1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 3, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முக்கிய குறிப்பு:- #உங்ககுழந்தைகள்மீது #உங்களுக்கு_கொள்ளைப்பிரியமா.

    வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

    கீரை வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!

    ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக் கொடுங்கள்!

    உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???

    மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!

    தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக் கட்டாயப்படுத்துங்கள்!

    கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!

    உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???

    பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை, மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!

    ஃப்ரஷ்ஷான காய்கறிகளை, இறைச்சியை சமைக்கவும்!

    சீரகத்தண்ணீர், சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

    நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப் பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ! அன்றே நாம் நோய்யின் பிடியில் சிக்கிக் கொண்டோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.இன்றே! மீட்டெடுப்போம்! வாருங்கள்!
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நடப்பில் உள்ளது. நன்றி.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் அண்ணா, இப்பொழுது நிறைய பேர் மரச்செக்கு எண்ணை தான் உபயோகிக்கிறார்கள் :)...நானும் தான்...நன்றி அண்ணா...:)
     
    Thyagarajan likes this.

Share This Page