1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உண்மை காதல்

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Jul 11, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஜானவி இப்போதைய கதைகளில் வருவது போல் ஒரு கணினி பொறியாளர் ..அவள் அலுவலகம் அவளை வேலை விஷயமாக
    ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு அனுப்பி இருந்தது . வேலை முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாள்.யாரா நதி அந்நகரத்தை சுற்றிலும் ஓடி கொண்டு இருக்கிறது .நதிக்கரை ஓரம் கிரௌன் பிளாசா என்னும் மிகப் பெரியபொழுது போக்கு இடம் உள்ளது .இங்கு கேளிக்கை விளையாட்டுக்கள் ,உணவகங்கள் ,தியேட்டர்கள்,கடைகள் என்று நிறைந்திருக்கும் .கரை ஓரம் பல சிற்றுண்டி கடைகள் உள்ளன.ஜானவிக்கு அந்த நதி கரையில் உட்கார பிடிக்கும் .

    ஒரு நாள் அப்படி உட்கார்ந்திருக்கும் போது ஹலோ என்று அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் .அவள் அருகே ஒரு இளைஞன் புன்முறுவலுடன் நின்று
    கொண்டு இருந்தான் .அவளும் பதிலுக்கு விஷ் பண்ணி விட்டு எழுந்தாள் .அப்பொழுது அந்த வாலிபன் தன் பெயர் ராபர்ட் என்று சொல்லி விட்டு நானும் உங்கள் அலுவலகம்
    உள்ள அதே பில்டிங்கில் வேறு ஆபீசில் வொர்க் பண்றேன். உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டு விட்டு சிரித்தான் .
    ஜானவிக்கு பெயர் சொல்லவும் விருப்பம் இல்லை .ஆனால் அந்த இளைஞனை பார்த்தால் மிக நல்லவனாக தோன்றியதால் தன் பெயரை சொன்னாள் .
    நீங்கள் ஏன் எப்போதும் தனியாகவே இருக்கிறீர்கள்.உங்களுக்கு பிரெண்ட்ஸ் கிடையாதா என்று ராபர்ட் கேட்டான் .இல்லையே எனக்கு பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள்
    .எங்களுக்கு வேலை நேரம் ஒரே சமயத்தில் முடியாது .அதனால் நாங்கள் தனி தனியாக கிளம்புகிறோம் என்று பதில் அளித்தாள் . பின் இருவரும் நீண்ட நேரம்
    பேசி கொண்டு இருந்தார்கள் .இருவரது நட்பும் தொடர்ந்தது .ஒரு நாள் ராபர்ட் ஜானவியை தன் வீட்டுக்கு கூப்பிட்டான்.ஜானு எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு .
    என் அம்மா உன்னை பார்க்கனும்னு சொல்றாங்க .நீ வருவியான்னு கேட்டான் .ஜானவி சரி என்று சொன்னாள்.

    ஒரு ஞாயிற்றுக்கிழமை ராபர்ட் ஜானவியைதன் வீட்டுக்கு அழைத்து சென்றான் .ராபர்ட் அம்மா சில்வியா ஜானவியை பார்த்ததும் மிக சந்தோஷப்பட்டாள்
    வா ஜானு என்று அன்புடன் அழைத்தாள்.ஜானவிக்கும் அவர்கள் இருவரையும் ரொம்ப பிடிச்சிருந்தது . அவர்கள் மூவரும் சாப்பிட்டு கொண்டே பேசினார்கள் .
    சிறிது நேரம் கழித்து ஜானவி அங்கும் இங்கும் சுற்றி பார்க்கும் போது ஒரு புகைப்படம் அவள் கண்ணில் பட்டது .அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள் .
    ஏன் என்றால் அந்த புகை படத்தில்ஜானவியின் அப்பாவும் ராபர்டின் அம்மா சில்வியாவும் மிக நெருக்கமாக இருந்தார்கள் .ஜானவி சில்வியாவை நோக்க ராபர்ட்
    சிரிக்க ஆரம்பித்தான் .கலக்கமுற்றிருந்த ஜானவிக்கு சில்வியா ஆறுதல் கூறினாள் .பின் தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள் .ஜானு உன் அப்பா சிவா சிட்னிக்கு படிக்க வந்தார் .
    அப்போது தான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தோம் .காதலித்தோம் .கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.கல்யாணம் செய்து கொண்டோம்.வாழ்க்கை நடத்தினோம் .
    ஆனாலும் எனக்கு சிவா பெற்றோர்களிடம் ஆசி வாங்க வேண்டும் என்று ஆசை .அதனால் இந்தியா வந்து அவர்களை சந்தித்தோம்.ஆனால் உன் தாத்தா என்னை ஏற்க மறுத்து விட்டார்.உன் அப்பா கெஞ்சி பார்த்தார் .அழுது பார்த்தார்.ஆனால் உன் தாத்தா மனம் இரங்கவில்லை .அப்போது நான் கர்ப்பம் தரித்திருந்தேன் .ஆனால் உன் அப்பாவிடம் சொல்லவில்லை .பெரியவர்கள் முன் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் .அது நடக்கவில்லை .

    மனதை கல் ஆக்கி கொண்டு ஒரு முடிவு எடுத்தேன் .சிவாவை விட்டு பிரிய நினைத்தேன் .பிரிந்திருந்தாலும் சிவாவை நினைத்தே நான் வாழ வேண்டும் என்று உறுதி பூண்டேன் .மேலும் நானும் ஒரு குழந்தைக்கு தாயாகப் போகிறேன் .அது ஆணோ பெண்ணோ அந்த குழந்தையே என் சிவாவின் அன்புக்கு அடையாளம் என்று நினைத்து அங்கிருந்து மீண்டும்
    சிட்னிக்கு வந்தேன்.பின் மெல்பர்ன் வந்து .இங்குள்ள யுனிவர்சிடியில் ஆசிரியராக சேர்ந்து வாழ ஆரம்பித்தேன் .இது தான் என் கதை என்று சில்வியா சொல்லிமுடித்தாள் .

    ஆனால் ஜானவி அழ ஆரம்பித்தாள் .அம்மா நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிரீர்கள் .என்னால் தாங்க முடியவில்லை என்று அழுதாள் .பின் ராபர்ட்டிடம் உனக்கு
    அப்பாவை பார்க்க வேண்டும் என்று தோணலையா .அவரை பார்த்து சண்டை போடணும்னு நினைக்கலையானு கேட்க அவன் சோகமான புன்முறுவல் காட்டினான் .
    கல்லூரி சென்ற பின் தான் அம்மா என்னிடம் கூறினார்கள் .அப்பா வேண்டும் என்று ஆசை இருந்தது .ஆனால் அம்மாவின் அன்புக்கு முன் என் ஆசை ஒன்றும் பெரிதல்ல என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன் .நான் தினம் கடவுளிடம் என் அம்மாவும் அப்பாவும் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று வேண்டி கொள்வேன் .உன்னை பார்த்ததும் அப்பாவை பார்ப்பது போல் இருந்தது .நீண்ட நாள் உன்னை பார்த்த பின்பே உன்னிடம் பேச ஆரம்பித்தேன்
    கடவுள் எனக்கு உன் மூலமாக நல்ல செய்தி தந்து விட்டார் என்று அவருக்கு நன்றி கூறினேன் .அப்புறம் அம்மாவிடம் சொன்னேன்.அவர்கள் உன்னை வீட்டுக்கு
    கூப்பிட்டு வர சொன்னார்கள் என்று ஆனந்தமாக சொன்னான் .

    ஜானவி உடனே முடிவு எடுத்து விட்டாள் .அம்மா நாம் மூவரும் இந்தியா போகிறோம் மறுத்து
    விடாதீர்கள் என்று சொல்லி விட்டு வேகமாக காரியங்கள் செய்தாள் .தன் தாய் சிவகாமிக்கு சில்வியா ராபர்ட் பற்றி எடுத்து சொன்னாள் .அவளும் உடனே புறப்பட்டு
    வர சொன்னாள்.மூவரும் இந்தியா வந்து ஜானவியின் சொந்த ஊரான மதுரை வந்து சேர்ந்தார்கள் .பின் வீட்டு வாசலை அடைந்ததும் சிவகாமி சில்வியாக்குஆரத்தி எடுத்து ராபர்ட்டின் கன்னம் தடவி முத்தம் இட்டு உள்ளே அழைத்து சென்றாள் .ஜானவியின் அப்பா சிவா சில்வியாவை பார்த்ததும் கதறி அழுது விட்டார்.ராபர்ட்டை தன்னுடன் சேர்த்து அணைத்து என்னை மன்னிப்பாயா மகனே என்று அழுதார் .ராபர்ட்டும் அவன் அம்மாவும் அவரை சமாதானப் படுத்தினார்கள் .சிவா சிவகாமியின் கரத்தில் முகம் பதித்து கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்டார்..உடனே ஜானவி அப்பா எனக்கு ஒன்றும் கிடையாதா என்று சிரித்து கொண்டே கேட்டாள் .

    .உடனே சிவா உனக்கு என்ன வேண்டும் கேளம்மா என்று சொல்ல அப்பா உங்கள் தங்கை மகளை என் அண்ணன் ராபர்ட்டுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டதும் அனைவரும் சிரித்தார்கள் .உங்கள் தந்தை செய்த தவறுக்கு இதுவே பிராயசித்தம் என்று தீர்ப்பும் கூறினாள் .தன் அத்தையிடம் பெண் கேட்கவும்செய்தாள் .அதற்கு அவள் அத்தை நீ என் மகன் மதுவை கல்யாணம் செய்ய சம்மதித்தால் நான் உன் அண்ணனுக்கு பெண் தருகிறேன் என்று சிரித்து கொண்டே சொன்னாள் .
    இதற்கிடையில் ராபர்டும் ஜானவியின் அத்தை பெண்ணும் கண்ணால் பேச ஆரம்பித்து விட்டார்கள் .பின் என்ன கல்யாணம் தான் .விருந்து தான் .ஆனந்தம் தான் .

    உண்மை காதல் வென்றது .பெண்மை வென்றது .எந்த நாடு எந்த ஊர் என்றாலும் பெண் தன தனித்துவத்தால் தலை நிமிர்ந்து நின்று காலத்தை வென்று விட்டாள்
     
    Last edited: Jul 11, 2016
    Caide, sindmani, srikumarsavi and 7 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழ் உள்ளங்கள் அனைவரும் படித்து பின்னூட்டம் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்
     
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அம்மா சூப்பர் கதைம்மா.

    ஆனால் நெஜமாவே நடக்குமான்னு ஒரு கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியல.

    நல்ல சினிமா ஸ்க்ரிப்ட்டா ரெடிபண்ண வாய்ப்புகள் அதிகமிருக்கு.
     
    jskls likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GG avargale thangal karuththu devai verumane like pottaal ppadi/
     
    GoogleGlass likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க சந்தோசம் .ஏன் என்றால் நீங்கள் சுப்புடு போன்று விமரிசனம் செய்பவர் .நன்றி
     
    jskls and GoogleGlass like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ammaa like ttu badhil poduvatharkul oru phone vandhuduchchu.

    kathaikku thaevayaana locationum arumai - melbourne yara river appuram graamam :)
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கற்பனை கதை நல்லா இருக்கு. GG சொன்ன மாதிரி ஒரு நல்ல படம் எடுக்கலாம். அதுவும் location அருமையா இருக்கும் !
     
  8. deepv

    deepv Platinum IL'ite

    Messages:
    2,245
    Likes Received:
    1,681
    Trophy Points:
    283
    Gender:
    Female
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி வந்து படித்து பதில் தந்ததற்கு நன்றி .
     
    jskls likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @deepv Thanks for your compliments
     
    deepv likes this.

Share This Page