1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணர்வாயா அன்பே - 1!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 23, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மெல்லிய பனிக்காற்று முகத்தில் மோத, அந்த தீண்டலை பரவசமாய் மனதுக்குள் அனுபவித்து கொண்டிருந்தாள். 'காலை நேரத்து பனிக்கு தான் எத்தனை வல்லமை..முகத்தில் பட்டவுடன், குழந்தையின் முத்தம் போல இப்படி இனிக்கிறதே? இதை அனுபவிக்க தெரியாமல், ஏன் மனிதர்கள் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்?'

    இலக்கில்லாமல் பார்வை எங்கோ சென்றது...ஆனால் இனிமையாய் தான் இருந்தது அவளுக்கு அதுவும் கூட, அவள் தாய் வந்து அழைக்கும் வரை.

    "அஞ்சு...எழுந்துவிட்டாயா கண்மணி? சொல்லியிருந்தால், குடிக்க ஏதாவது எடுத்து வந்திருப்பேனே?" பால் வெண்மைக்கும், அவள் தாய் நிறத்துக்கும் இதுவரை எந்த வேற்றுமையும் கண்டதில்லை அவள்.அவளுக்கு அதில் கொஞ்சம் குறையும் உண்டு...தந்த நிறத்தில் தாய் இருக்க, தான் மட்டும் தந்தை நிறமாய் தமிழர் நிறம் கொண்டோமே என்று.

    அந்த இயலாமை அவள் குரலிலும் தெரிந்தது...."எத்தனை அழகு அம்மா நீங்கள்...ஆனால் நான் தான் இப்படி தப்பி பிறந்துவிட்டேன்."

    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆயிற்றே...தாய் முகம் சமாதானமாய் மலர்ந்தது...
    "உனக்கு என்னடி ராசாத்தி...என்னை மாதிரி நிறம் இல்லாவிட்டாலும், நீயும் ஒன்றும் குறைந்தவள் இல்லை.நான் பாலின் வெண்மை, நீ தேனின் பழுப்பு..அவ்வளவு தான் வித்தியாசம். நீயும் ஒரு விதமாக அழகு தான் கண்ணம்மா.."

    சிரித்துக்கொண்டே வந்தார் வரதராஜன்..."என்னம்மா...கண்ணம்மா, உன்னம்மா என்னம்மா அறுத்துக் கொண்டிருக்கிறாள்?"

    "ஆமாம்..நம் திருமண சமயத்தில் ரம்பையாக தோன்றினேன்.. இப்போது நான் என்ன சொன்னாலும், உங்களுக்கு ரம்பமாக தான் தோன்றுவேன்...வயதாகிவிட்டதே?" போலியாய் சலித்துக்கொண்டாள்.

    "அடடே..என்னடா அனு... பல் போன பின்னால் கூட உன் பேச்சை நான் ரசிப்பேன்..நீ எப்போதும் என் இதய ராணி தான்." சொல்லிவிட்டு வரதன் பெண்ணை பார்த்து கண் சிமிட்டினார்.

    அவளுக்கும் புரிந்தது...தந்தையின் சாமர்த்தியம்.அது அவள் தாய்க்கும் புரிந்தது போல... "போதுமே, எதில் குறைந்தாலும், இந்த அசடு வழிவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.அப்போது போலவே..."

    "இதில் குறை இல்லையென்றால், வேறு எதில் அனும்மா?" மேலும் அசடு வழிந்தார்.

    அனு முறைத்தார்.. "அஞ்சு, நீ போய் குளித்து விட்டு வாடா..உன் அப்பா விட்டால், இப்படியே பேசிக்கொண்டே இருப்பார்... கதா காலட்சேபம் மாதிரி." என்று சொல்லி மகளை அனுப்பி வைத்துவிட்டு கணவனிடம் யுத்தம் தொடங்கினார்.

    "என்னங்க இது? சின்ன பெண், அதுவும் மகள் முன்னாடி இப்படியா பேசுவது? எத்தனை முறை சொன்னாலும், உங்களுக்கு கேட்காதா?"

    வரதன் அலட்சியமாய் சிரித்தார்..."நீ மட்டும் என்னவாம்? நான் சொல்வதை கேட்கிறாயா?"

    "நீங்கள் சொல்லி நான் என்ன கேட்கவில்லையாம் இப்போது?"

    "எத்தனை முறை நானும் சொல்கிறேன்...அழகாய் அருமையாய் என் மகளுக்கு பெயர் வைத்திருக்கிறேன்... நீ என்னவென்றால், அஞ்சு பஞ்சு என்று சுருக்கியே அழைக்கிறாய்? என்னை போல அருவி என்றாவது அழைக்கலாம் இல்லையா?"

    இப்போது அனுஷயா முகத்தில் அசடு வழிந்தது,ஆனாலும் சமாளித்தார்... "சரி சரி... வாங்க கீழே...டிபன் எடுத்து வைக்கிறேன்...அவள் வேறு குளித்துவிட்டு வந்தால் பறப்பாள் பசியென்று."

    அவள் சிரித்துக்கொண்டே படியிறங்கினார்...அவரும் சிரித்துக்கொண்டே பின்தொடர்ந்தார்...இருவருக்குமே மகளின் பெயர் மனதுள் மழை சாரலாய் தூறியது இன்பத்தை..எத்தனை பாந்தமான பெயர்..

    ஆம்...ஆசையாய் அவள் முகத்தை பார்த்து பார்த்து வைத்த பெயர்..."ஐந்தருவி"

    "வனம் தானோ எங்கள் வாழ்வு,
    நீ வரும் முன்பு?
    வரம் தானோ இந்த வாழ்வு,
    நீ வந்த பின்பு?
    ஒரு துளியே போதுமடி பெண்ணே
    உன் தாய் தவப் பயனடைய,
    நீயோ ஐந்தருவியாய் பொழிகிறாயே கண்ணே
    இத்தரணியே செழிய!!!"
     
    Last edited: Dec 23, 2010
    2 people like this.
    Loading...

  2. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    First welcome madam:thumbsup
     
  3. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    அடுத்த கதையா..அப்பாடா.தேங்க்ஸ் தேவா.ஐந்தருவி..பெயர் எங்க இருந்துதான் எல்லாரும் பிடிக்குரீன்களோ.
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காணமல் போய் இருந்த என் கண்மணியே
    வந்து தந்திட்டாய் இன்னொரு உணர்தல் தொடரே
    ஐந்தருவி ..அழகு மொழி
    ஐம்பொன்னாய் உன் கதை உவகை தந்திட
    வாழ்த்துகிறேன் நான்....
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு ப்ரியா,

    ஆரம்பம் அசத்தல்... அதிலும் அந்த முதல் பத்தி...

    'காலை நேரத்து பனிக்கு தான் எத்தனை வல்லமை..முகத்தில் பட்டவுடன், குழந்தையின் முத்தம் போல இப்படி இனிக்கிறதே?'

    எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது..... அச்சோ... நீதான் என் வெல்லக் கட்டி.. இந்தக் கதையும் அமர்க்களமாய் போக வாழ்த்துக்கள்.... :thumbsup

    ஒரு கதை முடிஞ்சா சொல்லணும்-ன்னு சொல்லி இருக்கேன் இல்ல... ஏன் சொல்லலே.... :rant:rant:rant:rant

    நான் அந்தக் கதையை போய் படிக்கறேன்... இன்னைக்கே....

    முடிஞ்சு ரொம்ப நாள் ஆகிடிச்சா என்ன ??? :hide::bonk
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அப்போ இன்னும் அதையே படிச்சு முடிக்கலையா:bonk:rant
    கர்ணா நீ வந்தாலும் வந்தே இந்த பொண்ணு ரொம்பவே மாறிடிச்சு பா.
    எதுக்கும் கொஞ்சம் சொல்லி வை
    "இது நல்லா(நல்லதுக்கு) இல்லேன்னு" :coffee
     
  7. YesBee

    YesBee Bronze IL'ite

    Messages:
    360
    Likes Received:
    26
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஜோரான ஆரம்பம்.:thumbsup

    வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். எப்படி உங்களுக்கு மட்டும் இது போல் புதுமையான பேரெல்லாம் தோன்றுகிறது ? பேருக்கு விளக்கம் சொல்ல அருமையான கவிதை வரி என ஆரம்பமே அசத்தலாக உள்ளது.
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    'காலை நேரத்து பனிக்கு தான் எத்தனை வல்லமை..முகத்தில் பட்டவுடன், குழந்தையின் முத்தம் போல இப்படி இனிக்கிறதே?

    இதுகூட நான் இன்னும் ஒன்றையும் சொன்னேன் என் பொண்ணு கிட்ட. அந்த பனி பெய்யும் காலை (5 மணிக்கு) ரேடியோவில் ஸ்லோகங்கள் கேட்டது இனிமையாய் இருந்தது, னு சொன்னேன் , அதுக்கு அவ, "ஹும்ம் , குப்புற படுத்து தூங்குவியா, அதை விட்டுட்டு " என்றாள் தேவா. கதை நல்லா இருக்கு பா
     
  9. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Ada...Ada...Ada...Aarambamey super deva...Aamaa...Indha names-lam engerundhu pidikura?? Kalakku deva :thumbsup :thumbsup :thumbsup
     
  10. vijeta

    vijeta Senior IL'ite

    Messages:
    102
    Likes Received:
    2
    Trophy Points:
    16
    Gender:
    Female
    hai,
    u start ur story very nicely and smoothly, the starting lines are very good.all the best!!!!!

    vijeta
     

Share This Page