1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணரவில்லையேல் உயிரில்லை....

Discussion in 'Posts in Regional Languages' started by natpudan, Jan 31, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உணரவில்லையேல் உயிரில்லை....

    மனைவியின் ஒரே உடன் பிறந்த தங்கையின் ஒரே மகன் சில தினங்களுக்கு முன்
    தற்கொலை செய்து கொண்டான். அந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
    மூன்றாமாண்டு என்ஜினீயரிங் மாணவன் அவன்.

    அவன் செய்தது கோழைத்தனம் என்றாலும் அவனை அந்நிலைக்கு தள்ளியதில்,
    பெற்றோருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என
    சமூகத்தில் நம் அனைவருக்கும் பொருப்பிருப்பதாகவே,
    தோன்றுகிறது எனக்கு.

    பெற்றோராய் குழந்தைகளின் விருப்பமறிந்து விரும்பியதை படிக்கச் செய்திருக்கலாம்.
    மகனாய் அவன் மனம் விட்டுப் பேசும் சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கலாம்.

    உறவினராய் நம் உறவுகளை அறிந்து அவர்களுடன் உறவாடி,
    வாழ்க்கையில் நம்பிக்கையைத் தந்திருக்கலாம்.

    நண்பர்களாய் இருந்து மனதில் ஏற்பட்ட காயத்தை பகிர்ந்து கொண்டு,
    அவனை நல் வழிப் படுத்தி இருக்கலாம்.

    ஆசிரியர்களாய் இருந்து கல்வி போதிப்பதை மட்டுமின்றி மாணவர்களுக்கு,
    உண்மையான வாழ்வின் அர்த்தத்தை போதித்திருக்கலாம்.

    இந்த இழப்பில் நாம் பாடம் கற்றுக்கொண்டதை மறுக்க இயலாது, மறக்கலாகாது.
    அவன் திரும்ப வரப் போவதில்லை ஆனாலும் நம் சுற்றத்தில் மீண்டும்,
    இதுபோல் ஒரு சம்பவம் நடக்காதிருக்க நாம் முயலுவோமே.....



    அவன் உணர மறந்து, நமக்கு உணர்த்துவது...

    மண்ணைத் துறந்து சென்றாயா - உன் வாழ்வை முடித்து;
    மண்ணைத் தூவிச் சென்றாயே - எங்கள் வாழ்வை அழித்து.
    விண்ணைத் தேடிச் சென்றாயா - உன் இன்பம் தனை அடைய;
    விண்ணைப் பார்க்கச் செய்தாயே - எங்கள் இன்பம் தனை அழித்து.

    பெற்றவர்கள் கடமையை உணர்த்தச் செய்தாயா?
    உற்றவர்களின் உறவை உணர வைக்கச் செய்தாயா?
    நட்பின் மகத்துவத்தை நடப்பில் உணர்த்தச் செய்தாயா?
    ஆசிரியர்களின் வழி நடத்தலை வழிப்படுத்த செய்தாயா?
    பிறப்பின் கடமையை உணராது, மடமைக்கு பலி ஆனாயே!!!

    ஒரு கோழையின் ஒரே தைரியமான செயலே உயிரைப் போக்கிக் கொள்வது,
    அத்தைரியத்தை எதிர்த்து போரிட்டு வாழ்வதில் காண்பிக்காமல் தோற்று ஓடிவிட்டாயே...

    உனை நினைத்து அழுவதா? இல்லை
    உன் கோழைத்தனத்தை நினைத்து கொதிப்பதா?
    வாழ்க்கை புரியாது புறமுதுகு காட்டி ஓடிய நீ - எங்கள்
    வாழ்வின் அர்த்தத்தையும் அல்லவா கொள்ளை கொண்டு சென்று விட்டாயடா...

    பெற்றவர்களே - உங்கள் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுங்கள்;
    குழந்தைகளே - உங்கள் பெற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசி விரும்புவதை செய்யுங்கள்;
    உற்றவர்களே - உங்கள் சுற்றத்தைப் போற்றி உறவுகளை மேம்படுத்துங்கள் நம் நன்மைக்காக;
    நண்பர்களே - நட்பின் மகத்துவம் உணர்ந்து ஒருவொருக்கொருவர் தோள் கொடுத்து தோழமை வளர்ப்பீர்;
    ஆசிரியர்களே - பாடம் சொல்லித் தருவதோடு வாழ்க்கைப் பாடத்தையும் நடத்தி நன்மை விளையச் செய்வீர்.

    வரும் எங்கள் பயணத்தில் உன் நல்ல நினைவுகளை மனதில் கொண்டு,
    இனி இதுபோல் ஓர் இழப்பை சந்திக்க வாய்ப்பில்லாதாக்க உறுதி கொள்கிறோம்....
    பெற்றவர் - உற்றவர்கள் - நண்பர்கள் - ஆசிரியர்கள்.
     
    Last edited: Jan 31, 2011
  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    en aazhntha anuthaabangal ungalukkum kudumbaththinarukkum.
    Ninaikkave nenjam nadungukirathu...Puthira sogam...mika kodumaiyaanathu...avanin thai thanthaikku en aazhntha prarthanaikal.
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nanbare,
    Padikkave romba kashtamaaga ulladhu indha nigazhvu..
    Ungal sisterin kudumbathaarkkum, ungalukkum en aazhndha anudhaabangal.

    Indhaa maadhiri seigai, nammai thirumppi paarkka seiginrana...guilty feeling odu..
    Naam katru konda paadam patri virivaaga ezhudhi irukkeenga..rombave correct.

    Communication gap jaasthi aagivittadhu namakku...social parenting is lost nu padichen...adhu unmai dhan..

    Idhe maadhiri oru nigazhvu engalin sondhaththil..last year nadandhadhu...ore paiyan, velaiyil join panna vendiya neram...peer pressure nu solraanga...manam vittu pesi irundhaal...thaduthu irukkalaame...

    sriniketan
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஐயோ என்ன கொடுமை இது.மகனை பறி கொடுத்த தாய் உள்ளம் என்ன பாடு படும்.மடியும் மட்டும் மகனின் நினைவு தாய்க்கு தீராது.காலம் உங்கள் அனைவரின் மனப்புண்ணை ஆற்றட்டும்.வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை நட்ஸ்.
     
  5. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Romba vedhanaiyaa irukkiradhu.

    My condolences, I dont have too many words to say anything else. Shocking.
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    இறந்தவரின் பெற்றோருக்காய் வருந்துகிறேன். எத்தனை ஆசைகள் அவர்கள் மனதினில் இருந்திருக்கும்..இப்படி செய்துவிட்டான்

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Natpudan,
    Padikkave romba kashtamaaga irunthathu....
    Ungal sisterin kudumbathaarkkum, ungalukkum en aazhndha anudhaabangal.

    yen thargolai seythukondan sollavillaiye?
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Natpudan..

    romba varuthama irukku.. maganai ilantha antha kudumbathukku en aalntha anuthaabangal..
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    இழப்பு கொடுமையானது...அதை எற்கும் மன வலிமையை இறைவன் அவர்களுக்கு அளிக்க வேண்டுகிறேன்...
     
  10. Priyaalagu

    Priyaalagu Silver IL'ite

    Messages:
    1,076
    Likes Received:
    15
    Trophy Points:
    75
    Gender:
    Female
    hello nats,

    Ungal manavien thankai kudubathinarukum ungal kudumbathinarukum enn aalntha anuthaabangal....


    I am very sorry to know abt this no words to say these kids now a days learn everything too early even to die:-(
     

Share This Page