1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணர்வாயா அன்பே -30!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Feb 15, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பேச்சும் சிரிப்புமாய் விருந்து முடிந்து மாலையில் வீட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு மௌனம் மட்டும் தான் துணையாய் இருந்தது. இரவு உணவின் போது அருவியையும் தன்னுடன் சேர்ந்தமர்ந்து சாப்பிட சொன்னான்.அருவி ஆச்சர்யமாய் பார்த்தாள்.

    "
    என்ன இது புதிதாக?" புரிந்துக்கொண்டே கேட்டாள்.

    அவன்
    சாப்பிடுவதில் தான் கவனம் போல அவளைப் பார்க்காமலே சொன்னான்... "எல்லாமே இன்று புதிதாக தானே இருந்தது." அவளுக்கு இப்போது புரியவில்லை, ஆனாலும் ஏனோ அவனிடம் எதுவும் கேட்க தோன்றாமல் அமைதியாக அவன் சொன்னது போல செய்தாள். அவள் பொறுமையாக சாப்பிட்டு முடிக்கும் வரை இவனும் அவளுக்கு துணையாய் உட்கார்ந்திருந்தான். இருவரும் சென்று வாஷ்பேசினில் கைகழுவ, அவன் அவள் முந்தானையில் துடைத்துக் கொண்டான்.

    அவள்
    மறுபடியும் ஆச்சர்யமாய் அவனைப் பார்க்க, அவன்அர்த்தத்தோடு புன்னைகைத்தான். "பாலை எடுத்துக் கொண்டு மேலே வா.... நான் பால்கனியில் இருக்கிறேன்."

    அவன்
    சென்ற பின்பும் அவள் அப்படியே நின்றிருந்தாள். பொதுவாக அவளுக்கு உடையில், கழுவிய கையினைத் துடைத்துக்கொள்வது பிடிக்காது. எப்போதும் கர்சீப் வைத்திருப்பாள்...ஆனால் இன்றோ அவன் உரிமையாக அதை செய்யவும், அவளுக்கு வாயடைந்து போனது. ஒரே ஒரு நாளிலா இத்தனை மாற்றம்??

    இல்லை
    என்பதை அவன் விளக்கினான்.

    அமைதியாய்
    வந்து பால் டம்ளரை அவனிடம் அவள் நீட்ட, அவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு அவளைக் கவனமாய் பார்த்தான். அவளுக்கு தான் அது என்னவோ போல இருந்தது..'என் நிலைமை புரியாமல்.. இப்படியெல்லாம் இவன் பார்க்க வேண்டுமா.' அவனும் அவளின் இயல்பான கூச்சத்தை ரசித்தான்.

    "
    அருவி....." கிசுகிசுப்பாய் அவன் குரல்.

    "ம்ம்ம்...." காற்றுக்கும் கேட்காமல் அவளின் குரல்.

    "உனக்கு என்னை பிடித்திருக்கிறதா?"

    அவளும் மனம் திறந்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள்.

    "நல்ல கேள்வி இது... அதுவும் இப்போது கேளுங்கள். திருமணத்துக்கு முன் யாருக்கும் என்னிடம் இதை கேட்க தோன்றவில்லையே..." வருத்தப்படுவது போல சொன்னாள்.

    அவன் சிரித்தான்...."உன் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து தான் நம் திருமணம் நடந்தது அருவி."

    "என்ன மதிப்பு கொடுத்தீர்கள்? உங்களை எனக்கு பிடித்திருக்கிறதா என்று அப்போது கேட்டீர்களா என்னிடம்?"

    "கேட்பானேன்? உன் கண்ணிலேயே காதல் வழிந்தது. ஆனால் அதை நீ மறைத்துக் கொள்ள முயற்சித்தாய்."

    "என் கண்கள் பேசியதை நீங்கள் மட்டும் கண்டு கொண்டீர்களாக்கும்?"

    "உண்மை தான் அருவி...முதன்முதலில் உன்னை சந்தித்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அன்று உன் அப்பாவிடம் வெகு நேரம் பேசினேனே? என்ன பேசினோம் என்று நினைத்தாய்? உன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமா என்று கேட்டார். உன் முதல் பார்வையிலேயே மயங்கியவன் ஆயிற்றே...சரி என்று சம்மதித்தேன். செல்வத்தை உனக்கு மணம் முடிக்க உன் அத்தை முயற்சிப்பது வரை எல்லாமும் சொல்லி தான் சம்மதம் கேட்டார் மாமா. ஆனால் அன்று நீ செல்வத்தோடு நெருக்கமாய் பேசி சிரித்துக் கொண்டிருந்தாய். உனக்கு ஒருவேளை அவனைத் தான் பிடித்திருக்கிறதோ என்று எனக்கு சந்தேகம்."

    "ஐயையோ...."

    "ஆமாம்..இப்போது அலறு..." ஆசையாய் அருகில் அவளை இழுத்துக் கொண்டான். அவளும் அவன் கைப்பிடிக்குள் விருப்பத்தோடு சிறையிருந்தாள்.

    "நான் சந்தேகப்பட்டது போல உன் அப்பாவிடம் என்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று நீ மறுத்துவிட்டாயாம்."

    "அது ஏன் என்று......."

    "பின்னால் உன் மனதைத் தெரிந்துக்கொண்டேன் அருவி. ஆனால் அதுவரை எனக்குமே உன்மேல் கோபம் தான். என்னிடம் பணம் இல்லாததால் தான் என்னை மறுக்கிறாயோ என்று."

    "அப்போது செல்வத்திடம் மட்டும் என்ன இருந்ததாம்?"

    "அதில்லை அருவி.. அவனை மணந்துக்கொண்டால், உன் வீட்டோடு தங்கிக் கொள்ளலாம். இப்போது இருக்கும் வசதியாவது இருக்கும். என்னை மணந்தால், உங்கள் வீட்டோடு இருக்க நான் சம்மதிக்க மாட்டேனே?"

    "எனக்கும் தான் கோபம் உங்கள் மேல்... செழியனுடன் பெண் கேட்டு வந்தீர்களே என்று. அதுவரை எனக்குமே... உங்களை நான் அவ்வளவு ஆழமாக காதலிக்கிறேன் என்று புரியவில்லை. அன்று நீங்கள் அவருடன் வரவும், உங்கள் மனதில் நான் இல்லையோ என்ற வருத்தத்தில், கோவத்தில் அப்படி சொல்லிவிட்டேன்."

    "அட என் பைத்தியமே....செழியன் உன்னை விரும்பினான் என்றே எனக்கு அப்போது தான் தெரியும். உன் பதிலைக் கேட்டதும் இந்த ஊரில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. பணம்... பணம்... பணம்.... அந்த ஒன்று தான் என் தோல்விக்கு காரணமாக கிடைத்தது. அதை தேடி அலைந்தேன்... அதற்கான முயற்சியில் மட்டுமே என் கவனம் இருந்தது."

    "ஆமாம்... என்னை கூட மறந்துவிட்டு..."

    "அது மட்டும் என்னால் முடியவே இல்லை அருவி. உண்மையில் உன்னை மறக்க வேண்டும் என்று ஓய்வில்லாமல் ஓடினேன்... ஆனால் உள் மனதுக்குள் உன் நினைவு தான் எப்போதும். செழியன் சொன்னதும் இந்தியாவிற்கு வந்தேனே? அங்கேயே இருந்திருந்தால், ஓரளவு இதை விட வசதி கிடைத்திருக்கும். வாய்ப்புகளும் அதிகம் எனக்கு. ஆனால் அத்தனையும் விட்டுவிட்டு இங்கே வந்தேன்...ஏன்? உன்னை மறுபடியும் கடைசியாக ஒருமுறை பார்க்க முடியுமா என்று தான்."

    "ஹ்ம்ம்..."

    "அவந்தி தான் நம் இருவருக்காகவும் முயற்சி எடுத்தாள். உன்னை சந்தித்து பேச சொன்னாள். எனக்கு திருமணம் என்று சொன்னதும், துடித்து நிமிர்ந்தாயே? அப்போது தான், உன் மனதில் நான் இருப்பதை உறுதியாக அறிந்துக்கொண்டேன். முதல் முறை நம் திருமணத்துக்கு நீ சம்மதிக்காத போதே, நான் உன்னிடம் விளக்கம் கேட்டிருந்தால் இத்தனை துன்பமும் இருந்திருக்காது. மறுமுறையும் அதே தவறை செய்ய எனக்கு விருப்பமில்லை. ஆனால் உன்னை அப்படியே விடவும் மனமில்லை. நீ எப்போது எப்படி பேசுவாய் என்பதும் தெரியாமல், நான் அல்லாட வேண்டும். அது தான் எல்லாரையும்...."

    "எனக்கெதிராக போர்க்கொடி தூக்க வைத்து உங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டீர்கள்?"

    "ம்கும்...நீ அதற்கு விட்டால் தானே? அது தான் முதலிரவில் ஆசையாய் நெருங்கி வந்தவனை எரிப்பது போல பார்த்தாயே?" சொல்லிவிட்டு அதற்கு பழி தீர்ப்பது போல இப்போது அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். அவளையும் பதில் கொடுக்க வைத்தான்.

    "போதுமே... கொஞ்சம் விட்டால் அதிலேயே குறியாக இருப்பீர்கள்."

    "இன்னும் தொடங்கவே இல்லை.. அதற்குள் போதும் என்கிறாய்? இதற்கு முன்பு நீ கொஞ்சமும் விடவில்லையே....அது தான் இப்போது கொஞ்சிக் கொள்ள........" முடிக்காமல் அவள் அருகில் குனிந்தான். அவள் அவனை தள்ளிவிட்டாள்.

    "நான் தான் வேண்டாம் என்றேன்... நீங்களாவது புரிய வைத்திருக்க கூடாதா?"

    "என்ன சொல்லி புரிய வைப்பேன் அருவி? இப்போது இப்படி சொல்கிறாய்... ஆனால் அப்போது நான் என்ன செய்திருந்தாலும், அது உனக்கு நடிப்பாக தோன்றியிருக்கும். உன்னை அடைவதற்கு தான் நான் அப்படி நாடகமாடுவதாய் நீ நினைத்துவிட்டால்? அது தான் விலகி இருந்தேன்."

    "இன்று மட்டும் அவந்தியின் வீட்டுக்கு சென்றிருக்காவிட்டால், நீங்களாக என்னை தேடி வந்திருக்க மாட்டீர்கள்...இல்லையா?"

    "ஹா...உன்னை தேடி வந்து திருமணம் செய்தேன். அது என்னை விட்டு நீ வேறு எங்கும் போய்விட கூடாதென்ற பயம். ஆனால், உன் மனம் தானாக தான் கனிய வேண்டும் அருவி. அதற்கு என் பக்கத்திலிருந்து நானும் சில முயற்சிகள் செய்தேன். முதலில் எனக்குள்ள குற்ற உணர்வை போக்கினால் தான் உன் மீது முழுமையான அன்பு செலுத்த முடியும் என்பதால் தான் சம்பாதிப்பதில் கவனம் வைத்தேன். உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுப்பதை எண்ணி தான் உன்னையும் தொடாமல் விட்டேன்."

    "உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையோ, அதனால் தான் அருகில் வரவில்லையோ என்று நான் தவித்தேன்."

    "உன் அனுமதி இல்லாமலே உன்னை நெருங்கியிருக்கலாம் அருவி. ஆனால் உன் சந்தேகம் தீர்ந்திருக்காது. கடைசி வரை உறுத்திக்கொண்டே இருக்கும். நீயாகவே என் மீது உனக்குள்ள காதலை உணர வேண்டும் என்று தான் காத்திருந்தேன். இன்று தான் நீ உணர்ந்தாய்."

    "நீங்கள் மட்டும் என்னவாம்? இன்று அண்ணாவும் உங்கள் நண்பரும் தங்கள் மனைவியரை தாங்கவும் தானே உங்களுக்கும் அறிவு வந்திருக்கிறது?" கோபமாய் முறைத்தாள்.

    "என் வார்ட்ரோப் அறையில் நம் திருமண அழைப்பிதழ் இருக்கும்... அதை எடுத்து வா..."

    அவன் எதையோ சொல்ல வருவதை உணர்ந்து அவளும் மறு பேச்சில்லாமல் சென்று எடுத்தாள். அதை பார்த்தவள் அப்படியே சிலையாய் நின்றாள்.

    இது அன்று ஜவுளி கடையில் அவள் கடைசியாக பார்த்த அரக்கு நிற சேலையின் முந்தானை..அது அப்படியே மெல்லிய இழையால், திருமண பத்திரிக்கையின் அட்டையில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு பத்திரிக்கையை அவள் இன்று தான் பார்க்கிறாள். தன திருமண பத்திரிக்கையை கூட பார்க்காத தன் முட்டாள்தனத்தை எண்ணி அவனை பார்த்தாள். அவன் அருகில் வருமாறு சைகை செய்தான்.

    அருகில் சென்று பாவமாய் கேட்டாள்......"அன்று நீங்களும் வந்திருந்தீர்களா?"

    "ஆமாம்."

    வருத்தமாய் கேட்டாள்..."பிறகு ஏன் என் கண்ணில் படவில்லை?"

    "நான் அருகில் இருந்தால், நீ தடுமாறுவாய் அருவி. என்மேல் உள்ள கோபத்தில் புடவை எடுப்பதில் ஆர்வம் காட்ட மாட்டாயோ என்று நினைத்தேன். நான் வந்தது அவந்திக்கும் செழியனுக்கும் கூட தெரியாது."

    "அது சரி...அந்த புடவையை வாங்காமல், அந்த முந்தானையின் டிசைன் மட்டும் எடுத்து இப்படி அச்சடிக்க தோன்றியதே...எப்படி?"

    "எனக்கும் அந்த முந்தானை டிசைன் பிடித்திருந்தது. அந்த புடவையை வாங்கலாமா என்று தான் முதலில் நினைத்தேன்... ஆனால் அந்த நிறம் உனக்கு எடுப்பாய் இருக்காது. அது தான் அதை பத்திரிக்கையாய் அச்சடித்தேன். உனக்கும் அந்த ஏக்கம் இருக்காதே. பக்கத்தின் மேலே வரைந்தால், அது அழகாக இருக்காது. எனவே, தங்க நூலிழையில் அதே டிசைனை கொண்டு வந்தேன். பார்க்கவும் ரிச்சாய் தெரிந்தது."

    அவளின் ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்றி இருக்கிறான்... அதுவும் எப்படியெல்லாம் யோசித்து? இவனுக்கா அவள் மேல் காதல் இல்லை என்று நினைத்தாள்?

    "ஆனால் பணத்தை தண்ணீராய் செலவழித்து விட்டீர்களே? அப்பாவிடம் திருமணத்துக்கு அவர் எந்த செலவும் செய்ய கூடாது என்று சொன்னீர்களாம். அதில் தான் அவருக்கும் அண்ணனுக்கும் வருத்தம். ஒரே பெண்ணுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று."

    "உன்னை உனக்காகவே தான் காதலித்தேன் அருவி. அதனால் தான் நம் வாழ்க்கையை தொடங்க உன் அப்பாவிடம் பணம் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை என்னிடம் இவ்வளவு பணம் இல்லாவிட்டாலும், என்னிடம் உள்ளதை வைத்து தான் உன்னை மணந்திருப்பேன். இனி வரும் நாட்களில் அவர் மகளுக்கு எதை வேண்டுமானாலும் செய்யட்டும், அதில் நான் தலையிட மாட்டேன்."

    அருவிக்கு கண்களில் நீர் வந்தது.அவன் பதைத்துவிட்டான்.

    "ஹே... என்னடா? இப்போது ஏன் அழுகிறாய்?"

    "இத்தனை நாள் அழுதது, உங்களுக்கு என் மேல் அன்பிருக்காதோ என்று நினைத்து... இப்போது அழுவது இப்படி ஒரு கணவன் கிடைக்க நான் செய்த தவம் என்னவோ என்று நினைத்து..."

    "ம்கும்...இதற்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை... யார்? நீ தவம் செய்தாயா? சரி தான்......தவம் கிடப்பவன் நான் தான்."

    "எதற்கு?"

    "மகாராணியின் கடைக்கண் பார்வைக்கு தான்."

    "சும்மா கதை விடாதீர்கள்... இப்போது நேர் பார்வையே பார்த்துவிட்டேனே? அப்போ இது மட்டும் போதுமா?"

    "ஐயையோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால், அதையே வைத்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறாயா?"

    "ஆமாம், தப்பிக்க தான் அவந்தியை விட்டு நம்மை விருந்துக்கு அழைக்க சொன்னேனா?"

    "இது என்ன புது கதை?"

    அந்த கதையை அவனுக்கும் சொன்னாள்....அவன் மௌனமாய் தலையசைத்தான்.

    "அவந்தியும் செல்வமும் இல்லாதிருந்தால், நாம் இருவரும் இத்தனை சுலபத்தில் சேர்ந்திருக்க முடியாது அருவி."

    "அதிலும் செல்வம்? அவரை நான் தவறாக நினைத்ததைக் குறித்து எனக்கே வெட்கம் தான்."

    "ஹேய்....ஜாக்கிரதை...இனி உன் வெட்கமெல்லாம் எனக்காக மட்டும் தான்." அவன் போலியாய் மிரட்டினான்.

    அவளும் வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்து சிரித்துக்கொண்டே சொன்னாள்...."வெட்கம் மட்டுமா? நானே இனி உங்களுக்காக தான்."

    ஒருவரை ஒருவர் உணர்ந்துவிட்ட இருவரும், வாழ்க்கையை சேர்ந்து உணர தொடங்கினர்.அதற்கு அவர்களின் காதலும் துணை வந்தது!

    உணர்ந்துவிட்டேன் என் அன்பே!
    உன் அன்பை நான் உணர்ந்துவிட்டேன்!
    உன்னவள் நான் என உணர்ந்துவிட்டேன்!

    உன்னை உணர்ந்துக்கொள்ள நான் போராட,
    என்னையே எனக்கு உணர்த்திவிட நீ திண்டாட,
    நீ எனவும், நான் எனவும் இனி எதுவுமில்லை..
    நாம் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் இல்லை..
    என்பதை உணர்ந்துவிட்டேன் என் அன்பே!

    காதல் இருக்கும் வரையில் மட்டும் இல்லாமல்,
    நான் இறக்கும் வரையிலும் நீ இருப்பாய்..
    உன்னுடன் நம் காதலும் இருக்கும் எனக்கெனவே..
    என்று உணர்ந்துவிட்டேன் என் அன்பே!

    உள்ளம் கொள்ளை போனதாய் நான் நினைக்க,
    கொள்ளைக்கொண்ட கள்வன் நீயோ அருகிருக்க,
    என்னைவிட்டு போனதோ ஒரு உள்ளம்,

    நான் அடைந்துவிட்டதோ உன் நல்லுள்ளம்..
    என்றேதான் நான் உணர்ந்துவிட்டேன் என் அன்பே!

    கோபம் கொள்வது நீயானால்,

    விட்டுக்கொடுப்பது நானாவேன்..
    நீ எதை எனக்கு கொடுத்தாலும்,
    உனக்காக நான் கொடுப்பது என் காதல்..
    உனக்காகவே துடிப்பது என் இதயம்..
    என்பதை உணர்ந்துவிட்டேன் என் அன்பே!

    உணர்வாயா என்று கேட்டாயே?
    உணர்ந்தேனே என் அன்பே!
    உனக்காகவே இவள்....பெண்ணாகவே இன்று.. பிறப்பெடுத்தாள்
    என்பதை தான் உணர்ந்துவிட்டேனே என் அன்பே!


    முற்றும்!!!!!!!!
     
    Last edited: Feb 15, 2011
    Loading...

  2. hameetha

    hameetha New IL'ite

    Messages:
    44
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Nice finishing...expecting more soon...
     
  3. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    [FONT=&quot]ன்புக் கவிதாயினி தேவாவுக்கு,[/FONT]

    [FONT=&quot]காதலர்தின பரிசாக அருவியையும் நிரஞ்சனையும் இணைத்து எங்கள் மனதை தித்திக்க செய்து விட்டீர்கள்.
    [/FONT]
    [FONT=&quot]உங்களிடம் நான் வியந்தது எப்படி காதல் கதையிலும் சஸ்பென்ஸ் வைக்கிறீர்கள் என்று. குஷி படத்தில் ஆரம்பத்தில் ஒரு வசனம் வரும். இவர்தான் ஹீரோ. இவர்தான் ஹீரோயின். இவங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க ஆனா அது எப்படி? எல்லாருக்கும் அதுதான் முடிவுன்னு தெரியும் ஆனா அதை திரைக் கதையில அலுப்புத் தட்டாம சொல்லி இருப்பார்கள். அது மாதிரி தான் இந்த கதையும் எனக்குப் படுது. அருவி தான் கதையின் நாயகி. நிரஞ்ஜனத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறா அதுவும் தெரியும். ஆனாலும் அதை நீங்க சுவைபட சொன்ன வித[/FONT][FONT=&quot]ம் [/FONT][FONT=&quot] மிகவும் அழகு.:thumbsup:thumbsup

    என்னடா செல்வம் வழியுரானே. அருவியோட அம்மாவுக்கோ அவனை அருவிக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை போல இருக்கே. செழியன் ஒரு நண்பனா இருப்பான்னு பார்த்தா பொண்ணு கேட்டு வந்துட்டானே இப்படி ஏகப் பட்ட கேள்வி வாசகர்களுக்கு. அருவிக்கு கல்யாணம் முடியும் வரை ஒரே திகில் .

    [/FONT] [FONT=&quot]அருவி செல்வம் காத்து இருக்கான் அப்படின்னு செழியன் கிட்ட சொன்னதும் எனக்கே பயங்கர கோவம் அவ மேல. சரியான மைனர்னு முதலில் நினைத்த செல்வம் செஞ்ச வேலைகளைப் பார்த்தால் நீ தான்யா உண்மையான ஹீரோ இந்தக் கதைக்கு அப்படின்னு பாராட்டத் தோணுது. [/FONT]
    [FONT=&quot]நீங்க உங்களோட முத[/FONT][FONT=&quot]ல்[/FONT][FONT=&quot] கதைல எப்படி வானதியையும், வான்முகிலையும் காரக்டர் மாத்துனிங்கன்னு எனக்கு நல்லா நினைவு இருக்கு. அதுதான் நான் முதன்முதலில் படிச்ச உங்களோட கதை. அது மாதிரி இந்தக் கதையையும் ஏதாவது யுக்தி இருக்கும்னு எதிர்பார்த்தேன். அதுமாதிரி செல்வம் கதாபாத்திரம் இருந்தது. யாரையும் வில்லனா காட்டாம எழுதுறது ரொம்ப கஷ்டம். அது உங்களுக்கு அனாயாசமா வருது. [/FONT]

    [FONT=&quot]நிரஞ்ஜனைப் பத்தியும் அருவியை பத்தியும் சொல்ல வேண்டியதில்லை. உங்களோட கவிதைகளைப் போலவே அவர்களும் வெகு அழகு. உண்மையை சொல்லப் போனா உங்கள் கதைகளைப் படிக்கும் வரை, நான் படித்த மற்ற புதினங்களில் எல்லாம் கதைதான் என்னை கவர்ந்து இருக்கிறதே தவிர கவிதைகள் இல்லை. அவை ஞாபகமும் இருந்ததில்லை. உங்கள் கதைகளை படித்த பின்புதான் நீங்கள் எழுதிய மற்ற கவிதைகளைப் பார்த்தேன். இப்போது நான் உங்கள் கதையைவிட கவிதைக்கு அடிமையாகி விட்டேன். இப்போதெல்லாம் கதைகளில் வரும் கவிதையை விடாமல் படிக்கிறேன். [/FONT]

    [FONT=&quot]இந்தக் கதைல எனக்கு பிடிச்ச கவிதைகள் :

    ஒரு பெற்றோரின் அன்பினை அழகாகப் பிரதிபலிக்கும் கவிதை: [/FONT]
    "[FONT=&quot]வனம் தானோ எங்கள் வாழ்வு[/FONT],
    [FONT=&quot]நீ வரும் முன்பு[/FONT]?
    [FONT=&quot]வரம் தானோ இந்த வாழ்வு[/FONT],
    [FONT=&quot]நீ வந்த பின்பு[/FONT]?
    [FONT=&quot]ஒரு துளியே போதுமடி பெண்ணே[/FONT]
    [FONT=&quot]உன் தாய் தவப் பயனடைய[/FONT],
    [FONT=&quot]நீயோ ஐந்தருவியாய் பொழிகிறாயே கண்ணே[/FONT]
    [FONT=&quot]இத்தரணியே செழிய!!!"[/FONT]

    [FONT=&quot]எப்படி இருக்க வேண்டும் காதல் என்று நெத்தியடியாய் சொன்ன [/FONT]

    "[FONT=&quot]உன் உயிரில் நானும்[/FONT], [FONT=&quot]என் உயிரில் நீயும்[/FONT]
    [FONT=&quot]கலந்துவிட்டால் மட்டும் வந்துவிடுமா காதல்[/FONT]?
    [FONT=&quot]உன்[/FONT][FONT=&quot]நினைவில் நானும்[/FONT], [FONT=&quot]என் நினைவில் நீயும்[/FONT]
    [FONT=&quot]இருந்துவிட்டால் மட்டும் வந்துவிடுமா காதல்[/FONT]?
    [FONT=&quot]உனக்காக நான் எனக்காக நீ...[/FONT]
    [FONT=&quot]இது மட்டுமா காதல்[/FONT]?
    [FONT=&quot]உன்னிலும் எனைக் கண்டு[/FONT], [FONT=&quot]என்னிலும் உனைக் கொண்டு[/FONT]
    [FONT=&quot]உனக்காக நான் யோசித்து[/FONT], [FONT=&quot]எனக்காகவும் நீ சிந்தித்து[/FONT]
    [FONT=&quot]பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் அல்லவா காதல்[/FONT]?"

    [FONT=&quot]இறுதியாக உங்க கதையின் தலைப்பை நியாயப் படுத்திய கவிதையாக [/FONT]

    [FONT=&quot]காதல் இருக்கும் வரையில் மட்டும் இல்லாமல்[/FONT],
    [FONT=&quot]நான் இறக்கும் வரையிலும் நீ இருப்பாய்..[/FONT]
    [FONT=&quot]உன்னுடன் நம் காதலும் இருக்கும் எனக்கெனவே..[/FONT]
    [FONT=&quot]என்று உணர்ந்துவிட்டேன் என் அன்பே![/FONT]


    [FONT=&quot]மத்தபடி எல்லா கதாபத்திரமும் நல்லா இருந்தது. என்னால ஒவ்வொரு அத்யாயத்துக்கும் தனித்தனியா பின்னூட்டம் தர முடியல. இன்னும் எப்படியும் ஒரு அஞ்சு அத்யாயமாவது வரும். இந்த வாரம் நேரம் ஒதுக்கலாம்னு இருந்தேன் அதுக்குள உங்க கதையை முடுச்சுட்டிங்க. [/FONT]


    [FONT=&quot]இதுக்கு மேல என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல. கதைய மொத்தமா பாத்து ஒரு முடிவுக்கு வரத்தான் என்னால முடியுது. ஒவ்வொன்னா விமர்சிக்க எனக்குத் தெரியாது. ஆகையால் இது ஒரு விமர்சகரின் கருத்து இல்ல. ஒரு ரசிகை எழுதுறது. உங்கள போரடிக்காம இதோட முடுச்சுக்குறேன். [/FONT]:cheers:cheers

    [FONT=&quot]இது போன்று இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று ஆசைப்படும் [/FONT]
    [FONT=&quot]உங்கள் தோழி,[/FONT]
    [FONT=&quot]தமிழ் [/FONT]
     
    Last edited: Feb 15, 2011
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உண்மை அன்பு உணர செய்யும் உருக செய்யும் என்ற உண்மையை உணர்த்திய ப்ரியாவுக்கு ஒரு சபாஷ் .:kiss
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Very well done and well finished deva. Loved the beautiful poems in between each episode. Your writing style, narration everything is so fine. Waiting eagerly to read many many more stories from you. :cheers
     
  6. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Wow Deva,
    Well written. kathai vegamaga kondupoi azahaga mudithuvitterikal.:)
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ப்ரியா,

    அழகான முடிவு....பாராட்டுக்கள்..கல்லூரி படிக்கும் காலங்களில் நான் ரமணிசந்த்ரன் நாவல்களை விரும்பி படிப்பேன்.அதன் பின்,என்னுடய ரசனைகள்,விருப்பங்கள் வேறு மாதிரி ஆக,அவருடய நாவலுக்கும் எனக்கும் இடைவெளி சற்று அதிகமாகிவிட்டது.ஆனால் இப்போதும் அவர் நாவல் கிடைத்தால் முழு மூச்சாக முடித்துவிட்டுதுதான் மறு வேலை.எனக்கு அவர் எழுத்தில் மிகப்பிடித்தது அந்த இதம்தான்.கதை படிக்கயில் சுகமாக இருக்கும்.எந்த கவலை எதுவும் இல்லாமல் ஆனந்தமாய் இரண்டு மணி நேரம் செலவிடலாம்.

    இப்போது உன் கதை படிக்கயிலும் எனக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது.வாழ்த்துக்கள் உனக்கு..:thumbsup

    காதலை அழகாக படம் பிடிக்கிறாய் வார்த்தைகளால்.என்னும் மேலும் மேலும் நீ எழுத உனக்கு என் வாழ்த்துக்கள்..:)
     
  8. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    கதைக்கு முடிவுரை என்றாலும் அருவி நிரஞ்சன் வாழ்க்கைக்கு அழகான முன்னுரை. காதலில் கண்ணியம் காட்டிய விதம் மிக அழகு. உங்கள் அடுத்த முயற்சிக்கு காத்திருக்கிறேன்..
     
  9. skvs

    skvs Bronze IL'ite

    Messages:
    432
    Likes Received:
    19
    Trophy Points:
    35
    Gender:
    Female
    hi deva,

    i read last few parts . you have nicely narrated. i want to read from the beginning. can you please combine all the parts and share the link.

    thanks
    skvs
     
    Last edited: Feb 15, 2011
  10. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    vunarndhu rasithu padithen. very deep love story.
    very good narration.After a longtime i read tamil story
     

Share This Page