1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உரிமையும் கடமையும் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 1, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உறவுகளில் உன்னதம் ! உணர்வுகளின் சங்கமம் !
    முதன்முதல் சொந்தம் ! தொப்புள்கொடி பந்தம் !
    பிஞ்சொன்று பூவாகிக் காயின்றிக் கனிந்து,
    மேடிட்ட வயிற்றோடு பெண்ணாக ஒளிர்ந்து,
    அடைப்பிட்ட வழிதிறந்து புதுஜீவன் முகிழ்க்கும் !
    அம்மாவெனும் பட்டம் பரவசத்தில் மகிழ்த்தும் !
    உலகத்தில் முதலாக வெளிப்பட்டப் பின்பு,
    சிறுபிள்ளை இனமெங்கும் கையாளும் மொழியாம்,
    அழுகைக்குப் பலவாறு பொருளுண்டு எனினும்,
    அமுதாகும் அன்னைப்பால் பெறுதற்கே முதன்மை !
    உள்ளுக்குள் கருவாகக் குடியிருந்த போதில்,
    ஏதொன்றும் வேண்டாத சிசுவது வெளிவந்து,
    தன்னுயிர்க் காப்பாற்றி வெளிவிட்டத் தாயை,
    அன்போடு கேட்கின்ற உரிமைப்பொருள் அதுவே !
    ஏதொன்றும் தீமை கலவாத தாய்மை,
    என்றென்றும் நன்மை பயக்கின்ற பாலை,
    தன்னூணில் சீராட்டித் தாலாட்டும் மகவின்
    மண்வாழ்க்கை எந்நாளும் நலமாகத் திகழத்,
    தாய்ப்பாலைத் தருதல் தலையாய கடமை !
    பிறந்த நொடியிருந்து மூவிரண்டு திங்கள்
    வேறெந்த உணவும் குழந்தைக்கு வேண்டாம் !
    சிறந்ததொரு உணவை இயற்கையெனும் அன்னை
    பரிசாகத் தானே பெண்ணுக்குள் வைத்தாள் !
    பசியாற்ற மட்டும் பால் புகட்டுவதில்லை !
    பிணிபோக்கு மருந்தும் தாய்ப்பாலே அன்றோ ?
    அமரர்கள் குடித்ததோ ஒரேமுறை அமுதம் !
    அம்மாக்கள் தருவதோ தலைமுறைக்கும் அமுதம் !
    மாசற்ற சிசுவினை மார்போடு சேர்த்து
    மாதாக்கள் பாலூட்ட ஈடதற்கு ஏது ?

    ஆகஸ்ட் 1 முதல் 7- உலகத் தாய்ப்பால் வாரம்

    Regards,

    Pavithra
     
    kaniths, periamma and jskls like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உலகத் தாய்பால் வாரம் வரமாவது சில குழந்தைகளுக்கே ! நல்ல கருத்துள்ள கவிதை. தாய்பால் சிசுவுக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் சிறந்த பயனளிக்குமே.! உரிமைக்கும் கடமைக்கும் அன்பே பாலம்.
     
    PavithraS likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை,லக்ஷ்மி ! பின்னூட்டத்திற்கு நன்றி !
     
    jskls likes this.
  4. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    தாய்ப்பாலும் உணவாகும் தாய்ப்பாலும் மருந்தாகும் .கவிதை மிகவும் அருமை .
     
    PavithraS likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
     
    SubashiniMahesh likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா தாய்ப்பால் அமுதம் .அதன் முக்கியத்துவத்தை மிக அழகாக கவிதையில் சொல்லி விட்டீர்கள் .
    கணிணி மக்கர் செய்து விட்டது .அதனாலே தாமதமான பின்னூட்டம் :expressionless:
     
    PavithraS likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தாமதமானாலும் தாய்மனத்துடன் பின்னூட்டமளித்து இங்கே எழுதும் எங்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றி,பெரியம்மா ! தாய்ப்பால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய அமுதமல்லவா ? லக்ஷ்மி சொன்னது போல் அவ்வாறு எல்லோருக்கும் கிடைப்பதும் அரிது தான். என் ஆதங்கப் பதிவே இது.
     
    periamma likes this.

Share This Page