1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 9, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தன் மகன் சான்றோன் எனக்
    கேட்கும் பொழுது மட்டும் அல்ல
    பாராட்டி, சீராட்டி, பாலூட்டி
    வளர்த்தவளை சோறூட்டி
    கடைசி வரை காக்கும்
    போதும் தான்

    சருமம் சுருங்கி, சுவாசம் ஒடுங்கி,
    கண் வழி, இதயம் திறந்து அவள்
    கனிவை யாசிக்கையில்
    வம்பு பேசி வதைக்காமல்
    அன்பை பொழியும் போதும்தான்

    உணவு, உடை, வசதி என அனைத்திலும்
    நமக்கு செய்தது போக மீந்து இருப்பதை
    கொண்டு அவள் வாழ்வு கழித்தாள்
    வெகு உயர்வாக இல்லாவிடினும்,
    உளமார இருந்தாலே உச்சி
    குளிரும்போதும்தான்
     
    Loading...

  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni,

    Yes thaayir sirandha koyilum illai
    Thanthai sol mikka mandhiram illai .... enbaargal

    Adhan padi, neengal solliyulla vishayangalai follow pannuvathal mattumey
    Oru magan / magal thaaykku reciprocate seyyum total love and affection.

    Not only that it is our duty also.

    Thanks for the nice poem Veni.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நாம் எல்லோரும் மனதில்,
    கொள்ள வேண்டிய கருத்து.
    கவிதை வாயிலாக தாய் எனும் கோவிலின்,
    வாயிலுக்கு வழி காண்பித்ததற்கு நன்றி வேணி.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    arumayaana kavithai venimohan
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    veni ma!!!!!!!! arumayana karuththu!!!!!!:thumbsup
    innum padaiththidungal!!!!!!!:bowdown
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    anbu veni

    arumaiyaana karuthu. intha karuthu ilaiya thalaimuraigalin manathil padiyumaanal, ethir kaalathil old age home kku thevaiye illamal pogum. miga arumai veni.


    ganges
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    உங்கள் பின்னூட்டம் முதலில் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஆம் தோழி, நீங்கள் சொல்வது சரிதான். மழலையாய் இருந்த நம்மை மனிதன் ஆக்கும் வரை அவள் வாழ்வில் அனைத்தையும் நமக்காகவே செய்கிறார். அவளை நாம் பூஜிக்காவிடினும், அவள் நம்மிடம் எதையும் யாசிக்காமல், அவளை நாம் நேசிக்க வேண்டும்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    பேஷ், பேஷ், அருமையான பின்னூட்டம். எதுகையும், மோனையும் என்னமாய் விளையாடுகிறது. "தாய் எனும் கோவிலின், வாயிலுக்கு வழி" உண்மைதான் நண்பரே. அன்னை என்பவள் கோவில் என்று பலருக்குத் தெரிந்திருந்தாலும், வழி மாறி போகின்றனர். அப்படி பிள்ளைகளின் அன்னையோ, தன் மனதில் வழி மாறிப் போனாலும் வசந்தத்தின் மடியில் வாழ்க நீ வளமுடன் என்றுதான் ஆசிர்வதிக்கிறாள். என்ன செய்வது. அன்னை அல்லவா அவள்.....

    நல்ல பின்னூட்டம் கொடுத்த இனிய நண்பருக்கு நன்றிகள் பல பல
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Beyond words.... such beautiful lines.... i cannot explain in words.....


    வாழ்க்கைதான் நல்ல பள்ளி
    அனுபவம்தான் நல்ல ஆசிரியர்
    இயற்கைதான் நல்ல புத்தகம்
    தாய்தான் சிறந்த கோவில்
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றிகள் பல உங்கள் பின்னூட்டத்துக்கு ராம்
     

Share This Page