1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணர்வாயா அன்பே -28!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Feb 10, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அதிகாலை விடியலைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும் உற்சாகம் ஏனோ இன்று ஏற்பட மறுத்தது அருவிக்கு.தன வாழ்க்கையின் விடியலை தேடிக் கொண்டிருப்பவளுக்கு, உலகத்தின் விடியல் மனதில் பதியவில்லை.இனி இது தான் தன் நிலைமையா? இயற்கையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு சமையலைக் கவனிக்க தொடங்கினாள்.

    'அவன் எழுந்து ஜாகிங் போய்விட்டான்.அவன் வருவதற்குள் இவள் சமையலை முடித்தால் தான் அவன் கிளம்பும்போது அவனுக்கு தேவையானதை எடுத்து கொடுக்க நேரம் இருக்கும்.ஆனால் அவன் விடுவானா?

    அருவிக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே வேலை சமைப்பது மட்டும் தான். அவன் குளிக்க போகையில் டவல் எடுத்துக்கொடுக்க வேண்டும், குளித்து முடித்து வரும் போது அவன் உடைகளை எடுத்துக்கொடுக்க வேண்டும், அவன் அலுவலக பைல்களை அடுக்க, அவன் செல்லும் போது வழியனுப்ப....இப்படி எத்தனையோ ஆசைகள் அவளுக்கும் இருக்கிறது தான். ஆனால் அவன் விட்டால் தானே? இவளை ஒரு வேலை செய்ய விட மாட்டான்.'

    நீண்ட பெருமூச்சோடு சமையலை முடித்துவிட்டு வெளியில் வந்தாள்.அவன் ஜாகிங் முடிந்து வந்து,பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அவசரமாய் உள்ளே சென்று காபி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே வாங்கியவன் மிகுந்த உற்சாகமாய் தெரிந்தான்.

    நேற்று எதுவுமே நடக்காதது போல எப்படி சிரிக்க முடிகிறது இவனால்? ஆசையாய் அருகில் வந்து முத்தம் கொடுத்தவன், அடுத்த நிமிடமே ஏதோ தொடக்கூடாத ஒன்றை தொட்டு விட்டவன் போல சாரி சொல்லிக்கொண்டு திரும்பி படுத்துவிட்டான். ஏன்? ஒரு ஆணுக்கு பெண்ணின் மேல் தோன்றும் இயற்கையான ஈர்ப்பு கூடவா என்னிடம் தோன்றவில்லை? அவளுக்கு மனம் சோர்ந்தது. அவன் கிளம்பி சென்றுவிட்ட பின்பும் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

    நானாகவே விலகி நிற்க சொல்லிவிட்டு இப்போது நெருங்கினால், என்ன நினைப்பான்? நேற்று அவன் திரும்பி படுத்தவுடன் இவளுக்கு ஓ என்று கதறி அழ தான் தோன்றியது.என் பெண்மைக்கு அது எப்படிப்பட்ட அவமானம்? அவன் அதை கொஞ்சமும் உணரவேயில்லையே? கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள். பெண்ணாக பிறந்துவிட்டு அழுவதைத் தவிர வேறு எதையுமே செய்ய முடியாதா?

    "ஏன் செய்ய முடியாது? ஒரு பெண் நினைத்தால், உலகமே அவள் வசப்படும்...அவள் கணவன் மட்டும் விதிவிலக்கா என்ன?" இப்படி தான் சொன்னாள் அன்று அவளை பார்க்க வந்த அவந்தி.

    "இல்லை அவி...இந்த உலகத்தையே நான் ஜெயித்தாலும், அவர் மனதை என்னால் ஜெயிக்க முடியாது."

    அவந்திக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

    'இந்த முட்டாள் பெண்ணுக்கு இன்னும் எப்படி தான் புரிய வைக்க போகிறேன் நான்? இவள் தான் உலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான் ஒருவன்...இவள் என்னடா என்றால், அவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கிறாள்.'

    "அருவி, நான் கேட்பதற்கு முதலில் பதில் சொல்.அன்று செழியனும் நிரஞ்சனும் உன்னை பெண் கேட்டு வந்தபோது செல்வம் தான் வேண்டும் என்றாயே...ஏன்?"

    "அ....அது....வந்து...அப்போது என் மனம் குழப்பத்தில் இருந்தது அவந்தி.செழியனை விரும்புகிறேனா இல்லை நிரஞ்சனை காதலிக்கிறேனா என்று எனக்குள் குழப்பம். அதுவே அடுத்த நாள் செழியனுக்கு பெண் கேட்டு அவருடன் நிரஞ்சனும் வந்து நிற்கவும் என் மனம் எனக்கே புரிந்துவிட்டதடி.நிரஞ்சனைத் தவிர வேறு யாரையும் என் கணவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிந்துக்கொண்டேன். ஆனால்.........."

    "ஆனால்?"

    "அவரே என்னை விரும்பாததால் தானே செழியனுக்கு பெண் கேட்டு வந்திருந்தார்? அந்த கோபம் அவந்தி எனக்கு. நான் நிராகரிக்கப் பட்டுவிட்டேன் என்பதை என்னால் தாங்க முடியவில்லை. அவர் முன்னால் என் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் இயலவில்லை. அவரை வெறுப்பேற்ற செழியனையே திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லலாமா என்று தான் முதலில் நினைத்தேன்." தயக்கத்துடன் நிறுத்தி தோழியின் முகம் பார்த்தாள்.

    "ஹா..நான் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டேன் அருவி.தைரியமாக நீ அன்று மனதில் நினைத்ததை மறைக்காமல் சொல்லு. நாம் இருவரும் தோழிகள் என்பதை மட்டும் இப்போது கவனத்தில் வை.... போதும். செழியனின் மனைவியிடம் நீ சொல்லவில்லை.உன் தோழியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்."

    "ம்ம்.....அதே நேரம் உனக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பதும் எனக்கு தெரியும். அதுவும் அன்று உன் கண்கள் அவரை எத்தனை ஏமாற்றத்துடன் பார்த்தது?? அதை நானும் கவனித்தேன்.அப்படி சொல்ல நினைத்தது நிரஞ்சனை வெறுப்பேற்ற தானே தவிர செழியனிடம் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை.அப்போதைக்கு சம்மதித்துவிட்டு திருமணத்தை மறுத்திருப்பேன்..ஒருவேளை அப்படி செய்தால், எங்கே உனக்கும் செழியனுக்கும் தீமை செய்தவளாவேனோ என்ற பயத்தில் செல்வத்தின் பெயரை இழுத்துவிட்டேன்." அன்றைய குற்றத்தை நினைத்து இப்போதும் தலைக்குனிந்தாள்.

    "ம்ம்ம்...இதையெல்லாம் நான் உன்னை அறைந்து கேட்ட அன்றே என்னிடம் நீ சொல்லியிருக்கலாம்? ஆனால் நீ சொல்லும் வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லை அருவி.அதனால் அன்று நான் செல்வத்திடம் போய் நின்றேன்."

    "ஆ...எதற்கு?"

    "எல்லா உண்மையையும் சொன்னேன். அவள் மனதில் உங்களுக்கு இடம் இல்லை...அவள் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறாள் என்றேன். யாரையோ பழி வாங்க அவள் வேஷம் போடுகிறாள் என்றேன். ஆனால் அருவி, உன் மனதில் வேறு யாருக்கு இடம்....யாரை பழி வாங்க நினைக்கிறாய் என்பதை செல்வம் தெரிந்து வைத்திருந்தார்."

    "செல்வமா? அவருக்கு என் மனம் எப்படி தெரிய முடியும்?"

    "அதை தான் நானும் கேட்டேன்....நிரஞ்சன் வெளிநாடு போவதற்கு முன்பு, உன் அப்பாவிடம் வந்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அவரும் உன் அப்பாவும் பேசினதை முழுக்க செல்வம் கேட்டிருக்கிறார்."

    "ஓ......"

    "அருவி, செல்வத்தின் மேல் எனக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் அன்று அவர் சொன்னதைக் கேட்ட பின்பு, என் மனதில் அவர் உயர்ந்து நின்றார்."அவந்தி....அருவியின் மனம் என்னிடம் இல்லை என்பது எனக்கு தெரியும்.ஆனால் அது இன்னொருவருக்கு சொந்தம் என்று தெரியாது.அடுத்தவன் மனைவியை உடைமையாக்கிக் கொள்ளும் அளவுக்கு நான் தரம் கெட்டவன் இல்லை" என்றார்."

    "ம்ம்ம்..."

    "அருவி, நாம் செல்வத்தை ரொம்பவே தவறாக எடைபோட்டுவிட்டோம். அம்மா அவரை தன் வசதிக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.நீ தப்பிக்க அவர் பெயரை இழுத்துவிட்டாய்.நானும் போயும் போயும் செல்வத்துக்கா நீ மனைவியாக வேண்டும் என்று உனக்காக கவலைப்பட்டேனே தவிர, அவருக்கும் ஒரு மனம் இருக்கும் என்று நினைத்து பார்க்கவே இல்லை. அவர் சொல்லி தான் நிரஞ்சனை நீ விரும்புவது எனக்கு தெரியும்."

    "அவந்தி...செல்வம் அன்றைக்கு என்னிடம் சொல்லும் போது, உன் வாழ்க்கைக்கு நான் ஒரு முயற்சி செய்திருக்கிறேன் என்றார். அது என்ன?"

    "நிரஞ்சனை தான் நீ விரும்புகிறாயா என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை அருவி.அவர் உன்னை விரும்புகிறார் என்பதை நிரஞ்சன் உன் அப்பாவிடம் பேசியதை வைத்தே தெரிந்துக்கொண்டிருக்கிறார் செல்வம். ஆனால் உன் நிலை என்ன என்பதில் எங்களுக்கு எந்த தெளிவும் இல்லை. ஒரு வேளை செழியன் உன் மனதில் இருக்கலாமோ என்று செல்வம் சந்தேகப்பட்டார்.நான் செழியனை விரும்புவதை செல்வத்திடம் சொன்னேன். நம் உரையாடல் முழுவதையும் சொன்னேன். செழியன் உனக்கு வெறும் நண்பர் தான் என்று நீ கூறியதை சொன்னேன்."

    அருவியின் மனதுக்குள் மழையடித்தது. 'அவர் மனதில் நான் இருக்கிறேனா? அப்பாவுக்கும் தெரியுமா?'

    "உனக்காக தவமிருந்தேன்
    உனக்காக தவித்திருந்தேன்..
    ஆனால் உணராமல் போனேனே
    உன் உள்ளம் அது என் இல்லமென.."


    "நிரஞ்சன் மனதில் நீ இருக்கிறாய் என்று எங்களுக்கு உறுதியாய் தெரிந்தது. உன் மனதில் நிரஞ்சன் இருப்பது உறுதியாக வேண்டுமானால், செழியனை உன் வழியிலிருந்து அகற்ற வேண்டும் என்று செல்வம் சொன்னார். அவரே சென்று செழியனிடம் என் காதலை சொன்னார். முதலில் செழியன் ஒத்துக்கொள்ளவில்லை."

    "ஏன்?"

    "அருவியைத் தவிர வேறு யாருக்கும் என் வாழ்க்கையில் இடம் இல்லை என்றுவிட்டார். ஆனால் செல்வம் விடவில்லை. உன் மனதில் நிரஞ்சன் இருப்பதையும், செழியனுக்கு பெண் கேட்க நிரஞ்சனும் கூட வந்த கோபத்தில் தான் நீ வேறு விதமான பதிலை சொன்னதாக செல்வம் சொல்லிவிட்டார்."

    "செல்வம் என் மனதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்."

    "இல்லை...அப்போது அவர் சொன்னது எல்லாமே வெறும் ஊகம் தான். நிரஞ்சன் திடீரென்று யாருக்கும் சொல்லாமல் வெளிநாடு போனது செழியனையும் யோசிக்க வைத்திருக்கிறது.உன் வழியில் இனி வருவதில்லை என்ற முடிவுடன் தான் என்னை திருமணம் செய்துக்கொண்டார்.என் அம்மாவிடம் கறாராய் சொல்லிவிட்டார்..."உங்கள் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், அருவியின் வாழ்க்கையில் குழப்பம் உண்டாக்காமல் கிராமத்துக்கே சென்று விடுங்கள் என்று.அம்மாவுக்கு மாசாமாசம் தேவைக்கு அதிகமாகவே பணம் அனுப்புகிறார்.அதனால் அம்மாவும் அத்தை மனதைக் கெடுக்கும் வேலையில் ஈடுபடவில்லை."

    அருவி தூக்கிவாரி போட்டு நிமிர்ந்தாள்... "ஹே...என்னடி இப்படி சொல்கிறாய்? நீங்கள் காதலால் மணம் செய்துக்கொண்டதாய் தானே நான் நினைத்திருந்தேன்? எனக்காக தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டா உங்கள் திருமணம் நடந்தது?"

    "நிச்சயமாக இல்லை அருவி. முதலில் செழியன் யோசிக்க அவகாசம் கேட்டார். நான்கு மாதங்கள் கழித்து அவரே செல்வத்திடம் சொல்லியிருக்கிறார்...."துணையே இல்லாமல் வாழ முடியாது என்பதை இந்த நான்கு மாத தனிமையில் புரிந்துக்கொண்டேன்.எனக்கென்று என்னை நேசிக்க ஒருத்தி கண்டிப்பாய் வேண்டும் செல்வம்.அந்த ஒருத்தி எனக்காக காத்திருக்கும் அவந்தியாகவே இருக்கட்டும்" என்று. எங்கள் திருமணம் காதலால் நடந்தது இல்லை தான். ஆனால் அது நீ நினைப்பது போல தியாகத்துக்காக நடந்ததும் இல்லை. துணையே இல்லாமல் வாழ அவரால் முடியவில்லை.....அந்த துணையாக நான் சென்றேன்... இப்போது என் துணையில்லாமல் அவருக்கு வாழ்க்கையில்லை அருவி."

    "என்னடி குழப்புகிறாய்?"

    "ஹா...அருவி, அன்று அவர் என் காதலை ஏற்றுக்கொண்டார்.அவ்வளவு தான்...என்னை அவர் காதலிக்கவில்லை.ஆனால் இன்று அவரும் என்னை காதலிக்கிறார்.உண்மையான காதல் எதுவென்று உணர்ந்திருக்கிறார்.இது போதாதா எனக்கு?"

    "அவி...நான் இப்போது எப்படி உணர்கிறேன் தெரியுமா? படித்த முட்டாளாய் உணர்கிறேன். உனக்கு இருந்த தெளிவில், உன்னை காதலிக்காத ஒருவரின் அன்பை சம்பாதித்துக்கொண்டாய். ஆனால் நான்? என்மேல் அன்பிருந்த ஒருவரின் காதலை தூக்கி எரிந்துவிட்டேனே? ஐயோ.....எதையோ இழந்துவிட்டதை போல உணர்கிறேன் அவந்தி. இனி அவர் மனதில் எனக்கு இடம் கிடைக்குமா?"

    "செல்வம் உனக்காக எடுத்த முயற்சி...உன் வழியில் இருந்து செழியனை அப்புறப்படுத்தியது மட்டுமல்ல. நிரஞ்சனை மறுபடியும் இந்தியாவிற்கு வரவழைக்க சொன்னதும் அவர் தான்."

    "என்ன???"

    "ஆமாம்...என்னிடம் இப்படி ஒரு யோசனையை சொன்னார். செழியன் என்னை திருமணம் செய்துக்கொண்டதை அறிந்தால், நிரஞ்சனும் எந்த உறுத்தலும் இல்லாமல் உன்னை அணுகுவார். அதற்காக தான் எங்கள் திருமணம் முடிந்து பின்பு, நிரஞ்சனை வரவழைத்தோம்.நானும் என் கணவரும் அதை ஏற்றுக்கொண்டோம். நிரஞ்சனிடம் உன்னிடம் பேசுமாறு அனுப்பி வைத்ததே நான் தான்.பேசிவிட்டு வந்த அடுத்த நிமிஷமே உன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றார்."

    "நான் தான் அதை தவறாக புரிந்துக்கொண்டேன்...இல்லையா?"

    "நீ முழு மனதுடன் சம்மதம் சொன்னதாக தான் நான் நினைத்திருந்தேன் அருவி. இன்று நீயே சொல்லி தான் உன் விஷயம் தெரிகிறது. அவசரப்பட்டு விட்டாய் அருவி. அவரின் நேசத்தை சம்பாதிக்க தெரியாமல், அவரை கஷ்டப்படுத்திவிட்டாய்."

    அருவி சட்டென்று அவந்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். "அவந்தி....ப்ளீஸ்...இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடு. எப்படியாவது என் மனதை அவருக்கு நான் உணர்த்தி விடுகிறேன். அவந்தி.....அவந்தி.....ப்ளீஸ்..."

    தன் முன்னால் கையேந்தி நிற்கும் தோழியின் நிலை பரிதாபமாய் இருந்தது.

    "அருவி, நீங்கள் வெவ்வேறு துருவமாய் பிரிந்திருந்த போது நான் சேர்த்தி வைக்க முயற்சித்தேன். ஆனால் இப்போது நீங்கள் இருவரும் கணவன்-மனைவி. உங்கள் இருவருக்கும் இடையில் நான் வரக்கூடாது.என்னால் முடிந்த உதவியாக ஒன்று செய்கிறேன். உங்கள் இருவரையும் விருந்துக்கு அழைக்க, வரும் ஞாயிறு அவருடன் வருகிறேன். அப்போது ஏதேனும் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்."

    "எனக்கு புரியவில்லை....விருந்துக்கு வந்தால் அவர் மனம் மாறிவிடுமா?"

    "அருவி, அவர் உன்னை தொட்டுவிட்டு விலகியதை உன் பெண்மைக்கு இழுக்காய் நீ எடுத்துக்கொண்டாயே? தொடாதீர்கள் என்று நீ சொன்னபோது, அவருக்கும் அன்று அப்படி தானே இருந்திருக்கும்?
    அவர் உன்மேல் இன்னும் பிரியமாய் தான் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் உன்னை நெருங்க இயல்பாய் வரும் தயக்கத்தை போக்க வேண்டும். அதற்கு தான் விருந்து...வந்து பார்....பிறகு நீயே புரிந்துக்கொள்வாய்." கண்ணில் சிரித்துக்கொண்டே விடைப்பெற்றாள்.

    அருவிக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது. கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஞாயிறுக்காக காத்திருந்தாள். ஞாயிறு மட்டுமல்ல, கடவுளும் அவளைக் கைவிடவில்லை.
     
    Last edited: Feb 10, 2011
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    யப்பா இப்போவாதும் புரிந்ததே அருவிக்கு. :)

    செல்வம் போக்கிரி போல இருந்தாலும் பொறுப்பாய் பல வேலை செய்து இருக்கிறார். அவர் கேரக்டர் எனக்கு பிடிச்சிருக்கு.

    நாங்களும் காத்து இருக்கிறோம் ஞாயிறுக்காய் :cheers
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    priya intha ponnungale ippadi thaan.kitta bonaa etti povaanga.ettiponaa
    kitta varuvaanga.ithai naan sollalaima.anupavapattavargal sonnathu.kathai nalla boguthu.
     
    Last edited: Feb 10, 2011
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    எப்படியோ அருவி புரிஞ்சிகிட்டாளே, Good! But, சீக்கிரம் முடிஞ்சுடுமே கதை...அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு:-(

    Very interesting Deva :)
     
  5. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ivlo velai senjirukkaana antha selvam...:spin
    unmaiyile aruvi oru paditha muttaal than...:rant
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ada pavi niranja,kiss dhana....

    ippadhan indha aruvi ponnukku arivu vandhudha?????

    super appu....kalakku...(kaappiya ila)...:thumbsup
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி ஜெயா!:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அனுபவப்பட்டவர் நீங்களும் தானே அம்மா??:hide::):)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சீக்கிரம் முடிக்கலேனா நீங்களே என்னை நச்சு பண்ண ஆரம்பிச்சுருவீங்க ஐஷு..தயவுசெஞ்சு முடி தேவா ன்னு...:):)
     

Share This Page