்பும் மாய்கிறது;
    காலம் காலமாய்த் தொடர வேண்டிய உறவு தேய்கிறது!

    லட்சங்களில் செலவு செய்து முடித்த திருமணங்கள் – நல்ல
    லட்சியங்கள் இல்லாததால் ஆட்டம் கண்டு போகிறது!

    இன்றைய இளைஞர் பலர் மனம் மாறுவதேன்? துணையுடன்
    அன்றைய காலம் போல, இறுதிவரை பயணிக்காததேன்?

    ஏழு அடிகள் வைக்கும்போது, வாழ்க்கைத்துணையாளுக்கு,
    ஏழு உறுதி மொழிகள் தந்து, அவற்றை மதிக்காததேன்?

    சுற்றம், நட்புக்குப் பரிசளித்து, வேண்டி விரும்பி அழைப்பதும்,
    சுற்றம், நட்பும் கூடி மகிழ்ந்து, விருந்து உண்ண அலைவதும்,

    திருப்பதி தரிசனம் போல, வரவேற்பில் கால்கள் கடுக்க நிற்பதும்,
    திருப்தி தராத தமக்கு வந்த பரிசுகளை, அங்கே தள்ளிவிடுவதும்,

    பிணக்கின்றிப் புதுத் தம்பதியர் செயற்கைப் புன்னகையுடன்,
    தனக்கு வரும் பரிசுகளை எண்ணி, எண்ணித் திளைப்பதும்,

    மேளம் கொட்ட, புரியாத மொழியில் மந்திரம் சொல்லி, நல்ல
    நேரம் பார்த்து, பூமாரி பொழிய, பளபளக்கும் தாலி கட்டுவதும்,

    ‘மாப்பிளை வந்தாரா? நாட்டுப் பெண் வந்தாளா?’, எனக் குழைவதும்,
    மாப்பிள்ளை வீட்டாரைத் தலைமேல் தாங்க மற்றோர் விழைவதும்,

    பக்ஷணப் பெட்டிகளை அள்ளி அள்ளி வழங்குவதும், எந்த
    லக்ஷணம் இல்லாதவரையும் அழகெனப் புகழ்வதும் – என

    இந்த எதிலுமே குறைவின்றிக் கல்யாணங்கள் அரங்கேறும்;
    எந்த வாழ்வு தொடர வேண்டுமோ அது கேள்விக் குறியாகும்!

    'சீரியல்' மாமியார்கள் போலச் சிலர் செய்யும் கொடுமையினால்,
    'ஏரியல்' இல்லாத வானொலிப் பெட்டிபோல வாழ்வு கரகரக்கும்!

    கணக்குக் கேட்டு, என் பணம், உன் பணம் எனப் பிரித்து, வாழ்வின்
    கணக்கை முடிக்க நினைக்கும் எத்தனை ஜோடிகள் சேர்கின்றன!

    விட்டுக் கொடுத்து வாழும் நெறி முறைகள் தேய்ந்து, இன்று
    தட்டிக் கேட்க ஆளில்லாது, நம் நல்ல சமுதாயமே சீரழிகிறது!

    பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழியில் வரும்
    பழகும் காலம், வெறும் பத்து நாளாய்க் கூட இருக்கிறது!

    நஷ்டம் ஒருவருக்கானால், லாபம் இன்னொருவருக்கே – என்றால்
    நஷ்டம் யாருக்கு? லாபம் யாருக்கு? ஆராய்ச்சியின் விளைவு!

    திருமணப் பத்திரிகை விலை உயர்வாய் அச்சிட்டவரும்,
    திருமணப் பட்டு மற்றும் நகைக் கடை வியாபாரிகளும்,

    கல்யாண மண்டபம் கட்டியவரும், பூமாலை தொடுத்தவரும்,
    கல்யாணச் சாப்பாடு தயாரிப்பவரும், தேங்காய் விற்பவரும்,

    மாப்பிள்ளை அழைப்புக்கு கார் அலங்கரிப்பவரும், அருமையாய்
    மணப்பெண்ணை அலங்கரிக்கும் அழகு நிலைய நிபுணிகளும்,

    கேட்டு ரசிக்காத கச்சேரி செய்த வித்வான்களும், பல முறை
    போட்டுப் பார்க்காத வீடியோக்களை எடுத்த விற்பன்னர்களும்,

    பிழைக்க வழி தேடும் விஷயமாகிவிட்டது, திருமணங்கள்;
    பிழைப்பதில்லை இக்காலத்தில் பல திருமண பந்தங்கள்!

    சுற்றத்தாருக்கு பயண மற்றும் பரிசுச் செலவு நஷ்டம்;
    சற்றே யோசித்தால் திருமண விருந்து மட்டும் லாபம்!

    விருந்து பாக்டீரியா சகிதம் அன்று அமைந்துவிட்டால்,
    மருந்து வாங்கப் பண நஷ்டம்; மருத்துவருக்கு லாபம்!

    பெண்ணை ஈன்றவருக்கு பெரும் பொருள் நஷ்டம்;
    பெண்ணின் தோழிகளுக்கு கூடிச் சிரித்தது லாபம்!

    பெண் வாழாவிட்டால், அவள் வாழ்வே நஷ்டம்;
    பெண் விவாகரத்து செய்தால், வக்கீலுக்கு லாபம்!

    அன்புடன் எல்லோரையும் நேசிக்கும் காலம் மலருமா?
    பண்புடன் கூடி வாழ எல்லா ஜோடிகளுக்கும் முனையுமா?

    குறையின்றி, பெருவாழ்வு அனைவரும் பெற்றிட,
    இறையின் கருணையை வேண்டுவதே ஒரே வழி!

    :bowdown
     
    Loading...

  2. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    [​IMG]
    [​IMG]

    [​IMG]

    EXCELLENT !!!!!

    Two souls with but a single thought,
    Two hearts that beat as one." Fredrich Halm


    Love one another and you will be happy. It's as simple and as difficult as that. ~Michael Leunig

    A successful marriage requires falling in love many times, always with the same person. ~Mignon McLaughlin
     
  3. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    312
    Likes Received:
    511
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Yes, it is true. The western culture has taken its toll.
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Sunitha and Maalti!

    Raji Ram :cheers
     
  5. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear Raji,

    இக்கால திருமணத்தை பற்றிய உங்கள் கருத்து வரவேற்க தக்கது !!! அவ்வளவும் உண்மை!!
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Malar,

    Thanks for your comment!

    Raji Ram :thumbsup
     

Share This Page