1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உடல் எடை குறைய எளிய குறிப்புகள்

Discussion in 'Posts in Regional Languages' started by ramyasrini8, Oct 6, 2010.

  1. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    * மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம்.
    * இரண்டு தம்ளர் தண்ணீர் மற்றும் 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட்) சாப்பிடலாம்.
    * உவர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
    * கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.
    * எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.
    * பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.
     

    Attached Files:

    Loading...

  2. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

    இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

    எலுமிச்ச பழ சாற்றில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து பருகி வந்தால், உடல் இளைக்கும்.

    உடல் பருமன் குறைய, உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.

    பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வர, தடித்த உடம்பு குறையும்.

    வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் பெருக்கம் குறையும்; உடல் அழகு பெறும்.
     
  3. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    hi ramya

    thanks for the pdf file.:hiya:hiya

    regards,
    shankari:coffee
     
  4. gopinath

    gopinath Silver IL'ite

    Messages:
    456
    Likes Received:
    51
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ramya!!!

    office poravaga yeppadi ithayellam follow panna mudiyum??
    office poravagalukku suit aagura maathiri diet plan solluga plssss

    anbudan
    Gopinath
     
  5. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    1. உயர் வெல்லக் குறியீடு கொண்ட உணவை முற்றாக அகற்றவேண்டும் அல்லது மிகவும் குறைக்கவேண்டும். உயர் வெல்லக் குறியீடு கொண்ட உணவுவகைகள் (உயர் குறி  தாழ் குறி இறங்கு வரிசை) வெள்ளை அரிசி, வெள்ளைப் பாண், வெதுப்பிய உருளைக்கிழங்கு (ஜக்கெற் பொட்ரற்ரோ), அரிசிக்கேக்.

    2. தினந்தோறும் 30 நிமிட தேகப்பியாசம்: சேமிக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்த தினமும் 30 நிமிடம் நடந்தாலே, நிறைகுறைக்கும் பாதையின் ஆரம்பத்தில் நடக்கத் தொடங்கிவிடுவீர்கள். ஏதாவது சிறப்பான உடல் அப்பியாசங்களை தொடங்க உத்தேசித்தால் உங்கள் வைத்தியருடன் ஆலோசனை செய்யவும்.

    3. நிரம்பிய கொழுப்புகளைக்கொண்ட (உ-ம் சிவப்பு இறைச்சி, பேஸ்றீஸ், பாலுணவுகள்), மாற்றப்பட்ட கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகள் (மார்கறின்ஸ், மாற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள் (றிபைண்ட் வெயிற்ரபிள் ஒயில்), தயார் செய்யப்பட்ட உணவுகள் (புறோசெஸ் பூட்), இவை யாவும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைத் தோற்றுவிக்கின்றன. அதுவும் உயரளவு வெல்ல உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்னும் அதிகமாகிறது.

    4. நார்ச்சத்துணவுகளை கொண்ட முழு உணவுகளை உண்ணவேண்டும்: இவற்றை முழு உணவுகளாக உட்கொள்ளும் பொழுது, மேலதிகமான போசாக்குப் பொருட்கள் கிடைப்பதோடு உணவிலுள்ள வெல்லம் தாமதமாகவே குருதியில் கலக்கின்றது.

    5. தினமும் நிறையுணவு: தினமும் எமதுணவில் 55சதவீதம் மாப்பொருள் (வெல்லக் குறியீடு குறைந்தவை), 30 சதவீதம் கொழுப்பு ( நிரம்பிய கொழுப்பைத் தவிர்க்கவும்), 15 சதவீதம் புரதம் (இரத்த சிவப்பு இறைச்சி வகைகளைக் தவிர்க்கவும்) ஆகிய அளவுகளில் கலந்திருக்கவேண்டுமென அறிவுரை கூறப்படுகிறது.

    6. இயற்கையாக விளைந்த சேதன (ஓகானிக்) உணவுகள்: இயற்கையாக விளைந்த உணவுகளை (ஓகானிக்) முடிந்தவரை உண்ணவும். வியாபார ரீதியாக விளைவிக்கப்படும் உணவுகளில் போசாக்குப் பொருட்களின் அளவு குறைவாக காணப்படுவதோடு, நச்சுப் பொருட்களும், வேறு இரசாயனங்களும் காணப்படுகின்றன.

    7. சேமிப்புக் கலங்களிலுள்ள கொழுப்பை எரிக்கவும், இக்கலங்கள் ஏற்படுத்தும் குருதியில் உள்ள வெல்ல, இன்சுலின் உயர் அளவுகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளினின்று பாதுகாக்கவும் வேண்டிய குறிப்பிட்ட உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் ஏனைய போசாக்குப் பொருட்களாகியவற்றை உணவுக் குறைநிரப்பிகளாக எடுக்கவேண்டும். இது மீண்டும் உடல் நலம் பெறும் வேகத்தை அதிகப்படுத்துகின்றன.
     
  6. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் உண்ண வேண்டாம். போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும். வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.

    லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.

    ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக மீன் உணவுகளை சாப்பிடவும்.

    வறுத்த பொறித்த உணவுகளை* விட ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகமாக சமைத்துச்சாப்பிடவும்.
     

    Attached Files:

  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உடல் எடையைக் குறைக்க கூறிய குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளவை. பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.
     
  8. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    superb pdf file and good informations ramya!! thanks for such a nice informations........
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Ramya,

    Thanks for the information and the pdf file. :)
     
  10. Priyashan

    Priyashan New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Ramya,

    Thanks for the information and the pdf file. [​IMG][​IMG]
     

Share This Page